மக்களவை Lok Sabha or House of People
மக்களவை அல்லது லோக்சபா இந்திய பாராளுமன்றத்தின் கீழ் அவை ஆகும். இந்த அவையின் உறுப்பினர்கள் மக்களால் நேரடித் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் ஆகும்.
உறுப்பினராவதற்கான தகுதிகள் (Qualification of Members)
* இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
* 25 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
* நல்ல மனநிலையில் மற்றும் கடனாளியாக இல்லாதிருத்தல், குற்றமற்ற (Criminal) வழக்குகள் அவர் மேல் இல்லாதிருத்தல் வேண்டும்.
தனித்தொகுதி: Reserve Constituency
* உறுப்பினர்கள் தனித்தொகுதிகளில் போட்டியிட ஆதிதிராவிடர் அல்லது பழங்குடி வகுப்பினராக இருந்தால் மட்டுமே தனித்தொகுதியில் போட்டியிட முடியும்.
பொதுத்தொகுதி - (General Constituency)
* பொதுத்தொகுதியில் 25 வயது பூர்த்தி செய்த இந்திய குடிமகன் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.
* மக்களவை ஆண்டுக்கு மூன்று முறை கூட்டப்படும்
01. நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் Budget Session - பிப்ரவரி - மே
02. மழைக்காலக் கூட்டத்தொடர் Monsoon Session - ஜூலை - டிசம்பர்
03. குளிர்கால கூட்டத்தொடர் - Winter Session - நவம்பர் - டிசம்பர்
மக்களவை (Lok Sabha) (ஷரத்து 81)
* அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 550 +2 = 552. இதில் 530 உறுப்பினர்கள் மாநிலங்களில் இருந்தும் 20 உறுப்பினர்கள் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
* ஷரத்து 331ன் பிடி ஆங்கில இந்திய சமூகத்தைச் சார்ந்த 2 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.
* மக்களவை தேர்தல் முறை நில அடிப்படையிலான தொகுதிகள்
* மக்களவை உறுப்பினர்கள் மாநிலங்களில் மற்றும் யூனியன் பகுதிகளில் நிலபரப்பை அடிப்படையாகக் கொண்ட தொகுதிகளில் உள்ள 18 வயது பூர்த்தியான குடிமக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
* ஒவ்வொரு மாநிலமும் நில அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டு மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலங்களின் தொகுதிகளுக்கு இடையேயும் மக்கள் தொகை விகிதாச்சாரம் சீராக இருக்குமாறு பிரிக்கப்பட்டுள்ளது.
* ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பின்பும் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ரவாறு தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.
அதன் அடிப்பையில் 1952, 1962, 1972, 2002 மறு சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டன.
மக்களவை சபாநாயகர் - Lok Sabha Speaker
அரசியலமைப்பின் ஷரத்து 93ன்படி மக்களவைக்கு சபாநாயகர் ஒருவர் இருக்க வேண்டும். அவர் மக்களவை உறுப்பினர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
அவரது இடம் காலியானால் உடனடியாக வேறொரு உறுப்பினரை சபாநாயகராக தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான தேர்தல் தேதியை குடியரசுத்தலைவர் அறிவிக்கிறார்.
பொதுவாக சபாநாயகரின் பதவி மக்களவை பதவிக்காலம் முடியும்வரை தொடரும்.
சபாநாயகரின் அதிகாரம் மற்றும் பணிகள்:
மக்களவையின் தலைவராகவலும் அதன் பிரதிநிதியாகவும் திகழ்கிறார்.
மக்களவையின் உறுப்பினர்களின் அதிகாரம் மற்றும் சிறப்புரிமைகள், ஒட்டுமொத்த அவை மற்றும் அதன் குழுக்கள் அனைத்திற்கும் பாதுகாவலராகத் திகழ்கிறார்.
அவையின் தலைமை பேச்சாளரான சபாநாயகரே அவையில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அவரின் முடிவே இறுதியானது.
அவையின் பொறுப்பாளரான சபாநாயகருக்கு உயர்ந்த மரியாதையும், கெளரவமும், அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
மக்களவையில் சபாநாயகர் மூன்றுவிதமான அதிகாரங்களையும் பெற்றுள்ளார்.
01. அவையின் நடவடிக்கைகளில் சமவாக்கு ஏற்படும்போது சபாநாயகர் தனது வாக்கை செலுத்தி தேக்க நிலையை நீக்குவார்.
02. அவையில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்களில் எவை பண மசோதா (அ) பண மசோதா அல்ல என சபாநாயகரே முடிவு செய்து குடியரசுத் தலைவரின் முன் அனுமதிக்கு அனுப்புவார்.
03. 10வது அட்டவணையில் உள்ளவாறு ஒரு உறுப்பினர் தகுதி இழப்பு பற்றி சபாநாயகர் முடிவு செய்வார்.
துணை சபாநாயகர் (Deputy Speaker of Loksabha)
சபாநாயகர் போன்று துணை சபாநாயகர் மக்களவை உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
சபாநாயகர் தேர்வுக்குப் பின்பு துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும். இத்தேர்தலுக்கான தேதியை சபாநாயகர் அறிவிப்பார்.
எப்பொழுதும் எல்லாம் துணை சபாநாயகர் பதவி காலியாகிறதோ அப்போது மக்களவை வேறொரு உறுப்பினரை துணை சபாநாயகராக நியமிக்கிறது.
சபாநாயகர் பதவி காலியாகும்போது துணை சபாநாயகர் அப்பதவியை வகிக்கிறார் அப்போது சபாநாயகரின் அனைத்து அதிகாரங்களையும் பெறுகிறார்.
மேலும் இச்சமயத்தில் நடைபெறும் இரண்டு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமையேற்கிறார். (சபாநாயகர் இல்லாத போது)
துணை சபாநாயகர் சபாநாயகருக்கு அடுத்த நிலையில் உள்ளவர். இவர் மக்களவைக்கு நேரடி பொறுப்பாளர் ஆவார்.
தற்காலிக சபாநாயகர் - Pro-tem Speaker
அரசியலமைப்பின்படி சபாநாயகரின் பதவிக்காலமானது மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல் கூட்டத்தின் முடிவடைகிறது.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவையின் உறுப்பினர்களில் வயதில் மூத்த உறுப்பினரை தற்காலிக சபாநாயகராக குடியரசுத் தலைவர் நியமிப்பது மரபாக பின்பற்றப்படுகிறது. மேலும் அவருக்கான பதவி பிரமானத்தையும் குடியரசுத் தலைவரே செய்து வைக்கிறார்.
சபாநாயகருக்கு உரிய அனைத்து அதிகாரங்களும் இவருக்கு உண்டு. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவையின் முதல் கூட்டத்தை வழி நடத்துவார்.
இவரின் முக்கிய கடமை புதிய உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தல் ஆகும்.
மக்களவைக்கு புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டவுடன் இவரது பதவி காலியாகிவிடும். ஆகையால் இவரது பதவிக் காலம் மிகவும் குறுகியது.
அவையின் தலைவர் - Leader of the House
மக்களவை விதியின்படி மக்களவைத் தலைவராக பிரதம மந்திரியே செயல்படுவார். ஒரு வேளை பிரதம மந்திரி மாநிலங்களவையின் உறுப்பினராக இருந்தால் மக்களவையின் ஏதேனும் ஓர் அமைச்சரை அதன் தலைவராகப் பிரதம மந்திரி நியமிப்பார்.
மாநிலங்களவையின் விதியின்படி மாநிலங்களவைத் தலைவராக ஏதேனும் ஒரு அமைச்சரை அதன் தலைவராக பிரதமர் நியமிப்பார்.
பிரதமரே மாநிலங்களவையின் உறுப்பினராக இருந்தால் அவரே அதன் தலைவராக செயல்படுவார்.
அவைகளின் தலைவர்கள் அதன் செயல்பாடுகளில் தனது செல்வாக்கை நேரடியாக செலுத்துவர். அமெரிக்க நாடாளுமன்றத்தில் இதே பணியை பெரும்பான்மைத் தலைவர் (Majority Leader)என அழைக்கின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் - Leader of the Oppsition
பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அவையும் ஓர் எதிர்க்கட்சி தலைவரை கொண்டிருக்கும். மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 1/10 பங்கிற்கு குறையாத உறுப்பினர்களைப் பெற்றுள்ள பெரிய அரசியல் கட்சியே எதிர்க்கட்சியாக பாராளுமன்றம் அங்கீகரிக்கிறது.
