மாநகர, மாவட்ட காவல் துறை சார்பில், தமிழ்நாடு சிறப்பு இளைஞர் படைக்கு, உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு கோவையில் வரும் 10-ஆம் தேதி ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
மாவட்ட காவல் துறைக்கான எழுத்துத் தேர்வு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.
எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள், ஒரு மணி நேரம் முன்னதாக தேர்வு நடைபெறும் மையத்திற்கு வர வேண்டும். எழுத்துத் தேர்வில் கலந்து கொள்வதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர் மற்றும் பதிவு எண்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழும இணைய தளமானwww.tnusrp.tn.gov.in மற்றும் காவல்துறை இணைய தளமானwww.tnpolice.gov.in ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்களுக்கான அழைப்புக் கடிதங்கள், தபால் துறை மூலமாக அனுப்பப்பட்டுள்ளன.
இணைய தளத்தில் பெயர் இருந்தும், அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள், கோவை மாநகர, மாவட்ட காவல் துறை அலுவலகங்களில் நவம்பர் 9-ஆம் தேதி மாலை 5.30 மணி வரை நேரில் சென்று அழைப்புக் கடிதத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
காவல்துறை அலுவலகங்களில் வந்து அழைப்புக் கடிதத்தினை பெற முடியாத விண்ணப்பதாரர்கள், இணைய தளத்தில் தேர்வு மைய விபரங்களை அறிந்து கொண்டு, எழுத்துத் தேர்வு நடைபெறும் மையத்தில் தேர்வு விண்ணப்ப நகல், சான்றிதழ்களை காட்டி, தேர்வு மைய அதிகாரியிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment