Thursday 2 May 2013

"தமிழக முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் ரூ.540 கோடி இழப்பீடு”


"தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், இதுவரை, 540 கோடி ரூபாய் இழப்பீடு ஈடு செய்யப்பட்டுள்ளது,'' என, யுனைடெட் இந்தியா இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர், மிலிந்த் காரத் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:

இந்தியாவில், பொது காப்பீட்டு துறை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. 2012-13ம் நிதியாண்டில், 527 கோடி ரூபாயை நிகர லாபமாக, நிறுவனம் ஈட்டியுள்ளது. இது, 2011-12ம் நிதியாண்டை (387 கோடி ரூபாய்) விட, 36 சதவீதம் அதிகம்.

இதே காலத்தில், மொத்த பிரிமியம் வருவாய், 13.28 சதவீதம் உயர்ந்து, 8,179 கோடியிலிருந்து, 9,266 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. முதலீட்டு வருவாய், 1,600 கோடியிலிருந்து, 1,777 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 

கடந்த நிதியாண்டில், மோட்டார் வாகனம், சுகாதாரம், தீ ஆகிய துறைகளில் இருந்து, அதிகளவில் வருவாய் கிடைத்துள்ளது. தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மூலம், இதுவரை, 600 கோடி ரூபாய் பிரிமியம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், 2.20 லட்சம் பேருக்கு, 540 கோடி ரூபாய் இழப்பீடு ஈடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்த, தமிழக அரசு ஊழியர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக, 180 கோடி ரூபாய் பிரீமியம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 30 ஆயிரம் @பருக்கு, இதுவரை, 128 கோடி ரூபாய் இழப்பீடு ஈடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment