Tuesday 22 October 2013

ஜவகர்லால் நேரு


ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 - மே 27,1964) இந்தியாவின் முதல் பிரதமர் (தலைமை அமைச்சர்). இவர் பண்டிட் நேரு, பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்பெற்றார்.

இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். 1964, மே 27 இல், காலமாகும் வரை இப்பதவியை வகித்து வந்தார்.

இந்தியாவின் முதல் பிரதம மந்திரி

நேரு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக 1945ம் ஆண்டு சூன் மாதம் 15ம் தேதி கைது செய்யப்பட்டார். அதிகாரத்தை மாற்றித்தரும் திட்டத்துடன் இங்கிலாந்து அமைச்சரக தூதுக்குழு வந்ததால் நேருவும் அவரின் சகாக்களும் விடுவிக்கப்பட்டனர்.

நேரு இடைக்கால அரசாங்கத்தை தலைமையேற்று நடத்தி செல்லும்போது மத வன்முறை, அரசியல் சீரழிவு மற்றும் எதிர்க் கட்சியான முகமது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லீம் லீக், முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான்என்ற தனி நாடு கோரியது ஆகியவற்றால் உண்டான கலவரங்கள் நேருவின் ஆற்றலை முடக்கின. சமாதான முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால் நேரு தயக்கத்துடன் வேறு வழியின்றி 1947 ஜுன் 3 -இல் இங்கிலாந்து வெளியிட்ட திட்டத்தின்படி இந்தியாவின் பிரிவினைக்கு ஆதரவளித்தார். இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக, 15 ஆகஸ்ட் பதவி ஏற்றார்.

பொருளாதாரக் கொள்கைகள்

நேரு நவீன புதுப்பிக்கப்பட்ட இந்திய முறைப்படியான மாநிலத்திட்டம் மற்றும் பொருளாதாரத்தின் மேல் கட்டுப்பாடு ஆகியவற்றை அறிமுகப்படுத்த ஆயத்தமானார். இந்தியாவின் திட்டக் குழுவை உருவாக்கி முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை 1951 இல் வரைந்தார். அது அரசாங்கத்தின் தொழிற்சாலைகளின் முதலீடு மற்றும் விவசாயத்தை வரையறுத்தது. தொழில்களை அதிகப்படுத்துதல், வருமான வரிகள் மூலம் கலப்புப் பொருளாதாரத்தை உருவாக்கி அதன் மூலம் பொதுமக்கள் நன்மைக்கு சேவை செய்யும் சில நுணுக்கமான தொழிற்சாலைகளான சுரங்கம், மின்சாரம் மற்றும் கனரக இயந்திரங்கள் தொழிற் சாலைகள் தனியாரிடம் போவதை தடுத்து அரசாங்கமே நடத்த திட்டமிட்டார். நேரு நில மறு பங்கீட்டை முதன்மைபடுத்தினார். விவசாயக் கிணறுகள், அணைகள் கட்டும் திட்டத்தை அமல்படுத்தினார், மேலும் விவசாய உற்பத்தியைப் பெருக்க உரங்கள் உபயோகிக்கும் முறையை பரப்பினார். தொடர்ச்சியான சமுதாய முன்னேற்றத் திட்டங்களை குடிசைத்தொழில்களை பரப்பும் நோக்கத்துடன் செயல்படுத்தினார். பெரிய அணைகளை (இவற்றை "இந்தியாவின் புதுக் கோவில்கள்" என்று அழைத்தார்) கட்ட ஊக்கப்படுத்தியதோடு அல்லாமல் விவசாயம், நீர் மின்சாரம் ஆகியவற்றை பெரிதும் ஆதரித்தார். அணுஆற்றலில் இந்தியா சிறக்கவும் திட்டங்களை செயல்படுத்தினார்.

கல்வி மற்றும் சமூக சீர்திருத்தம்

இந்தியாவின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில்தான் இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம் இருக்கிறது என்று நம்பி அதன் அவசியத்தை உணர்ந்து நேரு அதில் மிகவும் அக்கறை காட்டினார். அவரது அரசாங்கம் உயர் கல்வி நிறுவனங்களை அமைத்து கவனித்து வந்தது. அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய மேலாண்மை கழகங்கள், தேசிய தொழில்நுட்ப கழகங்கள் ஆகியவை அவற்றுள் சில. 

நேரு தன் ஐந்தாண்டுத் திட்டத்தில் எல்லா இந்தியக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயத் தொடக்கக் கல்வி தரப்பட உத்தரவாதம் அளித்து ஆயிரக்கணக்கான பள்ளிகளைக் கட்டினார். இந்த நோக்கத்திற்காக நேரு பெரிய அளவில் கிராமப்புற திட்டங்களை உருவாக்கி மேற்பார்வை செய்தார். சத்துணவுக்குறைவை எதிர்த்துப் போராட குழந்தைகளுக்கு இலவசப் பால் மற்றும் மதிய உணவு அளிக்கும் திட்டத்தையும் அமலாக்கினார். முதியோர் கல்வி மையங்கள், தொழில் கல்விக் கூடங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கூடங்கள் முக்கியமாக கிராமப்புறங்களில் முதியோர்களுக்காக அமைக்கப்பட்டன.

இந்திய நாடாளுமன்றம், நேருவின் அறிவுரைப்படி இந்து மதச் சட்டத்தில், ஜாதி வேறுபாடுகளை குற்றமாக பாவித்தல், பெண்களுக்கான சமூக சுதந்திரம் மற்றும் சட்ட உரிமைகளை அதிக படுத்துதல் போன்ற மாற்றங்களை உருவாக்கியது.பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைசாதியினர் அனுபவித்த சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மேல் நிலையில் உள்ளவர்களுடன் அவர்கள் போட்டியிடும்போது ஏற்படும் குறைபாடுகளை களையும் வகையில் அரசாங்கப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் அவர்களுக்காக இட ஒதுக்கீட்டினை ஏற்படுத்தினார். மதச்சார்பின்மை, மதநல்லிணக்கம் போன்றவற்றை ஆதரித்த நேரு அரசில் சிறுபான்மையினர் அதிகளவில் பங்குபெறச்செய்தார்.

நினைவு

• இந்தியா முழுவதும் நிறையப் பொதுநிறுவனங்கள் மற்றும் நினைவகங்கள் நேருவின் நினைவிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
• ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் பெருமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று.
• மும்பை நகரத்தின் அருகில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகம்.
• டில்லியில் நேருவின் வசிப்பிடம், நேரு நினைவுக் கூடம் மற்றும் நூலகமாக பாதுகாக்கப்பட்டுள்ளது.
• நேரு குடும்பத்தாரின் ஆனந்த பவன் மற்றும் சுராஜ் பவன் ஆகியவைகளும் நேரு மற்றும் அவர் குடும்பத்தாரின் சட்டபூர்வமான நினைவகமாக இருக்கிறது.

எழுதிய நூல்கள்

நேரு சிறந்த ஆங்கில எழுத்தாளராக திகழ்ந்தார். அவர் எழுதிய நூல்கள் " தி டிஸ்கவரி ஆஹ்ப் இந்தியா " , "க்ளிம்ப்ஸ் ஆப் வேர்ல்ட் ஹிஸ்டரி" , அவருடைய " சுயசரிதை " மற்றும் " டுவார்ட்ஸ் ப்ரீடம் ".

No comments:

Post a Comment