Saturday, 31 August 2013

ஆறுகளும் மாவட்டங்களும்


TNPSC Group 2


டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 நேர்முகத் தேர்வுகள் குறித்து பல கேள்விகள் எங்களுக்கு வந்துள்ளன. பொதுவாக நேர்முகத் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளை
பின்வருமாறு பிரிக்கலாம்.



* பட்டப்படிப்பில் படித்த பாடங்களிலிருந்து கேள்விகள்
* நுழைய விரும்பும் துறை பற்றிய கேள்விகள்
* பொது அறிவு மற்றும் நடப்புச் செய்திகள் 
* தனி நபர் பற்றிய கேள்விகள்

பொதுவாக இத்தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளவர்களில் பலரும் பட்டப்படிப்பை முடித்து பல ஆண்டுகளாகியிருப்பவர்கள் தான். எனினும் உங்களது படிப்பு தொடர்பான கேள்விகளைத் தவிர்க்க முடியாது. என்ன பட்டப்படிப்பு முடித்திருக்கிறீர்கள் என்பதிலிருந்து கேள்விகள் இடம் பெறலாம். பொது அறிவு மற்றும் நடப்புச் செய்திகள் பற்றிய கேள்விகள் கடந்த முறை சிறப்பாகக் கேட்கப்பட்டன. அதிலும் நேர்முகத் தேர்வு தினத்தைய செய்திகளையும் அதன் பின்புலமான அம்சங்கள் பற்றிய கேள்விகள் அதிகம் கேட்கப்பட்டன. எனவே உங்களது கவனம் நடப்புச் செய்திகளில் இருப்பது கட்டாயம் தேவை. வெறும் அப்ஜக்டிவ் கேள்விகள் போல அல்லாமல் அனலிடிகல் என்னும் முறையில் பரவலாக ஆழமாகக் கேட்கப் பட்டுள்ளன. செய்தித்தாள் வாசிப்பதும் அவற்றை மனதில் கொள்வதும் அவசியம்.

தனிநபர் பற்றிய கேள்விகளில் எதற்காக உங்களுக்கு இந்த வேலை கொடுக்கப்பட வேண்டும், உங்களது சிறப்புத் திறன் என்ன, இந்த வேலை தரப்படாவிட்டால் என்ன செய்வீர்கள், பலம் என்ன, பலவீனம் என்ன, பொழுதுபோக்கு என்ன போன்ற கேள்விகள் பொதுவாக நேர்முகத் தேர்வுகளில் கேட்கப்படுகின்றன. ஒவ்வொரு பதிலிலிருந்தும் அடுத்த கேள்வி கேட்கப்படுவதற்கான வாய்ப்பும் அதிகம்.

நுழைய விரும்பும் துறைகள் பற்றிய தகவல்களை அறிவதும் முக்கியம். மேலும் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் எனத் தொடங்கி அது பற்றிய தகவல்கள் கேட்கப்படலாம். பெற்றோரின் வேலை தொடர்பான கேள்விகள், திருமணமாகியிருந்தால் கணவர்/மனைவியின் வேலை தொடர்பான கேள்விகளையும் எதிர்பார்க்கலாம். வெறும் மனப்பாடம் மூலமாக நேர்முகத் தேர்வுகளில் பதில் சொல்ல முடியாது என்பதை அறியவும்.

Right to Service Act: சேவை உரிமை சட்டம்


இந்த சட்டத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? 

அரசு அலுவலங்களில் ஒரு வேலையை முடிக்க ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் இழுத்தடிப்பதை தடுப்பதற்காக கொண்டு வரப்படதே இந்த சட்டம். 

இதன் மூலம் லஞ்சம் வாங்குவதற்காகவே வேலைகளை இழுத்தடிக்கும் முறை அரசு அலுவலங்களில் பெரும்பாலும் தடுக்கப்படும். 

ஒரு அதிகாரி குறிப்பிட்ட காலத்தில் தன வேலையை முடிக்கவில்லை என்றால் அவருக்கு அவர் விரையம் செய்த நாட்களுக்கு ஏற்றாற்போல் அபராதம் விதிக்க இந்த சட்டம் வழி செய்கிறது. 

ரேஷன் கார்டில் பெயர் மாற்றம் செய்வதற்கு கூட லஞ்சம் குடுக்கவேண்டிய நிலை இன்று தமிழகமெங்கும் நிலவுகிறது. சேவை உரிமை சட்டத்தின் மூலம் விரைவாகவும் லஞ்சம் குடுக்காமலும் நம் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

இந்த சட்டம் கேரளா, பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல மாநிலங்களில் இந்த சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என தெரிகிறது. தமிழகத்தில் இந்த சட்டத்தை நிறைவேற்றக்கோரி கேட்கவும் சட்டசபையில் இது குறித்து கேள்வி எழுப்பவும் சரியான உறுப்பினர்களை நாம் தேர்ந்தெடுக்கவில்லை. ஆகையால் இந்த சட்டத்தை இயற்ற எந்த ஒரு முயற்சியும் இங்கு எடுக்கப்படவில்லை. குழாயடி சண்டை போடுவதற்கும் தலைவர்கள் துதி பாடுவதர்க்குமே இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது.

முதல் முயற்சியாக தமிழக லோக்சத்தா கட்சியும் சமூக ஆர்வலர்களும் இணைந்து இதற்கான முயற்சிகளை துவங்கி உள்ளார்கள். பொது மக்களின் ஆதரவு இருக்குமானால் இந்த சட்டம் தமிழகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் துளியும் சந்தேகமே இல்லை.

ஆய கலைகள் 64


ஆய கலைகள் 64 பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் . அவ்வாறு கேள்விப்பட்ட 64 கலைகள் எது எது என்று தற்போது தெரிந்து கொள்வோம்.

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)

2. எழுத்தாற்றல் (லிகிதம்)

3. கணிதம்

4. மறைநூல் (வேதம்)

5. தொன்மம் (புராணம்)

6. இலக்கணம் (வியாகரணம்)

7. நயனூல் (நீதி சாத்திரம்)

8. கணியம் (சோதிட சாத்திரம்)

9. அறநூல் (தரும சாத்திரம்)

10. ஓகநூல் (யோக சாத்திரம்)

11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)

12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)

13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)

14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)

15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)

16. மறவனப்பு (இதிகாசம்)

17. வனப்பு

18. அணிநூல் (அலங்காரம்)

19. மதுரமொழிவு (மதுரபாடணம்)

20. நாடகம்

21. நடம்

22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)

23. யாழ் (வீணை)

24. குழல்

25. மதங்கம் (மிருதங்கம்)

26. தாளம்

27. விற்பயிற்சி (அத்திரவித்தை)

28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)

29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)

30. யானையேற்றம் (கச பரீட்சை)

31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)

32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)

33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)

34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)

35. மல்லம் (மல்ல யுத்தம்)

36. கவர்ச்சி (ஆகருடணம்)

37. ஓட்டுகை (உச்சாடணம்)

38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)

39. காமநூல் (மதன சாத்திரம்)

40. மயக்குநூல் (மோகனம்)

41. வசியம் (வசீகரணம்)

42. இதளியம் (ரசவாதம்)

43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)

44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)

45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)

46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)

47. கலுழம் (காருடம்)

48. இழப்பறிகை (நட்டம்)

49. மறைத்ததையறிதல் (முஷ்டி)

50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)

51. வான்செலவு (ஆகாய கமனம்)

52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)

53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)

54. மாயச்செய்கை (இந்திரசாலம்)

55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)

56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)

57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)

58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)

59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)

60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)

61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)

62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)

63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)

64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

திருக்குற்றாலக் குறவஞ்சி


திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. 

தமிழ்நாட்டின் தென்கோடியில் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் எனும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து அங்குள்ள ஈசரான குற்றாலநாதரைப் போற்றி, தெய்வக் காதல் பற்றிய கற்பனையை அமைத்துப் பாடப்பெற்ற நூல் ஆகும்.
குறவஞ்சி நாடகம் என்று போற்றப்படும் இந்நூல் வடகரை அரசனான சின்னணஞ்சாத் தேவரின் அவைப்புலவராக விளங்கிய திரிகூடராசப்பக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் திருநெல்வேலி மாவட்டம் தென்காசிக்கு அருகில் உள்ள மேலகரம் என்னும் ஊரைச் சார்ந்தவர் (இவர் திருவாவடுதுறை ஆதினத் தலைவராக விளங்கிய சுப்பிரமணிய தேசிகரின் சகோதரர் ஆவார்). திருக்குற்றாலநாதாரின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட இந்நூல் அன்றைய மதுரை மன்னனான முத்துவிஜரங்க சொக்கநாத நாயக்கரின் பாராட்டையும் பரிசையும் பெற்றது.

குறவஞ்சி நாடகத்திற்கென வரையறை செய்யப்பட்ட கதை அமைப்போடே இந்நூலும் விளங்குகிறது. குற்றாலநாதரின் திருவுலா எழுச்சியைக் குறித்து முன்னரே கட்டியங்காரன் கூறுகிறான். திருவுலா தொடங்குகிறது மூவர் தமிழும் நான்மறைகள் முழங்க குற்றலாநாதர் வீதியில் உலா வருகிறார். குற்றாலநாதாரின் திருவுலாவைக் காண பெண்கள் எழுந்து வருகின்றனர். அப்பொழுது பந்து ஆடிக்கொண்டிருந்த வசந்தவல்லி (கதைத்தலைவி) என்பவளும் திருவுலாக்காண வருகிறாள். தோழியின் வாயிலாக இறைவனைப் பற்றி அறிந்த வசந்தவல்லி இறைவன் மீது காதல்கொண்டு தோழியைத் தூதனுப்புகிறாள். இந்நிலையில் குறிசொல்லும் குறத்தி தெருவழியே வருகிறாள். தோழி அவளைக் குறிசொல்ல அழைத்தவுடன் குறப்பெண் தன்நாட்டு மலைவளமும் தொழில்வளமும் சிறப்பாக எடுத்துக்கூறுகிறாள். பின் வசந்தவல்லி கையைப் பார்த்து அவள் குற்றாலநாதர் மீது காதல் கொண்டுள்ள செய்தியையும், (தலைவனின்) குற்றாலநாதரின் புகழ்பற்றியும் எடுத்துச்சொல்லி வசந்தவல்லியின் எண்ணம் நிறைவேறும் என்று குறி சொல்லி பாpச பெறுகிறாள் குறத்தி சிங்கி. அவள் கணவன் சிங்கன் அவளைக் காணத் தேடிவருகிறான். குறத்தியைக் கண்ட சிங்கனிடம் குறத்தி நடந்ததைச் சொல்ல இருவரும் குற்றாலநாதரைப் பாடி இன்பம் அடைகின்றனர். இவ்வாறு கதை முடிகிறது.