இவரது ஊதியம் படிகள் மற்றும் இதர வசதிகள் கேபினட் அமைச்சருக்கு இணையானது.
இத்தகைய பணியை அமெரிக்காவில் அமைச்சரவை தலைவர் (Ministry Leader)என்றும், இங்கிலாந்தில் நிழல் அமைச்சரவை (Shadow Cabinet) என்றும் அழைக்கின்றனர்.
1977 ஆம் ஆண்டு மக்களவை மற்றும் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர்களை சட்டப்படி அங்கீகரித்தது.
அறுதிப் பெரும்பான்மை - Single Majority
ஷரத்து 75ன்படி பிரதமமந்திரி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார் என்கிறது.
பாராளுமன்ற அரசாங்க மரபுப்படி மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் (தொகுதிகளில்) வெற்றிபெற்ற அரசியல் கட்சித் தலைவரை பிரதமராக குடியரசுத்தலைவர் நியமிப்பார்.
ஆனால் எந்தக் கட்சியும் அறுதிப்பெரும்பான்மை பெறவில்லை எனில் குடியரசுத் தலைவர் தன்விருப்பு அதிகாரத்தின்படி ஏதேனும் ஒரு நபரை தேர்வு செய்து அவரை பிரதமராக நியமிக்கலாம்.
ஷரத்து 75ன்படி பிரதமரை குடியரசுத்தலைவர் நியமிக்கிறார். பிரதமரின் ஆலோசனையின் படி மற்ற அமைச்சர்களையும் அவரே நியமிக்கிறார்.
குடியரசுத்தலைவர் விரும்பும் வரை அமைச்சர்கள் பதவியில் இருப்பார்கள். மக்களவைக்கு அமைச்சரவை கூட்டுப் பொறுப்புடையது.
அமைச்சரவை - Cabinet
அமைச்சரவை 3 வகையான அமைச்சர்களைக் கொண்டுள்ளது.
01. கேபினட் அமைச்சர்கள் - Cabinet Ministers
02. தனி பொறுப்புகளை வகிக்கும் மாநில அமைச்சர்கள் - Ministers of State
03. இணை அமைச்சர்கள் - Deputy Ministers
அவை கலைதல் - Dissolution
ராஜ்ய சபை (மாநிலங்களவை) நிரந்தர அவை ஆகையால் அது கலையாது. மக்களவை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கலைந்துவிடும்.
குடியரசுத்தலைவர் விரும்பும்போது அவையை கலைத்துவிடலாம். அல்லது மக்களவை தானாகவே கலைந்துவிடலாம். இச்சூழலில் அவையில் கொண்டுவரப்பட்ட செயல் நடவடிக்கைகள், மசோதாக்கள், தீர்மானங்கள், அறிக்கைகள், கோரிக்கைகள், உறுதிமொழிகள் போன்ற பலவும் அவையில் தேங்கியிருந்தால் அனைத்தும் அவை கலைந்தவுடன் காலாவதி ஆகிவிடும்.
எனினும் அவையில் தங்கியிருக்கும் சில மசோதாக்கள் மற்றும் பாராளுமன்ற கமிட்டிகளால் உத்திதரவாதம் அளிக்கப்பட்ட அனைத்து மசோதாக்களும் மக்களவை கலைந்தாலும் காலாவதியாகாது.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் - No-Confidence Motionஅமைச்சரவை மக்களவைக்கு கூட்டுப் பொறுப்புடையதாகும் என ஷரத்து 75 கூறுகிறது.
மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் வரையில்தான் அமைச்சரவை பதவியில் நீடிக்க முடியும்.
மக்களவை நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை நிறைவேற்றி அமைச்சரவையை பதவிலிருந்து நீக்கலாம். இத்தீர்மானம் அனுமதிக்கப்பட 50 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
No comments:
Post a Comment