Monday 29 April 2013

தாய் திட்டம்





தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (தாய்) அமலில் உள்ளது. இத்திட்டம், .தி.மு.., ஆட்சிக்கு வந்த பின், 2011-12ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் உள்ள, 79 ஆயிரத்து 394 சிறு கிராமங்களில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.பாதுகாக்கப்பட்ட குடிநீர், தரமான கல்வி, அனைத்து பருவ நிலைக்கும் ஏற்றாற்போல் சாலைகள், தெருவிளக்கு, சுடுகாடுகளுக்கு சுற்றுச்சுவர், காங்கிரீட் சாலை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகள், தாய் திட்டத்தில் செயல்படுத்தப்படுகின்றன.இவை தவிர, அங்கன்வாடி மையம், பொதுவினியோகக் கூடம், சுயஉதவிக் குழுக் கட்டடம், கதிரடிக்கும் களம், விளையாட்டு மைதானம் அமைத்தல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

No comments:

Post a Comment