Wednesday 1 May 2013

ஊழல் அதிகாரிகளின் முறைகேடான சொத்தை பறிமுதல் செய்ய ஒப்புதல்


ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அரசு ஊழியர்களின், சட்டத்திற்கு புறம்பான சொத்தை பறிமுதல் செய்யும் வகையில், ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.


இதன் முக்கிய அம்சங்கள்


* ஊழல் முறைகேட்டில் சிக்கிய ஊழியர்கள், சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமித்துள்ள சொத்துக்களை பறிமுதல் செய்வது, ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் ஓய்வு பெற்றாலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்வது.


* மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை ஒழிக்க வகை செய்யும் மசோதாவில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. மாவட்ட அளவிலான கண்காணிப்பு கமிட்டியில் பெண்களை உறுப்பினர்களாக கட்டாயம் நியமிக்க வகை செய்வது. மாநில, தேசிய அளவில் சர்வே நடத்துவது.


* 294 நகரங்களில், 839 எப்.எம்., நிலையங்களை தனியார் அமைப்பதற்கு ஏலம் விட ஒப்புதல் அளிக்கப்பட்டது.


* மத்திய துணை ராணுவ படைகளை நவீன மயமாக்கவும், அவர்களின் பாதுகாப்புக்கு தேவையான நவீன ரக ஆயுதங்களை வாங்க, 11 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது.


* சர்ச்சைக்குரிய திருமண சட்டங்கள் திருத்த மசோதாவை, அமைச்சர்கள் குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. 

No comments:

Post a Comment