Monday, 23 June 2014

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய பருத்தி கழகத்தில் பணி

மத்திய ஜவுளித்துறையின் கீழ் நவிமும்பையில் செயல்பட்டு வரும் இந்திய பருத்தி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை தற்கால அடிப்படையில் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technical Consultant (ERP)
காலியிடம்: 01
சம்பம்: மாதம் ரூ.40,000 - 50,000
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:  Computer Science, Information Technology துறையில் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது எம்சி.ஏ முடித்திருக்க வேண்டும்.
பணி: Zonal Techno Functional ERP Co-ordinators
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 35,000
கல்வித்தகுதி: IT,Computer Science துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிசிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, மதிப்பெண், பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.cotcorp.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager (HRD), The Cotton Corporation of India Ltd, Kapas Bhavan, Plot No: 3A, Sector - 10, C.B.D.Belapur, Navi-Mumbai-400614
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.06.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cotcorp.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment