Monday, 25 November 2013

ஐ.பி.பி.எஸ்.,சின் அதிகாரி தேர்வு அறிவிப்பு


பொதுத்துறை வங்கிகளின் கிளரிகல் மற்றும் அதிகாரி பணி இடங்கள் ஐ.பி.பி.எஸ்., அமைப்பினால் பொது எழுத்துத் தேர்வு மற்றும் பொது நேர்காணல் முறைகளில் நிரப்பப்பட்டு வருவது நாம் அறிந்ததே. பொதுத்துறை வங்கிகளிலுள்ள சிறப்பு அதிகாரிகள் பதவிகளை நிரப்புவதற்கான பொது எழுத்துத் தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பு வந்துள்ளது.

பிரிவுகள்: ஐ.பி.பி.எஸ், அமைப்பின் சார்பாக நடத்தப்படும் இந்தத் தேர்வு வாயிலாக ஐ.டி.,ஆபிசர், அக்ரிகல்சுரல் பீல்டு ஆபிசர், ராஜ்பாஷா அதிகாரி, சட்ட அதிகாரி, எச்.ஆர்., அதிகாரி, மார்கெடிங் ஆபிசர், சார்டர்டு அக்கவுண்டண்டு போன்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

வயது: 20 வயது முதல் 35 வரை இருக்கலாம். விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி வயதில் மாற்றம் உண்டு.

தகுதி: இன்ஜினியரிங் பட்டப் படிப்பு, அக்ரிகல்சர் பிரிவில் பட்டப் படிப்பு, இந்தியில் பட்டம், எம்.பி.எ., சி.ஏ., என்று விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி சிறப்புத் தகுதி தேவைப்படும். இணையதளத்தில் விபரங்கள் அறியவும்.

தேர்வு மையங்கள்: ஐ.பி.பி.எஸ்., நடத்தும் இந்த பொது எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மையங்களிலும், புதுச்சேரி உள்ளிட்ட இதர மையங்களிலும் நடைபெறும். 

விண்ணப்பிக்க கட்டணம்: ஐ.பி.பி.எஸ்.,சின் இந்த எழுத்துத் தேர்வை எதிர்கொள்ள ரூ.600/-ஐ தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் 14.12.2013க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment