Monday, 30 June 2014

மத்திய அரசில் பல்வேறு பணி: யூ.பி.எஸ்.சி அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 20 Agricultural Engineer, Senior Marketing Officer, Deputy Director, Associate Pharmaceutical Chemist, Investigator, Sub-Regional Employment Officer/ Officer On Special Duty, Deputy Mineral Economist, Assistant Executive Engineer, Doctor போன்ற பணியிடங்களை நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: UPSC
காலியிடங்களின் எண்ணிக்கை: 20
காலியிடங்கள் விவரம்:
1. Agricultural Engineer - 01
2. Senior Marketing Officer - 01
(i) Oils and Fats
3. Deputy Director - 02
(i) Flying Training
4. Associate Pharmaceutical Chemist - 01
5. Investigator Grade-I - 02
6. Sub-Regional Employment Officer/ Officer On Special Duty
7. Deputy Mineral Economist (Intelligence)- 02
8. Assistant Executive Engineer (Electronics)- 05
9. Doctor (GDO) Gr.II - 05
கல்வி தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் செயல்திறன்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. இதனை நெட் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம். SC, ST, PH மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள்  www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.07.2014
பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 18.07.2014
மேலும் விரிவான கல்வித்தகுதி, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

இந்திய பெண் சாதனையாளர்கள்

 எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண் - பச்சோந்திரிபால்
* ஆங்கில கால்வாயை நீந்திக்கடந்த முதல் இந்தியப்பெண் - ஆர்த்தி குப்தா
* உலகை கடல் வழியே சுற்றி வந்த முதல் இந்தியப்பெண் - உஜ்வாலா தேவி
* உலக அழகியான முதல் இந்தியப் பெண் - ரீட்டா பெரி
* பிரபஞ்ச அழகியான முதல் இந்தியப் பெண் - சுஷ்மிதா சென்.
* மேக ராகக் குறிஞ்சி என்ற ராகத்தின் புதிய பெயர் என்ன? - நீலாம்பரி
* நமது நாட்டில் முதன் முதலாக ரோடியோ ஒலிபரப்பு துவங்கப்பட்ட இடம் - மும்பை
* சமுத்திரகுப்தரை வரலாற்று ஆசிரியர்கள் எவ்வாறு அழைத்தனர் - இந்திய நெப்போலியன்
* 2001 -ஆம் ஆண்டு குஜராத் பூகம்பத்தின்போது அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி - புஜ்
* ஒரு சதுர மைல் என்பது எத்தனை ஏக்கர் - 640 ஏக்கர்
* கிரிகெட் விளையாட்டில் ரவி சாஸ்திரி செய்த சாதனை - ஒரு ஓவரின் 5 பந்துகளிலும் சிக்சர் அடித்தார்.
* மகாத்மா காந்தி எந்த நாட்டில் தனது பொது வாழ்க்கையைத் துவங்கினார் - தென் ஆப்பிரிக்கா
* வறுமை ஒழிப்பிற்காக ஐக்கிய நாடுகளின் விருது பெற்ற முதல் இந்தியர் - ஃபாத்திமா பீவி
* நமது தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள அசோக சக்கரம் இந்த நிறத்தில் உள்ளது - கருநீலம்
* தமிழக அரசு சின்னத்தில் உள்ள கோயில் - ஸ்ரீவில்லிபுத்தூர்
* உலகின் முதல் கூட்டுறவு அமைப்பு எந்த நாட்டில் ஏற்படுத்தப்பட்டது - இங்கிலாந்து
* எந்த இசைக்கலைஞருக்கு முதன் முதலாக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது - எம்.எஸ். சுப்புலட்சுமி
* ராஜ்ய சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டு - 6 ஆண்டுகள்
* காரை முத்துப்புலவர் என்பது எந்த பிரபல தமிழ் கவிஞரின் புனைப் பெயர் - கண்ணதாசன்
* ஐரோப்பாவின் போர்க்களம் என்று அழைக்கப்படும் நாடு - பெல்ஜியம்
* உச்சக்கட்ட சக்தி ஒடும்போது உபயோகப்படுத்தப்படுகிறது
* கதிரியக்கம் இயற்கையாகவும் செயற்கையாகவும் ஏற்படுகிறது
* 10-6 மீட்டர் என்பது ஒரு மைக்ரான்
* நீர்பரப்பின் மீது ஏற்படும் அலைகள் - குறுக்கலைகள்
* ஒரு விளிம்பை பொருத்து ஒளிக்கதிர் வளைவது - விளிம்பு விளைவு
* ஒளியின் நிறப்பிரிகை என்று அழைக்கப்படுவது - ஒரு முப்பட்டகத்தின் பல வண்ணங்கள் பிரிகின்ற நிகழ்ச்சியே.
* ஒலிபெருக்கி என்பது - மின்சக்தியை ஒலிசக்தியாக மாற்றும் நிகழ்வாகும்
* ஒளி மூலத்தின் நிறமாலை பட்டை நிறமாலை என அழைக்கப்டுகிறது.
* எக்ஸ் கதிர்களின் மின்னுட்டம் என்பது - ஒரலகு எதிர் மின்னுட்டம்
* தொலைநோக்கி பெட்டிகளுக்கு பெறப்படும் அலைகள் - மைக்ரோ அலைகள்
* மீதேனின் வடிவமைப்பு - சதுரமாகும்
* ஒடுக்காத சர்க்கரை - ஃப்ரக்டோஸ்
* ஹைட்ரஸீன் மற்றும் டை நைட்ரஜன் டெட்ராக்ஸைடு - ராக்கெட்டில் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.
* உலக அழகியான முதல் இந்தியப் பெண் - ரீட்டா பெரி
* முதல் நோபல் பரிசு பெற்ற பெண் - அன்னை தெரசா
* முதல் பெண் சபாநாயகர் - ஷானோ தேவி
* முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு (உ.பி)
* தில்லி அரியாசனத்தில் அமர்ந்து ஆண்ட முதல் பெண்மணி - ரஸியா சுல்தானா (1236-40)
* முதல் பெண் மருத்துவர் - காதம்பினி கங்குலி
* முதல் பெண் எம்.ஏ. பட்டதாரி - சந்திரமுகிபோஸ்
* முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி - அண்ணா ஜார்ஜ் மல்ஹோத்ரா
* இந்திய தேசிய காங்கிரஸின் முதல் இந்திய பெண் தலைவர் - சரோஜினி நாயுடு
* முதல் பெண் மத்திய அமைச்சர் - ராஜ்குமாரி அமரி கெளர்
* முதல் பெண் அமைச்சர் (மாநிலம்) - விஜயலட்சும் பண்டிட் (உத்திரபிரதேசம்)
* முதல் பெண் முதல்வர் - சுசிதா கிருபளாணி (உ.பி)
* முதல் பெண் சபாநாயகர் - ஷானோ தேவி
* முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு (உ.பி)
* முதல் பெண் பிரதமர் - இந்திரகாந்தி
* ஐ.நா. பொதுச்சபையின் தலைவியான முதல் இந்தியப் பெண் - விஜயலட்சுமி பண்டிட்
* முதல் பெண் மருத்துவர் - காதம்பினி கங்குலி
* முதல் பெண் எம்.ஏ. பட்டதாரி - சந்திரமுகிபோஸ்
* முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி - அண்ணா ஜார்ஜ் மல்ஹோத்ரா
* முதல் பெண் ஐ,பி.எஸ் அதிகாரி - கிரண்பேடி
* முதல் பெண் வழக்கறிஞர் - கர்னெலியா சோரப்ஜி
* முதல் பெண் நீதிபதி - அண்ணா சாண்டி
* முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி - அண்ணா சாண்டி
* முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி - ஆ.பாத்திமா பீவி
* முதல் பெண் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி - லீலாசேத்
* முதல் பெண் தலைமை பொறியாளர் - பி்.கே. தெரசியா
* முதல் பெண் - ஆங்கில பத்திரிகையின் தணிக்கையாளர் - தீண் வக்கில்
* முதல் நோபல் பரிசு பெற்ற பெண் - அன்னை தெரசா

அகிலனின் தணியாத தாகம்

27 ஜூன்- அகிலன் பிறந்த நாள்
தமிழின் முதல் ஞானபீடப் பரிசை வென்ற எழுத்துக்குச் சொந்தக்காரரான அகிலனின் முதல் எழுத்துப் பூ 1939இல் அவரது 17-வது வயதில் மலர்ந்தது. கல்லூரிக் காலாண்டு சஞ்சிகையில் வெளிவந்த' அவன் ஏழை' என்பதே அக் கதை. கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர், “இந்தக் கதையை நீ எங்கே திருடினே?’’ எனக் கேட்க, கலங்கித் திடுக்கிட்ட அகிலன் தழுதழுத்த குரலில், கோபத்துடன், “நீங்க என் கதையைப் போட வேண்டாம்; திருப்பிக் கொடுத்திடுங்க” என்றான். ஆசிரியர் எழுந்து வந்து முதுகில் தட்டிக் கொடுத்து, “நீயே சொந்தமா எழுதியிருப்பேன்னு என்னால நம்ப முடியவில்லை; கதை நல்லா இருக்கு “என்று கூறி, தமிழாசிரியருக்கே உரிய பழக்கத்தால் தலைப்பை மட்டும் 'மிடியால் மடிதல்' என்று மாற்றி வெளியிட்டார்!
தமிழில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு நல்கிய அகிலன் இருபது நாவல்கள், இருநூறு சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் கதைகள், மொழிபெயர்ப்புகள் எனப் பல வடிவங்களில் சமூகம் சார்ந்த பார்வைகளைப் பதிவு செய்தார்.
1944-ல் அகிலனின் முதல் நாவல் ‘மங்கிய நிலவு' நேரடியாகப் புத்தகமாக வெளிவந்தது. பின்னர் 1949-ல் ‘இன்ப நினைவு' எனும் தலைப்பில் சில மாற்றங்களுடன் வெளிவந்தது. முதல் நாவலில் இருந்து, தம் இறுதி நாவல் ‘வானமா பூமியா' வரை இந்த நாட்டையும், இந்திய - குறிப்பாகத் தமிழர்களின் வளர்ச்சியையும் பற்றியே சிந்தித்தார். சிந்தனையைத் தூண்டும் சுவையான கதை, உயிர்த் துடிப்பான கதாபாத்திரங்கள், நிஜமான நிகழ்ச்சி கள், சுவையான, அழகிய, எளிய நடை என்று குழைத்து அழகிய சுடுமணல் சிற்பங்களாக வடித்து வைத்தார்.
அகிலன் எதற்காகவும் பணிந்து வளைந்து கொடுக்காதவர். கொள்கைப் பிடிப்பும் அதனை அடைய உள்ளார்ந்த ஈடுபாட்டுடனான உழைப்பும் கொண்டவர்.
எளிய தமிழில், இனிய நடையில், உயர்ந்த கருத்துக்களைச் சுவைபடக் கதையாகக் கூறி உணர்த்தும் கலையில் செய்நேர்த்தி பெற்றிருந்ததால் அகிலனின் பல படைப்புக்கள் இந்திய மொழிகள் பெரும்பாலானவற்றிலும் உலக மொழிகள் பலவற்றிலும் அன்று முதல் இன்று வரை மொழியாக்கம் கண்டுவருகின்றன.
பள்ளியிறுதி வரை மட்டுமே கல்வி கற்ற இவர் வாழ்நாள் முழுவதும் கற்றுவந்தார். டால்ஸ்டாய், கார்கி, செகாவ், டாஸ்டாவ்ஸ்கி, கோகல் முதல் ஷோலகாவ், மாப்பசான், வால்ட்டேர் என நீள்கிறது அகிலனின் வாசிப்பு. அகிலன் முதலில் சிறுகதைகளில் பயணித்து, குறு நாவல்கள் பெரு நாவல்கள் எனப் பரிமளித்தார். ‘தொடர்கதை என்பது இலக்கியமாகுமா', ‘இவர் வெறும் காதல் கதை மன்னர்' என்றெல்லாம் விமர்சன அம்புகள் வெவ்வேறு நோக்கத்தால் இவர் மீது பாய்ந்தன. “மலர் மாலைக்கு எப்படித் தலை வணங்குகிறோமோ, அப்படியே கல்லெறிக்கும் தலை வணங்கும் பக்குவம் பெற வேண்டும்” என்பார் அகிலன்.
அகிலனின் அனைத்துப் படைப்புகளிலும் அன்பும் அற நெறியும் ஆதிக்கம் செலுத்தின. போதனைகளாக அல்லாமல் சுவை யான வாழ்க்கை நிகழ்ச்சிகளாக அமைந்தன அவை. உணர்ச்சியும் அறிவும் அடிக்கடி மோதிக்கொள்ளும். ஆனால், அதன் மூலம் நமக்குக் கிடைத்தவை என்னவோ, அலாதியான அனுபவமும் வாழ்க்கைப் பாடங்களும். ‘வேங்கையின் மைந்த’னில் நாடாள்பவரின் தகுதி பற்றி, மக்களை நேசிக்கும் தலைவனைப் பற்றி, சரித்திரச் சான்றுகளுடன் அழகோவியம் தீட்டினார் அகிலன்.
அகிலனின் கலை, இலக்கிய, அரசியல் பங்களிப்பு என்பது மக்கள் முன்னேற்றம் என்பதையே நோக்க மாகக் கொண்டிருந்தது. அதனால்தான் பல் துறைப் பிரமுகர்களும் அகிலனை மரியாதையுடன் நேசித்தனர்.
மு.வ., கி.வ.ஜ., கி.ஆ.பெ.வி., ம.பொ.சி., சிவராம காரந்த் போன்ற இலக்கிய ஜாம்பவான்கள், சிவாஜி, டி.கே.எஸ். சகோதரர்கள், ஏ.பி.நாகராஜன், கே.சோமு, ராமு காரியத், டி.எம்.எஸ்., கே. அசோகன் போன்ற கலையுலகப் படைப்பாளிகள் சி. சுப்பிரமணியம், எம். பக்தவத்சலம், தத்துவ மேதை டி.கே. சீனிவாசன் போன்ற அரசியல் வல்லுனர்கள் எல்லாம் மிக இயல்பாக அகிலனின் இல்லம் வந்து விவாதித்திருக்கிறார்கள்.
சரித்திர நாவல்களிலும் அகிலனின் சமூகப் பார்வையின் வெளிப்பாடே பிரதானமானது. இன்றும் அவை வாசகர்களின் வரவேற்பைப் பெற்று வருவதிலிருந்து அவர் எழுத்தின் வலிமையும் காலம் தாண்டி நிற்கும் அதன் முக்கியத்துவமும் புலனாகின்றன.
- கட்டுரையாளர், எழுத்தாளர், அகிலனின் மகன்

சாமானியரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா மத்திய பட்ஜெட்?


மத்திய ரயில்வே பட்ஜெட் வரும் ஜூலை 8-ம் தேதியும் பொது பட்ஜெட் வரும் 10-ம் தேதியும் தாக்கல் செய்யப்படுகின்றன. பட்ஜெட் பற்றி உரத்த குரலில் இப்போது யார் பேசுகிறார்கள்? வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இங்குள்ள நிதி முதலீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை தரகர்கள், தொழில் துறை கூட்டமைப்புகள், கட்டமைப்பு நிறுவனங்கள் ஆகியவை கூறும் கருத்துக்கள்தான் பட்ஜெட் பற்றிய பிரதான கருத்துக்களாக உள்ளன.
அடுத்த அரசின் பொருளாதார கொள்கைகள் என்னவாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்களை இந்த குழுவினர் மக்களவைத் தேர்தலுக்கு முன்பே முன்வைக்க, அதை ஒட்டியே மோடியின் பொருளாதாரக் கூற்றுகள் இருந்தன. தேர்தலுக்கு பின்பும் இந்த கருத்து ஒற்றுமை தொடர்கிறது.
இதில் முக்கியமானது, ‘பொருளாதார வளர்ச்சிதான் நம் எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு’ என்பதா கும். அதே நேரம், சாமானியரின் பொருளாதாரத்தை மாற்றி அமைக் கக்கூடியதாக பட்ஜெட் இருப்பது அவசியம்.
விவசாயத் துறைக்கு உரமூட்டுமா?
கடந்த பத்து, இருபது ஆண்டு களாக உதாசீனப்படுத்தப்பட்ட துறையாக இருப்பது விவசாயம். 125 கோடி மக்களுக்கு உணவு உற்பத்தி செய்யும் விவசாயி களைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. விவசாய வளர்ச்சி குறைந்துகொண்டே போகிறது.
விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லாமல் இருப்பது, பரந்துபட்ட விவசாயிகள் தற்கொலை, கிராமம் – நகரங்கள் இடையே விரிவடையும் ஏற்றத்தாழ்வு எனப் பல பிரச்சினைகளை பிரதானமாக யாரும் முன்னிறுத்துவதில்லை. கடன் தள்ளுபடி என்பது போன்ற மேம்போக்கான கொள்கைகளை விடுத்து உண்மையிலேயே விவசாயத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் இந்த பட்ஜெட்டிலாவது இடம்பெறுமா?
உரத்த குரல் இல்லாதோர் நிலை உயருமா?
பணக்காரர்கள் – ஏழைகள் இடையிலான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. நம் எல்லா கொள்கைகளும் பணக்காரர்களுக்கே சாதகமாக உள்ளன. பழங்குடியினர், தலித் கள், விவசாயிகள், நகர்ப்புற குடிசைவாழ் மக்கள் என உரத்த குரல் இல்லாத ஏழைகளின் எண்ணிக்கை, நம் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் பாதிக்கும் மேல். இவர்களது வாழ்வாதாரம், பொருளாதார மேம்பாட்டுக்கு என்ன செய்யப்போகிறோம் என்பது இந்த பட்ஜெட் முன்பு உள்ள இன்னொரு முக்கியமான சவால்.
சீர்கேடு ஏற்படுத்தாத வளர்ச்சி
நீடித்த, நிலையான பொருளாதார வளர்ச்சி என்பது சுற்றுச் சூழலை பாதிக்காத வளர்ச்சியாக இருக்கவேண்டும். ஆனால், நமது வளர்ச்சிக்கு பெரிய சுற்றுச்சூழல் சீர்கேட்டை விலை யாக கொடுத்துக்கொண்டு இருக் கிறோம். சுற்றுச்சூழல் சீர்கேட்டை குறைத்து வளர்ச்சியை எப்படி ஏற்படுத்தப்போகிறோம் என்று பார்ப்பது அவசியம்.
உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலை, தவறும் பருவ மழை, தேக்க நிலையில் விவசாயம், அதிகரிக்கும் சாலை, ரயில் போக்கு வரத்து கட்டணங்கள், இவை அனைத்தும் உணவு விலையை உயர்த்தும். இதற்கு பட்ஜெட் என்ன பதில் சொல்லப்போகிறது? பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க, வட்டி விகிதத்தை குறைப் பது, நேரடி வெளிநாட்டு முதலீட்டை அதிகரிப்பது போன்றவற்றுடன், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் சேர்த்தே எடுக்கவேண்டிய கட்டாயம் உள்ளது.
வளர்ச்சிக் கொள்கைகளும் பணவீக்க கொள்கைகளும் எதிர்மறையாக உள்ளபோது ஏற்படும் சிக்கலை பட்ஜெட் எவ்வாறு தீர்க்கப்போகிறது? கருப்பு பணத்தை வெளிநாட்டில் இருந்து எடுப்பதும் உள்நாட்டில் உள்ளதை வெளிக்கொணர்வதும் எவ்வளவு முக்கியமோ, அதற்கு இணையாக நாட்டில் அனைத்து மட்டத்திலும் ஊழலை நீக்குவது அவசியம். ஏனென்றால், ஊழல்தான் கருப்பு பணத்தின் ஊற்றுக்கண். இதற்கு பட்ஜெட்டில் விடை உண்டா?
இவை எல்லாம் பொதுவான பொருளியல் விவாதங்களில் இடம்பெறுபவை அல்ல. இவை சாமானியரின் பொருளாதார எதிர்பார்ப்புகள். சாமானியரின் வாக்குகளால் பதவிக்கு வந்த மோடி அரசு, அவர்களுக்கே முதல் சேவகராக இருக்கவேண்டும். இதை மட்டுமே நினைவில் நிறுத்தி பட்ஜெட் 2014-15 தயாரிக்கப்படவேண்டும்.
(கட்டுரையாளர்: எஸ்.ஜனகராஜன், 
பேராசிரியர், சென்னை வளர்ச்சி மையம், 
சென்னை)

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட் இன்று காலை சரியாக 9.52 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்வையிட்டார். அவருடன் ஆந்திர மாநில முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் உடன் இருந்தனர்.
பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 5 செயற்கைக்கோள்கள் இதன்மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 714 கிலோ எடையுள்ள ‘ஸ்பாட்-7’, ஜெர்மனியைச் சேர்ந்த ‘அய்சாட்’, சிங்கப்பூரின் ‘வெலோக்ஸ்’, கனடாவின் என்எல்எஸ் ரகத்தைச் சேர்ந்த 2 செயற்கைக் கோள்கள் ஆகியவற்றை பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட் சுமந்து சென்றது.
சனிக்கிழமை தொடங்கிய கவுன்ட்டவுன்:
ராக்கெட் ஏவுவது தொடர்பான விஞ்ஞானிகளின் இறுதிகட்ட ஆலோசனைகள் வெள்ளிக்கிழமை நடந்தது. இதற்கான 49 மணி நேர கவுன்ட்டவுன் சனிக்கிழமை மாலை தொடங்கியது. ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புவது உள்ளிட்ட பணிகள் முடிவுற்ற நிலையில், இறுதிகட்ட கண்காணிப்பு பணியில் விஞ்ஞானிகள் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
நேரம் மாற்றம் ஏன்?
பிஎஸ்எல்வி-சி 23 ராக்கெட்டை 30-ம் தேதி காலை 9.49 மணிக்கு விண்ணில் ஏவ ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. 3 நிமிடங்கள் தாமதமாக 9.52 மணிக்கு ராக்கெட்டை ஏவ முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து நிருபர்களிடம் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவது தொடர்பாக விஞ் ஞானிகள் குழுவினர் வெள்ளிக் கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினர். அப்போது, விண்ணில் மிதக்கும் 13 ஆயிரம் வகையான குப்பைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். குப்பைகள் அதிகம் இருப்பதால், ராக்கெட் செலுத்தப்படும் நேரத்தை சிறிது தாமதப்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்தனர். எனவே, ராக்கெட் ஏவப்படும் நேரம் 3 நிமிடம் தாமதமாக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இதுவரை மொத்தம் 26 பிஎஸ்எல்வி ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இதில், 25 ராக்கெட்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளன. 2011-ம் ஆண்டு அக்டோபரில் பிஎஸ்எல்வி-சி18 ராக்கெட்டும் ஒரு நிமிடம் தாமதமாக விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டரில் உறுதி:
முன்னதாக நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) இஸ்ரோ மையம் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் பி.எஸ்.எல்.வி.சி-23 குறித்த தகவல்களை விளக்கினார்.
பின்னர் ட்விட்டரில்: "புதிய விண்வெளித் திட்டங்களை மேற்கொள்ள இந்திய அரசு தொடர்ந்து உந்து சக்தியாக இருக்கும் என" மோடி தெரிவித்திருந்தார்.
முதல் முறையாக..
முதல் முறையாக, ராக்கெட் விண்ணில் ஏவப்படுவது பற்றிய தகவல்களை நேரடியாக தெரிவித்துக்கும் பணியில் பெண் இன்ஜினியர் ஒருவர் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். அவரது பெயர் லலிதாம்பிகா.
சரியான பாதையில்...
பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் அது சுமந்து சென்ற 5 செயற்கோள்களையும் சரியான சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தியது.
'நம்மால் முடியும்': பிரதமர் உறுதி
பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட், பி.எஸ்.எல்.வி. பயணத்தில் மேலும் ஒரு வெற்றி. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ளச் செய்துள்ளது. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதை நேரடியாக பார்வையிட்டது பெருமையளிக்கிறது. இதற்காக இஸ்ரோவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது ராக்கெட்டுகள் முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன. பல தலைமுறைகளாக இதற்காக கடுமையாக உழைத்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் உலக அரங்கில் விண்வெளித்துறையில் இந்தியா தன்னிறைவு பெறச்செய்துள்ளனர்.
நாட்டின் வளர்ச்சிக்கும், விண்வெளித்துறை வளர்ச்சிக்கும் நேரடியாக தொடர்பு இருக்கிறது. 5 நாடுகளுடைய செயற்கோள்களை பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் தாங்கிச் சென்றிருப்பது உலக நாடுகள் மத்தியில் நமக்கு மிகப் பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
நமது தேசத்தின் விண்வெளித்திட்டங்கள் மிகவும் தனிச்சிறப்பானவை. விண்வெளித்துறையில் இந்தியாவின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. இந்திய தொழில்நுட்ப வளர்ச்சி பழங்கால தொன்மை வாய்ந்தது. பாஸ்கரச்சார்யா, ஆர்யபட்டா ஆகியோர் விட்டுச்சென்ற பணிகள் தான் இப்போதும் தொடர்கிறது. விண்வெளி ஆராய்ச்சித் துறைக்கு மத்திய அரசு முக்கியத்துவம அளிக்கும். சார்க் நாடுகளுக்கு என தனி செயற்கைக்கோளை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டும். இது நமது அண்டை நாடுகளுக்கு பேருதவியாக இருக்கும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நாட்டில் பேரிடர் மேலாண்மையிலும் பெரும் பங்காற்றி வருகிறது. குறிப்பாக 'பைலின்' புயல் தாக்கியபோது அது குறித்து முன் அறிவிப்புகளை அவ்வப்போது துல்லியமாக வெளியிட்டு பல உயிர்களை காக்க உதவியது.
ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட கிராவிட்டி என்ற திரைப்படத்தை உருவாக்க இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் விண்கலத்தை செலுத்த ஆன செலவைவிட அதிகமாக இருந்ததாக தெரிகிறது. குறைந்த செலவில் ஒரு பெரிய சாதனையை நாம் செய்துள்ளோம். விண்வெளித்துறைக்கு மேலும் பல வெற்றிகள் காத்துக்கொண்டிருக்கின்றன. நம்மால் முடியும்!. இவ்வாறு பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.

Tuesday, 24 June 2014

பறவைகளை நேசித்த மாமனிதர்


சாலிம் அலி நினைவு நாள்: ஜூன் 20
இந்தியப் பறவைகள், பறவையியல் என்று கூறியவுடன் பலருக்கும் நினைவுக்கு வரும் முதல் பெயர் சாலிம் அலி.
(அவரது பெயர் சலிம் அலி அல்ல. தனது பெயரின் ஆங்கில ‘ஏ’ எழுத்துக்கு மேல் ஒரு மேல்கோடிட்டு, தனது பெயரை சாலிம் என்றே உச்சரிக்க வேண்டுமென்று கூறியுள்ளார்)
சின்ன வயதில் தோட்டத்துக்கு வந்த பறவைகளை நோக்குவதில் அவருக்கு அதிக ஈடுபாடு இருந்தது. வளர்ந்து முனைவர் பட்டம் பெற்ற பின் இந்தியா, பாகிஸ்தான், திபெத், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளுக்குப் பறவை நோக்குவதற்காகச் சென்றார். மியான்மர் எனப்படும் பழைய பர்மாவில், அவரது குடும்பத்தினர் வெட்டு மரத் தொழில், சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுவந்தனர். அங்குச் சென்று தொழிலைக் கவனிக்காமல், தனது சகோதரரிடம் இருந்த மட்டக்குதிரையை (குட்டைக் குதிரை - Pony) வாங்கிக்கொண்டு காடுகளுக்குச் சென்றார். அங்கிருந்த பறவைகளை ஆர்வத்துடன் நோக்கத் தொடங்கினார்.
பறவை காதல்
அப்போது முதல் தொடர்ச்சியாக 20 ஆண்டுகளுக்கு மேல் காடுகளிலேயே தங்கி, பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தார் சாலிம். எப்போதும் கையில் ஒரு நோட்டுப் புத்தகம், பைனாகுலர் எனப்படும் இருநோக்கியை கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டு பறவைகளைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. கால்நடையாகவே அவர் காடுகளுக்குள் அலைந்தார். அவரது பணி மிகக் கடினமாகவும் ஆபத்து நிறைந்ததாகவும் இருந்தது.
காடுகளைக் காத்தவர்
இந்தியாவின் பல்வேறு காடுகள் காக்கப்படச் சாலிம் முக்கியக் காரணம். கேரளத்தில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கு காடுகளும், ராஜஸ்தானில் உள்ள பரத்பூர் பறவைகள் சரணாலயமும் காப்பாற்றப்பட அவரது முயற்சியும் ஒரு காரணம். அவர் எழுதிய ‘இந்தியப் பறவைகள்' என்ற புத்தகம் இந்தியாவில் எழுதப்பட்ட முதல் பறவைகள் வழிகாட்டிப் புத்தகம். தனது வாழ்க்கை வரலாற்றை ‘சிட்டுக்குருவியின் வீழ்ச்சி' என்ற பெயரில் அவர் எழுதியுள்ளார்.
மதிப்புமிக்க நிறுவனம்
சிறு வயதில் தான் சுட்ட மஞ்சள் தொண்டைச் சிட்டு பற்றி தெரிந்துகொள்ள எந்த நிறுவனத்துக்குச் சென்றாரோ, அதே மும்பை பி.என்.எச்.எஸ். நிறுவனத்தின் தலைவராகச் சாலிம் அலி பிற்காலத்தில் உயர்ந்தார்.
அந்த நிறுவனத்தை முழு வீச்சில் ஆராய்ச்சியில் ஈடுபடச் செய்ததில், அவருக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. இன்றைக்கும் அந்த நிறுவனம் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் பெரிய அளவில் மதிக்கப்படுகின்றன.
சாலிம் அலி பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கிய காலத்தில் அவருக்குப் பெரிய பண உதவியோ, உதவியாளர்களோ, ஏன் இந்தியப் பறவைகளைப் பற்றிய ஆராய்ச்சி குறிப்புகளோகூட அதிகமில்லை.
ஆனாலும் இந்தியப் பறவைகளை ஆராய்வதில் அவர் உறுதியாக இருந்தார். இன்றைக்கு இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கும் மதிக்கப்படும் பறவையியலாளராக அவர் திகழ்கிறார் என்றால், அதற்கு அவரது மனஉறுதியே காரணம்.

தேசிய தர மதிப்பீட்டு கவுன்சில்


நீங்கள் ஒரு குறிப்பிட்ட பல்கலைக்கழகம், கல்லூரியில் (கலை அறிவியல்) சேரக் காத்திருக்கிறீர்களா? அந்தக் கல்வி நிறுவனத்தின் முழு விவரங்களையும் அறிந்துகொண்டு விட்டீர்களா? இந்தக் கேள்விகளுக்குப் பலரிடம் விசாரித்துவிட்டதாகப் பதில் வரும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கென நாக் எனப்படும் தேசிய தர மதிப்பீட்டு கவுன்சில் ( National Assessment and Accreditation Council) வழங்கும் தர மதிப்பீட்டு அங்கீகாரப் பட்டியலில் நீங்கள் சேர விரும்பும் கல்லூரிக்கு எந்த இடம் தரப்பட்டிருக்கிறது என்பதை முழுமையாக அறிந்திருக்கிறீர்களா? இல்லையென்றால் இனியாவது இணையதளத்தைப் பாருங்கள். அதற்கு முன்பாக நாக் அமைப்பை பற்றி அறிந்துகொள்வோமா?
‘நாக்’ அமைப்பானது பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி) நிதி உதவியுடன் செயல்படும் ஓர் அமைப்பு. 1986-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையின்படி கல்வியின் தரக் குறைபாடுகளைக் களைய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி பல்கலைக்கழங்கள், கல்லூரிகளைத் தர வரிசைப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக 1994-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அமைப்புதான் ‘நாக்’. இதன் தலைமை அலுவலகம் பெங்களூரில் உள்ளது.
இந்தியாவில் உயர் கல்வி நிறுவனங்களுக்குத் தர வரிசை பெறுவது என்பது 2010-ம் ஆண்டுக்கு முன்புவரை தானாக முன் வந்து பெறும் நிலையிலேயே இருந்தது. ஆனால், 2010-ம் ஆண்டில் இது கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. இதன்படி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு உயர் கல்வி நிறுவனமும் நாக் மதிப்பீட்டுக்குத் தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாகிவிட்டது.
‘நாக்’ அமைப்பிடம் விண்ணப்பிக்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நிர்வாகம், பாடத் திட்டம், கற்பித்தல் மற்றும் கற்றலின் நிலை, பணியாற்றும் பேராசிரியர்கள், மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு வசதிகள் என பல்வேறு நிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும். இதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்களுக்கு ‘ஏ’ கிரேடு, ‘பி’ கிரேடு எனத் தர மதிப்பீடு வழங்கப்படும்.
www.naac.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்றால், எந்தெந்தப் பல்கலைக்கழங்கள், கல்லூரிகள் தேசிய தர மதிப்பீடு அங்கீகாரம் பெற்றுள்ளன என்ற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழங்களிலோ, கல்லூரிகளிலோ சேர விரும்பும் மாணவர்களுக்கு இது நிச்சயம் பயன் அளிக்கும்.

ரயில்வே தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்ற சாஃப்ட்வேர் பொறியாளர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு.

ரயில்வே தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்ற சாஃப்ட்வேர் பொறியாளர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு.
காலிப் பணியிடங்கள்:
1. அஸிடெண்ட் சாஃப்ட்வேர் எஞ்சினியர் - 40, 2. அஸிடெண்ட் நெட்வெர்க் எஞ்சினியர் - 15,
கல்வித் தகுதி:
அஸிடெண்ட் சாஃப்ட்வேர் எஞ்சினியர் பதவிக்குக் குறைந்தபட்சம் கம்யூட்டர் சயின்ஸ் படிப்பில் பி.இ. அல்லது பி.டெக் அல்லது பி.எஸ்சி. பட்டம் பெற்றிருக்க வேண்டும். அஸிடெண்ட் நெட்வெர்க் எஞ்சினியர் பதவிக்குக் குறைந்தபட்சம் பி.இ. அல்லது பி.டெக். படிப்பில் எலக்ட்ரானிக்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பாடம் எடுத்துப் படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
22 வயதிலிருந்து 27 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் வயது வரம்புச் சலுகை உண்டு.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ. 500 மற்றும் வங்கிக் கமிசன் ரூ 60 சேர்த்து விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்குக் கட்டண விலக்கு உண்டு.
ப்ஐ.ஐ.டி.யில் நடத்தப்படும் கேட் தேர்வு மதிப்பெண் மற்றும் மருத்துவத் தகுதித் தேர்வு அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
http://www.crisrecruitment2014.org.in/instructionpage1.aspx இந்த இணைய முகவரியில் 15.07.2014-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு:

12-ம் வகுப்பு முடித்தோருக்குத் தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு


12-ம் வகுப்பு முடித்தோருக்குத் தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு
கல்வித் தகுதி:
12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயதுத் தகுதி:
02.01.1996-ல் இருந்து 01.01.1999-ம் ஆண்டிற்குள் பிறந்திருக்க வேண்டும்
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடல் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்
தேர்வு முறை:
விண்ணப்பக் கட்டணம்:
பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைத்ராபாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஜபல்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பட்டியாலா ஆகிய வங்கிகளில் ஏடிஎம் கார்டு மூலமாக விண்ணப்பக் கட்டணமான ரூ. 100 கட்டலாம். எஸ்.சி./எஸ்.டி. ஆகிய பிரிவினருக்குக் கட்டண விலக்கு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
http://www.upsconline.nic.in/mainmenu2.php இந்த இணையள முகவரியில் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி:
21-07-2014 இரவு 11:59 மணிக்குள்
கூடுதல் தகவல்களுக்கு :

மர்மமான அரச மானியம்!

