Saturday 28 September 2013

சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பம்

கோவை அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில், முதனிலை தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வுப்பயிற்சி மையத்தில், முதல்நிலை தேர்வு பயிற்சிக்கு, மாணவ மாணவியரை தேர்வு செய்ய, நவ., 10ல் நுழைவுத்தேர்வு நடக்கிறது. கல்வி,வயது, ஜாதி மற்றும் இருப்பிடச்சான்று நகல்களுடன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலரிடம் சமர்பித்து, விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி, ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்பு அல்லது பி.இ., - எம்.பி.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,- பி.எஸ்.ஸி., அக்ரி., மற்றும் பி.வி.எஸ்.ஸி, மற்றும் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகள் அனைத்தும். வரும் 2014 ஆக., 1 நிலவரப்படி, குறைந்தபட்ச வயது வரம்பு 21; அதிகபட்ச வயது 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் மற்றும் அருந்ததியர் மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 3 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்படுகிறது. 

மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை விலக்கு அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற தமிழகத்தைச்சேர்ந்த மாணவ மாணவியர் மட்டுமே தகுதியுடையவர்கள். விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரிடம் , பூர்த்தி செய்து அக்., 15க்குள் சமர்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment