Monday, 18 November 2013

6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்


தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக கிரன் குர்ராலா நியமிக்கப்பட்டுள்ளார். அவரோடு சேர்த்து மொத்தம் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட உத்தரவில் (பழைய பதவி அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது):

ஜி. பிரகாஷ் _ கைத்தறி மற்றும் ஜவுளித்துறையின் இயக்குநர் (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர்)

பி.முத்துவீரன் _ வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் (கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இயக்குநர்)

சி.சமயமூர்த்தி _ ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் இணை செயலாளர் (திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்தவர்)

ஹனீஷ் சாப்ரா _ தொழில்துறை துணைச்செயலாளர் (விவசாயத் துறை கூடுதல் செயலாளர்)

கிரன் குர்ராலா _ மதுரை மாநகராட்சி ஆணையர் (சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர்)

ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் _ சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆட்சியர் (மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர்)

No comments:

Post a Comment