குறவஞ்சி நூல்களுள் பாராட்டுக்குரியதாக விளங்கி வருவதும், இன்றும் நாட்டிய நாடகமாக மேடைகளில் நடிக்கப்பட்டு வருவதும், இக்குற்றாலக் குறவஞ்சி ஆகும். திரிகூடராசப்பக்கவிராயர் குற்றாலத்தின் மீது தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமகஅந்தாதி முதலிய நூல்களை இயற்றியிருந்தாலும் இன்று பலரும் விரும்பிப் படிப்பது அவருடைய குறவஞ்சி ஒன்றே. குற்றாலக்குறவஞ்சியானது இறைவன்மீது பாடப்பெற்றதால் திருக்குற்றலாக்குறவஞ்சி எனும் பெயர் பெற்றது. நாடகச்சுவை நிரம்பிய இந்நூல் சந்த (ஓசை) நயத்தோடு கூடிய பாடல்களையும் கற்பனை நயம் கொண்ட பாடல்களையும் நிரம்பப் பெற்றுள்ளது. சான்றாக வசந்தவல்லி பந்தாடும் பாங்கைப்பற்றி எடுத்துரைக்கும்,

செங்கையில் வண்டு கலின்கலின் என்று
செயம் செயம் என்றாட இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாடஇரு
கொங்கை கொடும்பகைவென்றனம் என்று
குழைந்து குழைந்தாடமலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த
சவுந்தார் பந்து பயின்றனளே

என்ற பாடலைக் கூறலாம். இதைப்போல் சந்தநயம் கொண்ட இன்னும் பலபாடல்கள் இந்நூலாசிரியரால் இயற்றப்பட்டுள்ளன.

குற்றாலக் குறவஞ்சியில் தமிழகத்தின் காட்டு விலங்குகளைப் பற்றியும் செடியினங்களைப் பற்றியும் மிகப்பல குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

சீன, அரேபிய மொழிகளில் திருக்குறள்


முழுமை பெற்றது மொழிபெயர்ப்பு பணி


உலக மொழிகளில், தமிழ் இலக்கிய படைப்புகளை கொண்டு வரும் வகையில், தமிழ் படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. அதன் முதற்கட்டமாக, சீன, அரேபிய மொழிகளில் திருக்குறள், மொழிபெயர்க்கப்பட்டு, வெளியிடும் வகையில் தயார் நிலையில் உள்ளது.



தமிழ் மொழி, தமிழ் இலக்கிய சிறப்பை, உலக நாடுகளுக்கு உணர்த்த, தமிழின் மிகச்சிறந்த நூல்களை, பல்வேறு மொழிகளில், மொழிபெயர்க்கும் பணிகளில், தமிழ் வளர்ச்சித் துறை ஈடுபட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக, திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகள், மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. திருக்குறளின் ஒட்டுமொத்த குறள்களும், பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் தேர்ந்தெடுத்தப் படைப்புகளும், மொழிபெயர்க்கப்படுகின்றன. பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளை, சீன மொழிகளில் மொழிபெயர்க்க, 60 லட்சம் ரூபாய்; அரபு மொழியில் மொழி பெயர்க்க, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், சீன, அரேபிய மொழிகளில், திருக்குறளை மொழிபெயர்க்கும் பணி, முற்றிலும் முடிவடைந்து, வெளியிட தயார் நிலையில் உள்ளது. கூடிய விரைவில், பாரதியார், பாரதிதாசன் படைப்புகளும், சீன, அரேபிய மொழிகளில் தயாராகி விடும் என, தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலம் கையகப்படுத்தும் மசோதா


நிலம் கையகப்படுத்தும் மசோதா என்றால் என்ன?


உள்கட்டமைப்புத் திட்டங்கள், தொழில் திட்டங்களில் பல நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கலால் நின்று போய்விடுகின்றன. இதை தவிர்க்க 117 ஆண்டுகளுக்கு முந்தைய நில கையகப்படுத்தும் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருகிறது மத்திய அரசு. இந்த மசோதாவுக்கு நியாயமான இழப்பீடு உரிமை-வெளிப்படையான நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு மற்றும் மறுஒப்பந்த சட்டம்-2012' என்ள பெயரிடப்படுள்ளது. நிலம் கையகப்படுத்தல் சட்டம்-1894 ஆம் ஆண்டுக்குப் பிறகு திருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

எவ்வளவு இழப்பீடு கிடைக்கும்? 

இந்த மசோதா நிறைவேறினால் தனியார் நிலத்தை, அரசு கையகப்படுத்தும்போது, ஊரகப் பகுதியில் நிலத்தின் மதிப்பில் 4 மடங்கும், நகர்ப்பகுதியில் 2 மடங்கும் இழப்பீடு கிடைக்கும். 66% பேர் ஒப்புதல் இருந்தால்தான் நிலத்தை எடுக்க முடியும் நிலம் தருவோரில் 66% பேரின் ஒப்புதல் இருந்தால்தான் அவற்றை கையகப்படுத்த முடியும்.

விளைநிலைத்துக்கு தடை

இம்மசோதா நிறைவேறினால் நீர்ப்பாசனம் மிக்க பயிர் சாகுபடி செய்யும் நிலம் மற்றும் விவசாய நிலத்தைக் கையகப்படுத்த அனுமதிக்காது

பணவீக்கம்


பணவீக்கம் என்றால் என்ன? எதை வைத்து முடிவு செய்கிறார்கள்? எதனால் வருகிறது?


காற்று ஊத ஊத, பலூன் வீக்கம் அடைகிற மாதிரி, விலைகள் வீங்குவதுதான் பணவீக்கம். இன்பிளேஷன்.



முன்பு 100 ரூபாய் கொடுத்து வாங்கிய பொருட்களின் விலை 105 ஆகிவிட்டால், பணவீக்கம் ஐந்து சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. அதே பொருட்களை வாங்குவதற்கு 109 ரூபாய் தேவைப்பட்டால், பணவீக்கம் ஒன்பது சதவிகிதம். 



மாதம் ரூ.3000 செலவு செய்யும் குடும்பத்திற்கு பணவீக்கம் 9% ஆனால், செலவிற்கு ரூ.3270 அதாவது ரூ.270 கூடுதலாக தேவைப்படும். இல்லாதவர்கள் எப்படிச் சமாளிப்பது என்கிறீர்களா? இரண்டே வழிகள்தான். ஒன்று, வாங்கும் அளவைக் குறைத்துக்கொள்வது (அடிக்க வராதீர்கள்). அல்லது கடன் வாங்குவது ( இதற்கு அதுவே மேலோ!).

தற்சமயம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவாக 8
சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கிறது பணவீக்கம். நம் நாட்டில்தான் என்றில்லை. இப்போது உலகெங்கிலுமே விலைவாசி உயர்வுதான் பெரிய பிரச்னை. சீனா 8.7%, ரஷ்யா 12 % க்கும் மேல், சவுதி அரேபியா 9.8%, ஹாங்காங், சிங்கப்பூர் எல்லாம் 6% க்கும் மேல். இவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவதுபோல, வியட்நாமின் பணவீக்கம் 25%.

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India)

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) 1935இல் தொடங்கப்பட்ட இந்தியாவின் நடுவண் வங்கியாகும். 1949இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே அரசின் கருவூலம் ஆகும். நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவதோடு, இவ்வங்கி நாட்டின் பல பொருளாதார நடவடிக்கைகளை இயக்கியும் வருகிறது. பொது மக்கள் மற்ற வங்கிகளைப் பயன்படுத்துவது போல ரிசர்வ் வங்கியைப் பயன்படுத்த முடியாது. ஆனால் தனது முகமை (ஏஜன்ட்) ஏற்றுச் செயலாற்ற பல வங்கிகளை இது அமைத்துள்ளது. அவ்வகையில் பாரத ஸ்டேட் வங்கி இதன் முகமை வங்கி ஆகும். ரிசர்வ் வங்கியைப் பொது மக்கள் நேரடியாகப் பயன்படுத்தாவிட்டாலும் பொது மக்கள் நடத்தும் மற்ற வங்கிகளோடு தொடர்பு கொண்டு அவற்றை கண்காணித்தும் வருகிறது. இந்திய நாட்டின் நாணய மதிப்பு(அந்நியச் செலாவணிக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு) ரிசர்வ் வங்கி கையிருப்பில் வைத்திருக்கும் தங்கம், ரொக்கம் ஆகியவற்றைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது. முதலில் கொல்கத்தா நகரை தலைமையகமாக கொண்டு விளங்கிய இவ்வங்கி 1937-ஆம் ஆண்டு முதல் மும்பை நகரை தலைமையகமாக கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கிக்கு இந்தியா முழுவதும் 22 வட்டாரக் கிளைகள் உள்ளன. தனியாரால் துவங்கப்பட்ட இவ்வங்கியானது 1949 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது.தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனர் துவ்வூரி சுப்பராவ் ஆவார்.

பாரத் நிர்மாண் திட்டம் என்றால் என்ன?

கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட கிராமப்புற கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் கிராமச்சாலைகள், குடிநீர், நீர்ப்பாசனம், குடியிருப்பு வசதி, கிராம தொலைபேசி, மின்சாரம் ஆகியவற்றை நிர்மாணித்து மேம்படுத்த உருவாக்கப்பட்ட பாரத் நிர்மான் திட்டம்.

Saturday, 24 August 2013

ஐக்கிய நாடுகள்


ஐக்கிய நாடுகள், அல்லது ஐநா அல்லது யூஎன், என்பது,நாடுகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல்,கலிபோர்னியாவிலுள்ள, சான் பிரான்சிஸ்கோவில்தொடங்கப்பட்டது. எனினும், 51 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பொதுச்சபை, ஜனவரி 10 1946இல், இலண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரின் மெதடிஸ்த மத்திய மண்டபத்தில் கூடியது. 1919 இலிருந்து 1946 வரை, இதற்கு முன்னோடியாகக் கொள்ளக்கூடிய, இதையொத்த தேசங்களின் அணி (League of Nations) என்னும் அமைப்பு இருந்து வந்தது. ஐநா அங்கத்தினர் தகுதி, ஐநா சாசனத்தில் உள்ள நிபந்தனைகளை ஏற்று, அந்நிபந்தனைகளை செயல்படுத்த முடியும் என ஐநாவினால் நம்பத்தகுந்த எல்லா 'சமாதான விரும்பி' நாடுகளுக்கும் உண்டு. பாதுகாப்புச் சபையின் பரிந்துரைப்படி, பொதுச்சபை அனுமதி பற்றித் தீர்மானம் எடுக்கிறது. செப்டெம்பர் 2010 நிலவரப்படி, 192 உறுப்புநாடுகள் இருந்தன. சூலை 9, 2011 இல் தெற்கு சூடான் சுதந்திரம் பெற்று ஐ.நா வில் இணைந்ததுடன் தற்போது வரை 193 உறுப்பு நாடுகள் உள்ளன.