ஒரு புத்த விஹாரத்தை நல்ல முறையில் பராமரிக்க, சோழ சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த மன்னர் ஒருவர் மானியங்களையும் நிதி ஆதாரங்களையும் அளித்து ஆணையிட்டதை, நெதர்லாந்து (ஹாலந்து டச்சு) நாட்டின் லீடன் பல்கலைக்கழகம் பாதுகாத்து வரும் செப்பேடு அற்புதமாக விவரிக்கிறது.
மலாய் பகுதியைச் சேர்ந்த மன்னன் நிர்மாணித்த அந்த புத்த விஹாரம் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்துக்கு அருகில் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பு.
மன்னர் பிறப்பித்த ஆணையின் சட்ட அம்சங்கள் என்ன, அதை நிறைவேற்றுவதற்கான நிதிப் பொறுப்புகள் எப்படிப்பட்டவை, அரசு நிர்வாகம் அதை எப்படி அமலுக்குக் கொண்டுவந்தது என்பதையெல்லாம் இந்தச் செப்பேடு தெளிவாக விவரிக்கிறது. 11-வது நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஆணையின்படியான ஒப்பந்தம் துல்லியமாகவும் முழுமையாகவும் இருப்பது நம்முடைய கவனத்தைக் கவருகிறது.
மன்னரின் ஆணைகளையும் கட்டளைகளையும் ஆலயங்களிலும் நினைவுச் சின்னங்களிலும் முதலில் கல்லில் செதுக்கினார்கள். பிறகு பனை ஓலைச் சுவடிகளில் எழுதிவைத்தார்கள். கி.பி. முதலாவது நூற்றாண்டிலிருந்து செப்புத் தகடுகளிலும் பொறிக்கும் வழக்கம் ஏற்பட்டது என்று நம்பப்படுகிறது. ஆனால் பல்லவர் காலத்தில் கி.பி. 4-வது நூற்றாண்டில் இயற்றப்பட்ட செப்பேடுகள்தான் அதிகாரப்பூர்வமாகக் கிடைத்த ஆரம்பகால ஆதாரங்களாகும். வட இந்தியாவிலும் செப்பேடுகள் விரிவாக பயன்படுத்தப்பட்டுள்ளன. தென்னிந்தியாவில் கிடைத்த செப்பேடுகள் வரலாற்றைக் கணிக்கவும் விளக்கவும் பெரிதும் பயனுள்ளவையாக இருக்கின்றன.
இந்த மரபையொட்டி முதலாம் ராஜராஜ சோழன் இந்த மானியத்தை வழங்கியிருக்கிறார். 9-வது நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த தேவபாலா என்ற வங்க மன்னன், சைலேந்திரன் என்ற மன்னன் நாளந்தாவில் கட்டிய புத்த விஹாரத்தைப் பராமரிக்க 5 கிராமங்களிலிருந்து கிடைத்த வருவாயைச் சாசனமாக எழுதிவைத்து பரிபாலித்தார். நாகப்பட்டினத்திலும் ‘சூளாமணிவர்மன்' என்ற பட்டப் பெயரைக் கொண்ட மற்றொரு மன்னர் சைலேந்திரர், புத்த விஹாரத்தைக் கட்டியிருக்கிறார். அதனால் அதை சூளாமணி விஹாரம் என்றே அழைத்தனர்.
யுவான் சுவாங், யீஜிங் போன்ற சீன அறிஞர்களின் பயணக் குறிப்புகளிலும் நினைவுக் குறிப்புகளிலும் இடம் பெறும் சைலேந்திர மன்னர்கள் மலாயா, ஜாவா, சுமத்திரா மற்றும் அதையொட்டிய நீரிணைப் பகுதிகளை ஆட்சி செய்தவர்கள். அவர்களுடைய முன்னோர்கள் வெகு காலத்துக்கு முன்னரே இந்தியப் பகுதிகளிலிருந்து கடல்கடந்து படை நடத்திச் சென்றவர்கள். கடாரத்தின் மீது (தற்போதைய மலேசியாவின் கெடா) கி.பி. 8-வது நூற்றாண்டிலேயே ஆதிக்கம் செலுத்தியவர்கள். தூரக் கிழக்கு நாடுகளில் அவர்கள்தான் ஸ்ரீ விஜய அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர்கள்.
இந்தோனேசியாவின் போராபுதூர் என்ற இடத்தில் உள்ள அற்புதமான கோயில் இந்த மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதுதான். இந்துக் கோயில்களாகக் கட்டப்பட்ட இந்தக் கோயில்கள் இறுதியில் புத்த விஹாரங்களானது போல இந்த மன்னர்களும் தொடக்க காலத்தில் இந்துக்களாக இருந்து பிறகு பௌத்தத்தைத் தழுவினர். இவ்வாறாக ஸ்ரீ விஜய பௌத்தர்கள், நாளந்தா பிக்குகள், காஞ்சிபுர சித்தாந்திகள், நாகப்பட்டின சங்கத்தார் ஆகியோரால் பரஸ்பரம் புத்தமதக் கருத்துகளும் பழக்கவழக்கங்களும் மெருகேற்றம் பெற்றன.
லெய்டன் பல்கலைக்கழக செப்பேடுகளில் இவை பற்றிய குறிப்புகளைக் காணலாம்.  விஜய மன்னர்களும் கடாரம் வென்றவர்களும் மகரம் என்ற விசித்திரமான பிராணியுடன் தொடர்புள்ளவர்கள். மீனின் உடலும் யானையின் தலையும் கொண்ட மகரம் இந்த மன்னர்களின் இலச்சினையாக இருக்கிறது. ஜாவாவின் கட்டிடங்கள் பலவற்றில் இச் சின்னத்தை இன்றும் காணலாம்.
செப்பேடுகள்:
லெய்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள செப்பேடுகளில் 21 பெரியவை, 3 சிறியவை. பெரிய செப்பேடுகள் ராஜேந்திர சோழனால் எழுதப்பெற்றவை. அவற்றில் 5 சம்ஸ்கிருதத்திலும் 16 தமிழிலும் எழுதப்பட்டவை. ராஜராஜ சோழன் வாய்மொழியாக இட்ட உத்தரவுகளை ராஜேந்திர சோழன் நிறைவேற்றியது குறித்து அவற்றில் எழுதப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்க சோழனால் எழுதப்பட்டவை தமிழ் செப்பேடுகள். நாகப்பட்டினத்தில் உள்ள புத்த விஹாரத்துக்குக் கூடுதல் மானியம் வழங்கப்பட்டது குறித்து அதில் எழுதப்பட்டிருக்கிறது. சிறிய செப்பேடுகளில் ராஜராஜபெரும்பள்ளி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பௌத்தர்களும் ஜைனர்களும் கூடும் இடங்கள் பள்ளி என்று அழைக்கப்படும்.
சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட செப்பேடுகளில் மொத்தம் 111 வரிகள் உள்ளன. நல்ல கற்பனை வளத்துடனும் சந்தங்கள், யாப்பிலக்கணங்களுடன் எழுதப்பட்டுள்ள அவை சோழ மன்னர்களின் வம்சப் பெருமைகளையும் போரில் அவர்கள் பெற்ற வெற்றிகளையும், அவர்கள் மேற்கொண்ட படையெடுப்புகளையும் விவரிக்கின்றன.
அன்பில் என்ற இடத்தில் கிடைத்த சுந்தரசோழனின் வம்சம், திருவாலங்காட்டில் கிடைத்த உத்தம சோழன் வம்சம் குறித்த தகவல்களை வரலாற்று மாணவர்கள் ஒப்புநோக்கி ஆராய்ந்துள்ளனர். இந்தச் செப்பேடுகளும் கன்னியாகுமரியில் உள்ள வீரராஜேந்திரர் பற்றிய குறிப்புகளும், லெய்டன் பல்கலைக்கழகச் செப்பேடுகளும் தரும் தகவல்கள் சோழர்காலத்தைப் பற்றித் தெளிவாக அறிய உதவுகின்றன.
கலிங்கத்துப் பரணியும் சோழர்களின் வம்சம் குறித்துப் பேசுகிறது. கோயமுத்தூரைச் சேர்ந்த கே.வி. சுப்பிரமண்யா 1930-களின் மத்தியில் இந்தச் செப்பேடுகள் குறித்த தனது ஆராய்ச்சி முடிவுகளைப் பதிப்பித்திருக்கிறார். அவருடைய நூலிலிருந்து நாம் பல அரிய தகவல்களைப் பெற முடிகிறது.
21 செப்பேடுகளும் வட்டமான செப்பு வளையத்துக்குள் கோக்கப்பட்டு ராஜமுத்திரை இடப்பட்டிருக்கிறது. சோழர்களின் புலிச் சின்னம், 2 விளக்குகள், மீன் வடிவங்கள், சம்ஸ்கிருத உரை ஆகியவை அந்த முத்திரையில் பொறிக்கப்பட்டுள்ளன.
தமிழில் 332 வரிகளில் அந்த மானியத்தின் முழு விளக்கமும் வியப்பூட்டும் வகையில் தரப்பட்டிருக்கிறது. 97 வேலி நிலங்களிலிருந்து கிடைக்கும் நெல்லில் 8,943 கலம், 2 துனி, 1 குருணி, 1 நலி இந்த மானியம் என்று அறுதியிட்டுக் கூறுகிறது. ஆனைமங்கலத்தையொட்டிய 26 கிராமங்களின் பெயர்களையும், அவற்றைக் கணக்கெடுத்த அதிகாரிகளின் பெயர்களையும், மானியம் வழங்கப்பட்டதற்கு சாட்சியாகக் கையெழுத்திட்ட அதிகாரிகளின் கையெழுத்துகளையும் பற்றி செப்பேடு பேசுகிறது.
இந்த கிராமங்களிலிருந்து கிடைக்கும் வரி வருவாய் அரசருக்குத்தான் செல்ல வேண்டும் என்றாலும் அரசர் பிறப்பித்த சாசனம் காரணமாக இந்த விஹாரத்துக்கும் பௌத்த மடாலயத்துக்கும் தரப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கிறது.
வரி இனங்கள் பற்றிய பட்டியல் மலைக்க வைக்கிறது. தண்ணீர் வரி, திருமணத்தின்போது செலுத்த வேண்டிய வரி, ஆட்டு மந்தைகளை வளர்ப்போர் செலுத்த வேண்டிய வரி, தறிகளில் நெய்யப்படும் ஆடைகளுக்கு வரி, துணி வெளுப்போர் பயன்படுத்தும் துவைக்கும் கற்களைப் பயன்படுத்துவதற்கான வரி, மட்பாண்டங்களுக்கு வரி என்று பட்டியல் நீள்கிறது. ஒவ்வொரு வரிக்கும் அழகான தமிழ்ப் பெயர்கள் இருக்கின்றன. அதிகாரிகளின் பதவிப் பெயர்களும் அப்படியே.
அரசனின் ஆணைகளைத் தொகுத்து வெளியிடும் அதிகாரிக்கு ‘திருமந்திரவோலை நாயகம்' என்று பெயர். வரிபத்தாயம் என்பது வரி விவரங்கள் எழுதப்பட்ட பதிவேடுகள். ஆனைமங்கலத்தைச் சுற்றி நிலங்களைக் கணக்கெடுக்க 2 ஆண்டுகள் 72 நாள்கள் ஆகியுள்ளன. விஹாரத்தைக் கட்டிமுடிக்க 9 ஆண்டுகள் ஆயின!
யாரெல்லாம் இந்த மானியத்தால் பயன்பெற வேண்டும் என்பதும் தீர்மானமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாசன வசதிகளைச் செய்து தருதல், வாய்க்கால்களைப் பராமரிப்பது, கிணறுகளை வெட்டுவது, மானியக் கிராமங்களிலிருந்து பிற கிராமங்களுக்குத் தண்ணீரைப் பாய்ச்சுவது தொடர்பாகத் தெளிவாக வழிகாட்டல்கள் உள்ளன. மரங்களை நடுவது, தோப்புகளை வளர்ப்பது, எண்ணெய் செக்குகளை நாட்டுவது, சுட்ட செங்கற்களைக் கட்டடம் கட்ட பயன்படுத்துவது, கட்டுமானத்தில் தரத்தைப் பயன்படுத்துவது பற்றியெல்லாம் குறிப்புகள் காணப்படுகின்றன. மடாலயத்தின் பக்கத்தில் வாழும் மக்களால் ஏற்படும் ஓசைகளை மற்றவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பதுகூட கூறப்பட்டிருக்கிறது!
தஞ்சாவூரில் மிகப்பெரிய சிவாலயத்தைக் கட்டிய மன்னன் நாகப்பட்டினம் அருகில் இந்த புத்த விஹாரத்தைக் கட்ட உதவியிருக்கிறார். பிற்காலத்தில் புரவலர் இன்றி சூளாமணிவிஹாரம் பாழாகிவிட்டது.
19-வது நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்த புத்த விஹாரம் முற்றாக அடையாளமின்றி அழிக்கப்பட்டது. இதை சர் டபிள்யூ. எலியட் பதிவு செய்திருக்கிறார்.
“நாகப்பட்டினத்துக்கு வடக்கில் ஒன்றாவது மைலிலிருந்து இரண்டாவது மைலுக்குள் உயரமான கோபுரம் இருக்கிறது. அது கடலில் செல்வோருக்கு அடையாளச் சின்னமாகத் திகழ்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். புதுச்சேரியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஏசு சபையினர் இந்த இடத்துக்கு அருகில் குடியேறினர். அந்த கோபுரம் தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் அதை இடித்துத் தள்ள வேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு மனுச் செய்தனர்.
சிலகால இழுத்தடிப்புக்குப் பிறகு 1867 ஆகஸ்ட் 28-ம் தேதி அந்த கோபுரத்தை இடித்துத்தள்ள பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அனுமதி தந்தனர். அந்தக் கட்டிடம் இடிக்கப்பட்ட சில காலத்துக்குப் பிறகு வெண்கலத்தாலான புத்தர் சிலை அங்கே கிடைத்தது. அதை லார்டு நேப்பியருக்குப் பரிசாகக் கொடுத்தார்கள். இவ்வாறாக பௌத்த விஹாரத்தின் கடைசி அடையாளமும் தொலைந்தது.
லெய்டன் செப்பேடுகள் சில கேள்விகளை எழுப்புகின்றன. எங்கோ ஒரு நாட்டைச் சேர்ந்த சைலேந்திர மன்னனின் வேண்டுகோளை ஏற்று நாகப்பட்டினத்தில் புத்த விஹாரத்தை ஏன் சோழச் சக்ரவர்த்தி ஏற்படுத்தினார்? பிற மதங்களையும் மதிக்கவேண்டும் என்பதாலா? சைலேந்திரர்களுடன் நட்புறவு கொள்வதற்காகவா? அல்லது இரண்டும் சேர்ந்தா? அல்லது வேறு காரணம் இருக்குமா? வரலாற்று ஆய்வு மாணவர்கள் இந்தப் புதிர்களுக்கு விடை காண வேண்டும்.
தமிழில்: சாரி
History, Mystery of a Royal Grant, 30.5.14, The Frontline.

