Friday 3 May 2013

வெளியானது சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவு கோவை மாணவர்கள் ஐந்து பேர்வெற்றி


சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், கோவை இலவச உயர்கல்வி மையத்தில் பயிற்சி பெற்ற ஐந்து பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கோவை நஞ்சப்பா ரோட்டில் அமைந்துள்ளது கோவை உயர்கல்வி மையம். மாநகராட்சி மற்றும் அரசு கலை கல்லூரி சார்பில் நடத்தப்படும் இம்மையத்தில், அரசு கலை கல்லூரி பேராசிரியர் கனகராஜ் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார்.சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இம்மையத்தில் பயிற்சி பெற்ற திருப்பூரை சேர்ந்த கிருஷ்ணகுமார்(460 ரேங்க்), அபிநயநிஷாந்தினி(717) டில்லியை சேர்ந்த மனோஜ்(771), சென்னையை சேர்ந்த சுரேஷ்குமார்(343), ஈரோட்டை சேர்ந்த கார்த்திகேயன் (789), உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.

* வெற்றியின் ரகசியம்!சாதனை மாணவ,மாணவியர் கூறியதாவது:தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. உயர்கல்வி மையத்தில், பேராசிரியர் கனகராஜ் அளித்த பயிற்சி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், கடினமாக உழைத்தோம். தினமும் 10 மணி நேரம் வரை படிப்பதை வழக்கமாக கொண்டோம். "டிவி', "சினிமா' பார்க்கும் நேரத்தை குறைத்துக் கொண்டோம். தினமும் செய்தி சேனல்கள் மற்றும் நாளிதழ்கள் படிப்பதை வழக்கமாக்கினோம். பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு பக்கபலமாக அமைந்தது. கஷ்டப்பட்டு படிப்பதை விட, இஷ்டப்பட்டு படிக்க வேண்டும். தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடா முயற்சி கொண்டு செயல்பட்டால் சிவில் சர்வீசஸ் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

கோவை உயர்கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கனகராஜ் கூறுகையில், ""சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவோருக்கு, இம்மையத்தில் இலவச பயிற்சி அளித்து வருகிறோம். ஆரம்ப தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இவ்வாண்டு முதல், நேர்காணல் பயிற்சியை, தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் மற்றும் டில்லி உள்ளிட்ட பகுதிகளிலும் வழங்குகிறோம். கோவை மாநகராட்சிக்கும், அரசு கலை கல்லூரிக்கும், பயிற்சி பெறும் மாணவர்கள் சார்பில் நன்றி,'' என்றார்.

No comments:

Post a Comment