Wednesday 8 October 2014

கப்பல் படையில் நர்சிங் படிப்புடன் பணிவாய்ப்பு

இந்திய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் கேந்திரமான படைகளுள் ஒன்றாக இந்திய கப்பல் படை திகழ்கிறது. நமது கப்பல் படை தனது சிறந்த பயிற்சிகளுக்காகவும், நவீனமயபாதுகாப்பு உத்திகளுக்காகவும், அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய படை வீரர்களைக் கொண்டதற்காகவும் சர்வதேச அளவில் அறியப்படுகிறது. இவ்வளவு பிரசித்தி பெற்ற இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள நர்சிங், மிட்வைபரி ஆகிய படிப்புகளுடன் கூடிய பதவிகளைப் பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது: 01.09.1990க்குப் பின்னரும் 31.07.1998க்கு முன்னரும் பிறந்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: பிளஸ்டூ அளவிலான படிப்பை இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களுடன் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். இந்த ஆண்டு இறுதித் தேர்வை எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் இந்த பி.எஸ்.சி., நர்சிங்/ஜெனரல் நர்சிங்/மிட்வைபரி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். 
தேர்ச்சி முறை: 90 கேள்விகளைக் கொண்ட அப்ஜெக்டிவ் வகை எழுத்துத் தேர்வு ஜெனரல் இங்கிலீஷ், உயிரியல், இயற்பியல், வேதியியல், ஜெனரல் இன்டலிஜென்ஸ் ஆகிய பிரிவுகளிலிருந்து நடத்தப்படும். இதன் பின்னர் நேர்காணல் மற்றும் மருத்துவத் தகுதித் தேர்வு இருக்கும். எழுத்துத் தேர்வை திருவனந்தபுரம், கொச்சி அல்லது கண்னுார் ஆகிய மையங்கள் ஏதாவது ஒன்றில் எதிர்கொள்ளலாம். எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று தெரிகிறது.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பங்களை முழுமையாக நிரப்பி பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
MoD (Army), 
Director General of Medical Services (Army)/
DGMS-4B, AG's Branch, Room No 45, 
'L' Block Hutments, New Delhi- 110 001 
விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.11.2014
இணையதள முகவரி: <http://www.indianarmy.gov.in/Index.aspx?flag=AM1y0fBCKTCQyblRVcjeqQ>

No comments:

Post a Comment