உலகப் பாரம்பரியச் சின்னமானது கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா


கத்தாரில் நடந்து வரும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னங்களுக்கான தேர்வு கூட்டத்தில் நேற்று இந்தியாவின் ‘கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா’ மதிப்பு மிக்க உலக பாரம்பரியச் சின்னமாக தேர்வு செய்யப்பட்டது.
கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த 15-ம் தேதி முதல் உலகின் முக்கிய பாரம்பரியச் சின்னங்களை தேர்வு செய்யும் யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னங்களுக்கான கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா மற்றும் குஜராத்தின் ‘ராணி - கி - வாவ் படித்துறைக் கிணறு ஆகியவை உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்படவுள்ளது என்று ‘தி இந்து’ கடந்த ஜூன் 10ம் தேதி அன்று முதன்முறையாக செய்தி வெளியிட்டது. சொன்னது போலவே மேற்கண்ட இரண்டை யும் உலகப் பாரம்பரியச் சின்னங் களாக அறிவித்தது யுனெஸ்கோ.
நேற்று மதியம் யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னங்களுக்கான தேர்வு குழுவின் தலைவரான திருமதி ஷேக்கியா அல் மயாஸா பிந்த் ஹாமாத் காலிஃபா அல்தானி, மேற்கு இமயமலையில் இருக்கும் கிரேட் இமாலயன் தேசியப் பூங்காவின் சிறப்புகளை பட்டியலிட்டார். அவர் கூறுகையில், “கிரேட் இமாலயன் தேசியப் பூங்காவின் உலகில் வேறு எங்கும் வசிக்காத ஓரிட வாழ்விகளும், தனித்துவம் பெற்ற தாவரங்களும் சிறப்பாக பாதுகாக்கப்படுகின்றன. அதேவேளையில் உள்ளூர் பழங்குடியின மக்களின் நலனிலும் இந்திய அரசு சிறப்பான கவனத்தை செலுத்தி வருகிறது. நீர்வளங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.” என்றார்.
தொடர்ந்து அவர் இந்தியா சார்பாக தேர்வு செய்யப்படவுள்ள கிரேட் இமாலயன் தேசியப் பூங்காவை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க யாருக் கேனும் ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடு களின் உறுப்பினர்கள் சில கேள்வி களையும் சந்தேகங்களையும் எழுப்பினர். இந்திய அதிகாரிகள் தரப்பில் அதற்கு விளக்கம் தரப்பட்டது. இதையடுத்து, நேற்று மதியம் கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா உலகப் பாரம்பரியச் சின்னமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இந்தியாவின் சார்பில் நிகழ்ச்சியில் இந்தியாவுக்காக யுனெஸ்கோ தூதர் திருமதி ருச்சிரா கம்போஜ், மத்திய கலாச்சாரத் துறை செயலாளர் ரவீந்திர சிங், ஹிமாச்சல பிரதேசத்தின் வனத்துறை அதிகாரிகள் ஆர்.கே. குப்தா, லலித் மோகன், சஞ்சீவ பாண்டே மற்றும் இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் வி.பி. மாத்தூர் ஆகியோர் கலந்துகொண்டு யுனெஸ்கோ தேர்வு குழுவினருக்கு நன்றியை தெரிவித்தனர்.
வி.பி. மாத்தூர் கூறுகையில், “இந்தியாவின் பெருமைகளில் ஒன்று கூடியிருக்கிறது. இதன் மூலம் கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா மட்டுமின்றி மேற்கு இமயமலையின் உயிரி பல் வகைமை உலகத்தின் கவனத்தைப் பெறுகிறது.” என்றார்.
இந்தியாவின் ஏழு அதிசயங்கள்
1985 காசிரங்கா தேசியப் பூங்கா, அஸ்ஸாம் மானஸ் வனவிலங்குகள் சரணாலயம், அஸ்ஸாம் கியோலேடியோ தேசியப் பூங்கா, ராஜஸ்தான்
1987 சுந்தரவனக் காடுகள், மேற்கு வங்காளம்
1988 நந்தாதேவி தேசியப் பூங்கா, உத்தரகண்ட்
2012 மேற்குத் தொடர்ச்சி மலைகள்
2014 கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா
ராணி-கி-வாவ் படித்துறையும் தேர்வு
கடந்த சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் கலாச்சார பிரிவில் குஜராத்தில் 11-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட ‘ராணி கி - வாவ்’ படித்துறை கிணற்றை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ தேர்வு செய்துள்ளது. மரூ-குர் ஜாரா வம்சத்தினரால் கட்டப்பட்ட இந்த கிணறு கட்டிடக் கலைக்கு பிரசித்தி பெற்றது. சரஸ்வதி நதி அழிந்தபோது இதுவும் பூமிக்குள் புதையுண்டிருக்கலாம் என்று தொல்லியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இது சுமார் 700 ஆண்டுகள் கழித்து இந்திய தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ஏழு அடுக்குகள் கொண்ட இந்த படித்துறையின் ஒவ்வொரு அடுக்கிலும் அழகிய சிற்பங்கள் அமைந்துள்ளன.
இதுதவிர, கலாச்சார பிரிவில் ஏற்கெனவே மகாபலிபுரம், கோனார்க் சூரியக் கோயில், தாஜ்மகால் உட்பட மொத்தம் இந்தியாவில் உள்ள 25 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. திருச்சி ரங்கம் கோயில், காரைக்குடி செட்டிநாடு கிராமம், திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் உட்பட48 இடங்கள் யுனெஸ்கோவின் உத்தேச தேர்வுப் பட்டியலின் பரிசீலனையில் இருக்கின்றன.

Monday, 23 June 2014

Chief Ministers & Governors of Indian States :

1. Andaman & Nicobar - U.T. - A. K. Singh (Lieutenant-Governor)
2. Andhra Pradesh - N.Chandrababu Naidu - Shri. E. S. L. Narasimhan
3. Arunachal Pradesh - Nabam - Tuki Nirbhay Sharma
4. Assam - Shri Tarun Gogoi - Janaki Ballabh Patnaik
5. Bihar - Jitan Ram Manjhi - DY Patil
6. Chandigarh - U.T. - Shri Shivraj V. Patil (Administrator)
7 .Chhattisgarh - Dr. Raman Singh - Shri Shekhar Dutt
8. Goa - Shri Manohar Parrikar - Shri Bharat Vir Wanchoo
9. Gujarat - Anandiben Patel - Dr. Kamla Beniwal
10. Haryana - Shri Bhupinder Singh Hooda - Shri Jagannath Pahadia
11. Himachal Pradesh - Virbhadra Singh - Urmila Singh
12. Jammu and Kashmir - Omar Abdullah - Narinder Nath Vohra
13. Jharkhand - Hemant Soren - Dr. Syed Ahmed
14. Karnataka - Shri K. Siddaramaiah- Hansraj Bhardwaj
15. Kerala - Shri Oommen Chandy - Sheila Dikshit
16. Madhya Pradesh - Shri Shivraj Singh Chouhan - Ram Naresh Yadav
17. Maharashtra - Shri Prithviraj Chavan - K. Sankaranarayanan
18. Manipur - Shri Okram Ibobi Singh - Vinod Kumar Duggal
19. Meghalaya - Mukul Sangma - K. K. Paul
20. Mizoram - Pu Lalthanhawla - Shri Vakkom Purushothaman
21. Nagaland - T R Zeliang - Shri Ashwani Kumar
22. New Delhi - Arvind Kejriwal (resigned) - Najeeb Jung (Lieutenant-Governor)
23. Odisha - Sh. Naveen Patnaik - Shri S. C. Jamir
24. Puducherry - Shri N. Rangasamy - Virendra Kataria (Lieutenant-Governor )
25. Punjab - Shri Parkash Singh Badal - Shri Shivraj Patil
26. Rajasthan - Vasundhara Raje - Margaret Alva
27. Sikkim - Shri Pawan Kumar Chamling - Shriniwas Dadasaheb Patil
28. Tamil Nadu - Sushree J. Jayalalithaa - Konijeti Rosaiah
29. Telangana - K Chandrasekhar Rao - ESL Narasimhan
30 - Tripura - Shri Manik Sarkar - Shri Devanand Konwar
31. Uttar Pradesh - Akhilesh Yadav - Shri Banwari Lal Joshi
32. Uttarakhand - Harish Rawat - Aziz Qureshi
33. West Bengal - Km. Mamata Banerjee - Shri M. K Narayanan
34. Dadra and Nagar Haveli - U.T - Shri B.S. Bhalla (Administrator)
35. Daman and Diu - U.T. - Shri B.S. Bhalla (Administrator)
36. Lakshadweep- U.T. - Shri H. Rajesh Prasad