நோக்கங்கள்:

• கூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆக்கிரமிப்புகளை ஒடுக்குதல்;
• பன்னாட்டுச் சட்டங்களின்படி நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்துதல்.
• மக்களின் சம உரிமைகளையும் சுயநிர்ணய உரிமைகளையும் மதித்தல்
• மனிதனின் உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் காத்து, இன மொழி அல்லது சமய வேறுபாடுகளை நீக்கிப் பன்னாடுகளின் சமுதாய பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல்.
• இந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சமமானவர்களே.
• உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
• உறுப்பு நாடுகள் எக்காரணம் கொண்டும் பிற நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடக் கூடாது.

ஐக்கிய நாடுகள் முறைமை:

ஐக்கிய நாடுகள் முறைமை 1994 ஆம் ஆண்டுக்கு முன்னர் பின்வரும் 6 முதன்மை அமைப்புகளைக் கொண்டிருந்தது:
• ஐக்கிய நாடுகள் பொதுச் சபை
• ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை
• ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை
• ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம்
• ஐக்கிய நாடுகள் செயலகம்
• அனைத்துலக நீதிமன்றம்

1994 ஆண்டில், ஐக்கிய நாடுகள் அவையின் கடைசிப் பொறுப்பாட்சிப் பகுதியான பலோ (Palau) சுதந்திரம் பெற்ற பின்னர் ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம் செயலற்றுப் போனது. இப்போது ஏனைய ஐந்து அமைப்புக்கள் மட்டுமே உள்ளன. இந்த ஐந்து அமைப்புக்களுள் நான்கு நியூ யார்க் நகரில் உள்ள அனைத்துலக ஆட்சிப்பகுதியுள் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலகத்தில் இயங்குகின்றன. அனைத்துலக நீதிமன்றம் ஹேக் நகரில் உள்ளது. 

மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த மேலும் சில முக்கியமான அமைப்புக்கள் செனீவா, வியன்னா, நைரோபி போன்ற நகரங்களில் இருந்து இயங்கி வருகின்றன. ஐக்கிய நாடுகள் அவையுடன் தொடர்புடைய மேலும் பல அமைப்புக்கள் உலகின் பல்வேறு இடங்களில் உள்ளன.

அரசுகளுக்கு இடையிலான கூட்டங்களிலும், ஆவணங்களிலும் ஆறு மொழிகள் அலுவல் மொழிகளாகப் பயன்பட்டு வருகின்றன. இவை, அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியம், எசுப்பானியம் என்பன. செயலக வேலைகளுக்கு ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகள் பயன்பட்டு வருகின்றன. ஆறு அலுவல் மொழிகளுள் நான்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடுகளின் தேசிய மொழிகள். இவற்றுக்குப் புறம்பாக, அதிகமான நாடுகளில் தேசிய மொழிகளாக உள்ள எசுப்பானியமும், அரபு மொழியும் அலுவல் மொழிகளாகச் சேர்க்கப்பட்டன. இவற்றுள் எசுப்பானியம் 20 நாடுகளிலும், அரபு மொழி 26 நாடுகளிலும் அலுவல் மொழிகளாக உள்ளன. இம்மொழிகளுள் ஐந்து ஐக்கிய நாடுகள் அவை நிறுவப்பட்ட போதே அலுவல் மொழிகளாகத் தெரிவு செய்யப்பட்டன. அரபு மொழி 1973 ஆம் ஆண்டில் அலுவல் மொழியாக்கப்பட்டது. ஐநாவின் கைநூலில் பிரித்தானிய ஆங்கிலமும், ஆக்சுபோர்டு எழுத்துக் கூட்டலுமே ஆங்கிலத்துக்கு நியமமாகச் சொல்லப்படுகின்றன. 

எளிமையாக்கிய சீனமே சீன மொழிக்குரிய நியம எழுத்து முறையாகக் கொள்ளப்படுகின்றது. 1971 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்புரிமை சீனக் குடியரசிடம் இருந்து,மக்கள் சீனக் குடியரசுக்குக் கைமாறியபோது சீன எழுத்துமுறைக்கான நியமம் மரபுவழிச் சீன எழுத்து முறையில் இருந்து, எளிமையாக்கிய சீன எழுத்து முறைக்கு மாற்றப்பட்டது.

பொதுச் சபை:

பொதுச் சபையே ஐக்கிய நாடுகள் அவையின் முதன்மையான கலந்தாராய்வு அவை ஆகும். எல்லா உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கிய பொதுச் சபை, ஆண்டுக்கு ஒரு முறை, உறுப்பு நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்படும் தலைவர் ஒருவரின் தலைமையில் கூடுகிறது. அமர்வின் தொடக்கத்தில் இரண்டு வாரகாலம் எல்லா உறுப்பு நாடுகளும் அவையில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. மரபுவழியாக பொதுச் செயலர் முதலாவது பேச்சை நிகழ்த்த, அடுத்ததாக அவைத் தலைவர் பேசுவார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதல் அமர்வு 1946 ஆம் ஆண்டு சனவரி 10 ஆம் தேதி இலண்டனில் இடம்பெற்றது. 51 நாடுகளின் பேராளர்கள் இந்த அமர்வில் பங்குபற்றினர்.

