Tuesday, 23 April 2013

38 கோடி பேரிடம் "ஆதார்" நந்தன் நிலேகனி தகவல்


அடுத்த ஆண்டிற்குள், நாட்டின் மக்கள் தொகையில் பாதி பேருக்கு, "ஆதார்' அடையாள அட்டை வழங்கப்பட்டு விடும்' என, பிரத்யேக அடையாள அட்டை வழங்கும் ஆணையத்தின் தலைவர், நந்தன் நிலேகனி கூறினார்.

அமெரிக்க தலைநகர், வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, நிலேகனி கூறியதாவதுபல வித பயன்பாடுகளைக் கொண்ட, "ஆதார்' அடையாள அட்டை வழங்கும் பணி, ஐந்தாண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. இதுவரை, 38 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 38 கோடி என்பது, சில நாடுகளின் மொத்த மக்கள்தொகை.எங்கள் நாட்டில், அனைவருக்கும், ஆதார் அடையாள அட்டை வழங்கப்படும்.


நாள் ஒன்றுக்கு, 10 லட்சம் பேருக்கு, இந்த அட்டை வழங்கி வருகிறோம்.இந்த ஆண்டிற்குள், 40 கோடி பேருக்கு அட்டை வழங்க முடிவு செய்துள்ளோம். அடுத்த ஆண்டில், ஆதார் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை, 60 கோடியாக இருக்கும். இதன் மூலம், நாட்டின் மக்கள் தொகையில் பாதி பேருக்கு, ஆதார் அட்டை வழங்கப்பட்டிருக்கும்.இந்த திட்டம் துவக்கப்பட்ட காலத்தில் இருந்ததை விட, இப்போது தொழில்நுட்பம் மேம்பாடு அடைந்துள்ளது. சிறிய கருவிகள் துணை கொண்டு, பெரிய செயல்களை செய்ய முடிகிறது. ஆதார் அடையாள அட்டை மூலம், அரசின் மானியங்கள், பயனாளிகளுக்கு சென்றடைகின்றன.நாங்கள் பின்பற்றும் இந்த தொழில்நுட்பம் மூலம், உலக மக்கள் தொகைக்கே, ஆதார் அடையாள அட்டை வழங்க முடியும்.

No comments:

Post a Comment