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் ஜூனியர் உதவியாளர் பணி

ஹைதாராபாத்தில் செயல்பட்டு வரும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட், நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Assistant-II (Liason) பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
காலியிடங்கள்: 03
பணி: Jr. Assistant-II (liason)
வயது வரம்பு: 33க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது +2 தேர்ச்சி பெற்று குறைந்தபட்சம் . அலுவலக பயன்பாடுகளில் 6 மாத கம்ப்யூட்டர் கோர்ஸ் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 8.350.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
DGM (HRD), Bharat Dynamics Limited,
Kanchanbagh, Hyderabad – 500 058
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.07.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 11.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bdl.ap.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பொது அறிவு

* இந்தியாவில் ஆகாய கங்கை என பெயரிட்டு அழைக்கப்படுது - பால்வழி அண்டம்
* 2012 ல் தேசிய கணிதவியல் ஆண்டு கொண்டப்பட்டது.
* இந்திய அரசு தேசிய கணிதவியல் தினமாக அறிவித்த தேதி - டிசம்பர் 22
* நம் சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கோள் - வியாழன்.
* நம் கோள் தொகுப்பில் விரைவாக தன்னைத்தானே சுற்றும் கோள் - வியாழன்
* நம் கோள் தொகுப்பில் மிகச் சிறிய கோள் - புதன்
* நம் கோள் தொகுப்பில் விரைவாக சூரியனை வலம் வரும் கோள் - புதன்
* விடி வெள்ளி என அழைக்கப்படும் இருகோள்கள் - புதன் மற்றும் வெள்ளி
* சமுதாய ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடியவை - வேளாண்மை
* சமுதாய வளர்ச்சிக்கான வரிசை - தனிமனிதன், குடும்பம், சமூகம், சமுதாயம்

* ஜெர்மனி சர்வதேச திரைப்பட விழாவில் திறந்த திரைப்படத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருது - தங்க கரடி விருது.
* இந்திய சினிமாவின் தந்தை அழைக்கப்படுபவர் - சத்தியஜித்ரே
* மெக்னீசிரியர் என அழைக்கப்படுவது - மெக்னீசியம் ஆக்ஸைடு
* நிலவினுடைய பரப்பில் விடுபடு தூரத்தின் மதிப்பு என்பது - 2.4 கி.மீ/நொடி
* பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஆண்டுக்கு எத்தனை மனித இறப்புகள் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது - 1,50,000
* நீதிமன்றத்தால் நடைமுறைப்படுத்தப்படுவது - அடிப்படை உரிமைகள்
* சிறுபான்மையினரின் பாதுகாப்பு - பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்
* நீதிமன்றத்தால் நடைமுறைப்படுத்தப்படாதது - அரசு நெறிமுறைக் கோட்பாடு
* குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி - அடிப்படை உரிமைகள்
* மிக நீண்ட நாள் இந்திய தலைமை நீதிபதியாக இருந்தவர் - யஷ்வந்த விஷ்ணு சந்தரசூத்.

* ஐக்கிய நாடுகள் அமைப்புடன் சேராதவை - சர்வதேச வளர்ச்சி அமைப்பு, உலக சுகாதார அமைப்பு, சர்வதேச தொழிலாளர் அமைப்பு.
* ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் தலைவர் உறுப்பினர் மத்தியில் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவது - ஒவ்வொரு மாதமும்.
* ஐக்கிய நாடுகள் அமைப்புகளின் முதன்மை உறுப்புகளில் சாராதவை - சர்வதேச தொழிலாளர் அமைப்பு
* லண்டனில் சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு - 1961
* குழு எட்டு நாடுகள் பற்றி சரியாக விளக்குவது - அவைகள் தொழில்மையமான நாடுகள்.
* ஜி-8 அமைப்பிலிருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்ட ஆண்டு - 24 மார்ச் 2014
* 2013 ஆம் ஆண்டில் 10வது மிகப்பெரிய GDP நாடு - இந்தியா
* அருணாச்சலப்பிரதேசம் மாநில அலுவல் மொழி - ஆங்கிலம்
* மேகாலாயா அலுவல் மொழி - ஆங்கிலம்
* நாகலாந்து அலுவல் மொழி -  ஆங்கிலம்

* சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக அங்கீகரித்த மாநிலம் - உத்திரகாண்ட்
* நேபாளி மொழியை அலுவல் மொழியாக அங்கீகரித்த இந்திய மாநிலம் - சிக்கிம்
* யூனியன் பிரதேசமான லட்சத் தீவின் அலுவல் மொழி - ஆங்கிலம்
* யூனியன் பிரதேசமான தாதர் & நாகர் ஹவேலி அலுவல் மொழி - ஆங்கிலம்
* யூனியன் பிரதேசமான அந்தமான் & நிகோபர் தீவுகளின் அலுவல் மொழி - ஆங்கிலம்
* கோவா மாநில மொழி - கொங்கனி
* ஜம்மு காஷ்மீர் மாநில மொழி - டோங்கிரி
* அஸ்ஸாம் மாநில மொழி - போடோ
* தேர்தல் (வாக்கு)மை-யில் உள்ள வேதிப்பொருள் - சில்வர் நைட்ரேட் கரைசல்
* தேர்தலில் இரு முறை வாக்களிப்பதை தடுப்பதற்கான பாதுகாப்பு முறைக்காக பயன்படுத்தப்படுபவை - சில்வர் நைட்ரேட் கரைசல்.

* பரப்பளவில் மிகச் சிறிய மக்களவைத் தொகுதி - சாந்தி சவுக்
* தமிழகத்தில் எத்தனை வகையான நிலஅளவை பின்பற்றப்படுகின்றன- இரண்டு
* தமிழ அரசு தனக்கு செலுத்த வேண்டிய நிலவரிகளை நில உரிமையாளரிடமிருந்து நேரிடையாக வசூல் செய்ய கடைப்பிடிக்கப்படும் முறை - ரயத்து வாரி முறை.
* மெட்ராஸ் மாகாணத்தில் இராயத்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் - தாமஸ் மன்றோ
* இரயத்வாரி முறையை கடைப்பிடிக்காத மாநிலம்  - அஸ்ஸாம்
* தஞ்சை நகராட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு - மே.9.1866
* தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாநாகராட்சிகள் - திண்டுக்கல் - திருப்பூர்
* 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள கிராமங்கள் - 6,38,000
* குறைந்த கிராமங்களை கொண்ட மாநிலம் - கோவா
* தமிழகத்தில் மக்கள் வாழக்கூடிய கிராமங்கள் - 15,400

* இந்தி அரசின் எந்த துறையின்கீழ் தேசிய சர்வே & மேப்பிங் அமைப்பு வருகின்றது - அறிவியல் தொழில்நுட்பம்
* இந்திய மாநிலங்களில் 100 சதவிகித மின் இணைப்புகள் கொண்டவை - ஒன்பது
* மாநிலங்களில் 100 சதவிகிதம் கிராமப்புற மின் இணைப்புகள் வழங்காதவை - கர்நாடகா
* 31.08.2013 வரையில் எத்தனை சதவிகித இந்திய கிராமங்கள் மின்இணைப்புப் பெற்றுள்ளன - 94.6 சதவிகிதம்.
* 100 சதவிகிதம் கிராமப்புற மின் இணைப்புடன் 100 சதவிகிதம் கிராமப்புற வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க இலக்காக நிர்ணயிக்கப்பட்டது - 2009
* கிழக்கிந்திய கம்பெனியின் பிரிட்டிஷ் அதிகாரிகளுள் எவர் ஒருவர் பெங்கால் சர்வேயை உருவாக்கியது - இராபர்ட் கிளைவ்
* தற்போதைய இந்தியாவின் சர்வேயர் ஜெனரல் - டாக்டர் ஸ்வர்ன சுப்பாராவ்
* சர்வே ஆஃப் இந்தியாவின் தலைமையகம் - டேராடூன்
* தமிழக அரசால் நடத்தப்படும் சர்வே - ரெவன்யூ அளவை
* தமிழக அரசின் தலைமைச்செயலர் பதவி நிலையில் ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் - ஷிலா பாலகிருஷ்ணன்.
* தமிழக அரசின் தற்போதைய தலைமைச் செயலாள்ர் - மோகன் வர்கிஸ் சுங்கத்
* தமிழக ரெவென்யூ போர்டு எந்த ஆண்டு நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக தமிழ்நாடு ரெவென்யூ துறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1774
* பசிபிக் பெருங்கடலின் குழந்தைகள் என்று அடிக்கடி சுட்டிக் காட்டப்படுவது - எல்நினோ மற்றும் லாநினோ