பொதுச் சபை முக்கியமான விடயங்களில் வாக்களிக்கும்போது, அமர்வில் கலந்து கொண்டு வாக்களித்தவர்களுள்மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. மேற்சொன்ன முக்கியமான விடயங்களுக்கு எடுத்துக்காட்டுகளாக, அமைதி, பாதுகாப்பு என்பன தொடர்பான சிபாரிசுகள்; அமைப்புகளுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்தல்; உறுப்பினர்களை அனுமதித்தல், இடை நிறுத்துதல், வெளியேற்றுதல்; வரவு செலவு விடயங்கள் போன்றவற்றைக் காட்டலாம். பிற விடயங்கள் சாதாரண பெரும்பான்மை மூலமே தீர்மானிக்கப்படுகின்றன. ஒவ்வொரு உறுப்பு நாட்டுக்கும் ஒரு வாக்கு உண்டு. வரவு செலவு விடயங்கள் தவிர்ந்த பிற தீர்மானங்கள் உறுப்பு நாடுகளைக் கட்டுப்படுத்துவதில்லை. பாதுகாப்புச் சபையின் கீழ் வரும் அமைதி, பாதுகாப்பு என்பன தொடர்பானவை தவிர்ந்த பிற விடயங்கள் தொடர்பில் பொதுச் சபை சிபாரிசுகளை வழங்க முடியும்.

பாதுகாப்புச் சபை:

நாடுகளுக்கிடையே அமைதியையும் பாதுகாப்பையும் பேணவேண்டிய பொறுப்பு பொதுச்சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பிற உறுப்புக்கள் உறுப்பு நாடுகளுக்கு சிபாரிசுகளை மட்டுமே வழங்க முடிகின்ற அதேவேளை, ஐக்கிய நாடுகள் பட்டயம் 25 ஆவது துணைப் பிரிவின்படி, பாதுகாப்புச் சபைக்கு, உறுப்பு நாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் உண்டு. இத்தகைய தீர்மானங்கள், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைத் தீர்மானங்கள் என அறியப்படுகின்றன.

பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்களாகப் 15 நாடுகள் உள்ளன. இவற்றுள் சீனா, பிரான்சு, உருசியா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய ஐந்தும் நிரந்தர உறுப்பு நாடுகள். ஏனைய 10ம் தற்காலிக உறுப்பினர். 10 தற்காலிக உறுப்பு நாடுகளின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே. இவ்வுறுப்பினர் பிரதேச அடிப்படையில்பொதுச் சபையில் இடம்பெறும் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். பாதுகாப்புச் சபையின் தலைமைப் பதவி ஒவ்வொரு மாதமும் பெயர் அடிப்படையிலான ஆங்கில அகர வரிசைப்படி சுழற்சி முறையில் சபையின் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படுகின்றது. நடைமுறை சார்ந்த தீர்மானங்களைத் தவிர்த்துத் தமக்கு ஏற்பு இல்லாத தனித் தீர்மானங்களை நிறைவேற்ற விடாமல் தடுக்கக்கூடிய தடுப்பு அதிகாரம் (வீட்டோ) நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு உண்டு. ஆனாலும், இத்தீர்மானங்கள் குறித்த விவாதங்களைத் தடுக்கும் அதிகாரம் கிடையாது.

செயலகம்:

ஐக்கிய நாடுகள் செயலகம், பொதுச் செயலாளரின் தலைமையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிசார் அலுவலர்களின் துணையுடன் இயங்குகின்றது. இது ஐக்கிய நாடுகள் அவையின் அமைப்புக்களின் கூட்டங்களுக்குத் தேவையான ஆய்வுகளை முன்னெடுப்பதுடன், தகவல்களையும், பிற வசதிகளையும் வழங்குகிறது. அத்துடன், ஐநா பாதுகாப்புச் சபை, ஐநா பொதுச் சபை, ஐநா பொருளாதார, சமூக அவை ஆகியவையும் பிற ஐநா அமைப்புக்களும் வழங்கும் வேலைகளையும் ஐக்கிய நாடுகள் செயலகம் நிறைவேற்றுகின்றது. பரந்த புவியியல் பகுதிகளிலிருந்தும் வேலைக்கு அமர்த்த வேண்டியதன் முக்கியத்துவத்தைக் கவனத்தில் கொண்டும், உயர்ந்த செயற்றிறன், தகுதி, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையிலும் செயலகத்தின் அலுவலர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் பட்டயம் கூறுகின்றது.

ஐநா பட்டயத்தின்படி செயலக அலுவலர்கள் ஐநா தவிர்ந்த வேறெந்த அமைப்பிடம் இருந்தும் அறிவுறுத்தல்களை எதிர்பார்க்கவோ, பெற்றுக்கொள்ளவோ கூடாது. உறுப்பு நாடுகள் செயலகத்தின் அனைத்துலகப் பட்டயத்தை மதித்து நடப்பதுடன், செயலகத்தின் அலுவலர்கள் மீது எவ்வித செல்வாக்கையும் செலுத்த முயலக்கூடாது. அலுவலர்களைத் தெரிவு செய்யும் பொறுப்பு பொதுச் செயலாளருக்கு மட்டுமே உரியது.

