Saturday 31 August 2013

Right to Service Act: சேவை உரிமை சட்டம்


இந்த சட்டத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? 

அரசு அலுவலங்களில் ஒரு வேலையை முடிக்க ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் இழுத்தடிப்பதை தடுப்பதற்காக கொண்டு வரப்படதே இந்த சட்டம். 

இதன் மூலம் லஞ்சம் வாங்குவதற்காகவே வேலைகளை இழுத்தடிக்கும் முறை அரசு அலுவலங்களில் பெரும்பாலும் தடுக்கப்படும். 

ஒரு அதிகாரி குறிப்பிட்ட காலத்தில் தன வேலையை முடிக்கவில்லை என்றால் அவருக்கு அவர் விரையம் செய்த நாட்களுக்கு ஏற்றாற்போல் அபராதம் விதிக்க இந்த சட்டம் வழி செய்கிறது. 

ரேஷன் கார்டில் பெயர் மாற்றம் செய்வதற்கு கூட லஞ்சம் குடுக்கவேண்டிய நிலை இன்று தமிழகமெங்கும் நிலவுகிறது. சேவை உரிமை சட்டத்தின் மூலம் விரைவாகவும் லஞ்சம் குடுக்காமலும் நம் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

இந்த சட்டம் கேரளா, பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல மாநிலங்களில் இந்த சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என தெரிகிறது. தமிழகத்தில் இந்த சட்டத்தை நிறைவேற்றக்கோரி கேட்கவும் சட்டசபையில் இது குறித்து கேள்வி எழுப்பவும் சரியான உறுப்பினர்களை நாம் தேர்ந்தெடுக்கவில்லை. ஆகையால் இந்த சட்டத்தை இயற்ற எந்த ஒரு முயற்சியும் இங்கு எடுக்கப்படவில்லை. குழாயடி சண்டை போடுவதற்கும் தலைவர்கள் துதி பாடுவதர்க்குமே இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது.

முதல் முயற்சியாக தமிழக லோக்சத்தா கட்சியும் சமூக ஆர்வலர்களும் இணைந்து இதற்கான முயற்சிகளை துவங்கி உள்ளார்கள். பொது மக்களின் ஆதரவு இருக்குமானால் இந்த சட்டம் தமிழகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் துளியும் சந்தேகமே இல்லை.

No comments:

Post a Comment