பத்தாம் வகுப்பு படித்தோருக்கு கொல்கத்தா ரயில்வேயில் வேலைவாய்ப்பு இருக்கிறது.
கொல்கத்தா ரயில்வே ரெக்ரூட்மெண்ட் செல் போர்ட்டர், கலாசி உள்ளிட்ட 2830 பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பணியிடங்கள்: 2830
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு அல்லது ஐடிஐ
வயது வரம்பு: 18-33 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசின் வயது வரம்புச் சலுகையும் பின்பற்றப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: Senior Personnel Officer (Recruitment), Railway Recruitment Cell, Eastern Railway என்ற முகவரிக்கு கொல்கத்தாவில் மாற்றத்தக்க 100 ரூபாய்க்கான வரையோலையை விண்ணப்பப்படிவத்துடன் இணைக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர்/ஊனமுற்றோருக்கு கட்டண விலக்கும் உண்டு. சுய கையொப்பம் இட்ட உரிய சான்றிதழ் நகல்களுடன் Senior Personnel Officer (Recruitment), Railway Recruitment Cell, Eastern Railway, 56, C.R.Avenue, RITES Building, 1st Floor, Kolkata-700 012 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். உரையின் மேல் Application for Recruitment in Pay Band-I Rs.5,200-20,200/- with GP Rs.1,800/- Eastern Railway எனக் குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 06/12/2013 க்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: http://www.rrcer.com/
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் செயல்திறன் தேர்வு.
No comments:
Post a Comment