பொதுச் செயலாளரின் கடமைகளுள், பன்னாட்டுத் தகராறுகளைத் தீர்க்க உதவுதல், அமைதிப்படைச் செயற்பாடுகளை நிர்வகித்தல், அனைத்துலக மாநாடுகளை ஏற்பாடு செய்தல், பாதுகாப்புச் சபைத் தீர்மானங்களை நிறைவேற்றுவது தொடர்பிலான தகவல்களைச் சேகரித்தல், பல்வேறு முன்னெடுப்புக்கள் குறித்து உறுப்பு நாட்டு அரசுகளுடன் ஆலோசித்தல் போன்றவை அடங்குகின்றன. இவை தொடர்பான முக்கிய அலுவலகங்களுள் மனிதாபிமான அலுவல்கள் ஒருங்கிணைப்பாளர் அலுவலகம், அமைதிகாப்புச் செயற்பாட்டுப் பிரிவு அலுவலகம் என்பவை உள்ளன. அனைத்துலக அமைதிக்கு இடையூறாக அமையக்கூடும் என அவர் கருதும் எந்த ஒரு விடயத்தையும், பொதுச் செயலாளர் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்குக் கொண்டுவரலாம்.

பொதுச் செயலாளர்:

ஐநா செயலகத்தின் தலைமைப் பொறுப்பில் பொதுச் செயலாளர் உள்ளார். நடைமுறையில், ஐநாவின் பேச்சாளராகவும், முன்னணி நபராகவும் இருப்பவர் இவரே. தற்போதைய பொதுச் செயலாளராக இருக்கும் பான் கீ-மூன் 2007 ஆம் ஆண்டில் அப்போதைய பொத்ஜுச் செயலாளரான கோபி அன்னானிடம் இருந்து பதவியைப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பின்னர் இரண்டாவது முறையும் தெரிவு செய்யப்பட்ட இவர் 2016 ஆண்டின் இறுதிவரை பொறுப்பில் இருப்பார்.

"உலகின் மட்டுறுத்துனர்" என பிராங்க்ளின் ரூசுவெல்ட்டினால் கருதப்பட்ட இப்பதவியை, அமைப்பின் "தலைமை நிர்வாக அலுவலர்" என ஐநா பட்டயம் வரையறுக்கிறது. எனினும், உலக அமைதிக்கு ஊறு விளைவிக்கக்கூடியது எனக் கருதும் எந்த விடயத்தையும் பொதுச் செயலாளர் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்குக் கொண்டு வரலாம் என்று ஐநா பட்டயம் கூறுவதன் மூலம் உலக அளவில் நடவடிக்கைக்கான பெரிய வாய்ப்பு இப்பதவிக்குக் கிடைக்கிறது. ஐநா அமைப்பின் நிர்வாகியாக இருக்கும் அதே வேளை, உறுப்பு நாடுகளிடையேயான தகராறுகள் தொடர்பிலும், உலக விடயங்களில் உறுப்புநாடுகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதிலும், ஒரு இராசதந்திரியாகவும், நடுவராகவும் செயற்படுவதன் மூலம், இப்பதவி ஒரு இரட்டைப் பொறுப்புக்கொண்ட ஒன்றாக உருவாகியுள்ளது. 

பொதுச் செயலாளர், ஐநா பாதுகாப்புச் சபையின் பரிந்துரையுடன், பொதுச் சபையினால் தெரிவு செய்யப்படுகிறார். இவ்விடயத்தில் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகள் தமது தடுப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. கோட்பாட்டளவில், பாதுகாப்புச் சபையின் பரிந்துரையை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் ஏற்றுக்கொள்ளாமல் விடலாம். ஆனாலும், இந்நிலை இதுவரை ஏற்பட்டதில்லை. இப்பதவிக்கான வரன்முறைகள் எதுவும் கிடையா. எனினும். இப்பதவியை ஐந்தாண்டுகள் கொண்ட ஒன்று அல்லது இரண்டு பதவிக்காலங்களுக்கு ஒருவர் வகிக்கலாம் என்பதும், புவியியற் பகுதி அடிப்படையிலான சுழற்சி முறையில் இப்பதவி வழங்கப்பட வேண்டும் என்பதும், இப்பதவியில் இருப்பவர் நிரந்தர உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவராக இருக்கக்கூடாது என்பதும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.

பொது அறிவு

1. தமிழகத்தின் முதல் கவர்னர் – ஜார்ஜ் மெக்கார்டினி

2. தமிழகத்தின் முதல் கவர்னர் – ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை (சுதந்திரத்திற்கு பிறகு)

3. தமிழகத்தின் முதல் இந்திய கவர்னர் – கிருஷ்ண கிமார சிங்ஜி பவசிங்ஜி

4. தமிழகத்தின் முதல் பெண் கவர்னர் – செல்வி. பாத்திமா பீவி

5. இந்தியா குடியரசு ஆனபோது தமிழக ஆளுநராக இருந்தவர் – கிருஷ்ண குமாரசிங்ஜி பவசிங்ஜி

6. இரண்டு முறை தமிழகத்தின் ஆளுநராக பதவி வகித்தவர் – சுர்ஜித்சிங் பர்னாலா

7. தமிழகத்தில் நீண்ட காலம் ஆளுநராக இருந்தவர் – சுர்ஜித்சிங் பர்னாலா (நவம்பர் 3, 2004 – ஆகஸ்ட் 31, 2011, சுமார் 6 ½ ஆண்டுகள்)

8. தமிழகத்தின் குறுகிய காலம் ஆளுநராக இருந்தவர் – எம்.எம்.இஸ்மாயில் (அக்டோபர் 27, 1980 முதல் நவம்பர் 4, 1980 வரை, 9 நாட்கள் தற்காலிக ஆளுநர்)

9. தமிழ்நாட்டில் முதல் முதலமைச்சர் – திரு. சுப்புராயலு ரெட்டியார்

10. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தமிழக முதல்வராக இருந்தவர் – திரு. ஒமந்தூர் ராமசாமி ரெட்டியார்

11. சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் முடிந்த பிறகு தமிழக முதல்வரானவர் – திரு. இராஜாஜி

12. தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன்

13. தமிழகத்தில் மிக நீண்டகாலம் (தொடர்ந்து) முதல்வராக இருந்தவர் – எம்.ஜி.ராமச்சந்திரன் (ஜூன் 30, 1977 முதல் டிசம்பர் 24, 1987 வரை – 10 ஆண்டுகள் 5 மாதங்கள் 25 நாட்கள்)

14. மிகக்குறுகிய காலம் முதல்வராக இருந்தவர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (ஜனவரி 17, 1988 முதல் ஜனவரி 30, 1988 வரை முதல்வராக இருந்தார் – 24 நாட்கள்)

15. தமிழகத்தில் மிக அதிகமுறை முதல்வர் பதவி வகித்தவர் – திரு. மு. கருணாநிதி (5 முறை) 
10 பிப்ரவரி 1969 – 4 ஜனவரி 1971
15 மார்ச் 1971 – 31 ஜனவரி 1976 
27 ஜனவரி 1989 – 30 ஜனவரி 1991
13 மே 1996 – 13 மே 2001
13 மே 2006 – 13 மே 2011

16. தேர்தல்களில் போட்டியிட குறைந்தபட்ச வயது வரம்பு:
மக்களவை தேர்தல் – 25
மாநிலங்களவை தேர்தல் – 30
சட்டப்பேரவை தேர்தல் – 25
சட்ட மேலவை தேர்தல் – 30
உள்ளாட்சி அமைப்பு தேர்தல் – 21
வாக்களுக்கும் வயது – 18

17. வேட்பாளரின் டெபாசிட் தொகை

பொது பிரிவினர்:
மாநில சட்டமன்ற தேர்தல் – ரூ.10,000/-
நாடாளுமன்ற தேர்தல் – ரூ.25,000/-
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்:
மாநில சட்டமன்ற தேர்தல் – ரூ.5,000/-
நாடாளுமன்ற தேர்தல் – ரூ.12,500/-

18. கிராமசபை கூடும் நாட்கள்:
குடியரசு தினம் – ஜனவரி 26
தொழிலாளர் தினம் – மே 1
சுதந்திர தினம் – ஆகஸ்ட் 15
காந்தி ஜெயந்த் – அக்டோபர் 2

19. தமிழ்நாட்டில் மொத்தம் 12,620 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.

20. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 421 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.

21. தமிழ்நாட்டில் அதிக கிராம பஞ்சாயத்துக்களைக் கொண்ட மாவட்டம் விழுப்புரம். இதில் 1104 கிராம பஞ்சாயத்துக்கள் அமைந்துள்ளன.

22. தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையில் கிராம பஞ்சாயத்துகளைப் பெற்றுள்ள மாவட்டம் நீலகிரி. இதில் 35 கிராம பஞ்சாயத்துகள் மட்டுமே உள்ளன.

Man can set foot on Mars in 15 years: NASA scientist


Anita Sengupta impressed with Indian children’s knowledgeof space missions

Man could set foot on Mars in the next 5 to 15 years, says Anita Sengupta, an Indian origin scientist at the National Aeronautics and Space Administration (NASA), US.

“Future manned missions to Mars are an eminently doable feat from the perspective of a scientific endeavour. But a lot depends on sustained adequate budgetary support, supply of resources and a (political) will for the mission,” said Dr. Sengupta, a scientist with the Jet Propulsion Laboratory, a California-based field centre of NASA.

Dr. Sengupta, who fronted a team of scientists that developed a robust parachute for the smooth landing of NASA’s car-sized robotic rover ‘Curiosity’ on Mars, is currently in the city under the auspices of the US Consulate in Chennai to get children and youth excited in space exploration. Her trip to cities, which include her father’s hometown Kolkata, Mumbai and Bangalore, coincides with the anniversary of the Mars mission.

The technologies for orbital, landing rover and human missions have some level of similarity, but they also vary. “Technically, there could be some similarity, but, for a manned mission, we need to adapt the spacecraft to a hypersonic aerodynamic acceleration regime. We might also need a much larger vehicle than the one we used for Curiosity,” she said during an interaction with journalists.

An aerospace engineering expert who worked on the Entry, Descent and Landing part of the Curiosity mission, Dr. Sengupta said one of the many challenges was to design a parachuting system that could deal with a heavier payload and larger drag area.

“Curiosity has been doing such a fine job of exploring Mars since it landed on Gale Crater a year ago that it has taken us longer than scheduled to move it to the foothills of Mount Sharp,” she said.

The scientist is currently heading a project to build an International Space Station to observe new quantum phenomena. NASA’s Cold Atom Laboratory Mission that will also explore the state of matter in a microgravity regime is on course to set up the space station by 2016, she said.

“The idea is to create a lab floating in the space with tests carried out through remote control from earth,” Dr. Sengupta said.

Of her experience with children from India, Ms. Sengupta said she was surprised at how much they were familiar with space missions, especially those led by US. “Some of the questions I got were very technical in nature,” she said.

The next time she comes here on an educational outreach initiative, she would like to address children from smaller towns and rural areas, the scientist said.

24 translators receive Sahitya Akademi award


It was an awards function to celebrate the best translated works from across the country but speakers at the event organised in Chennai by Sahitya Akademi also focussed on the lack of patronage for regional literature and its translations.

Tamil writer Ashokamitran, while appreciating the efforts of the 24 recipients of the Sahitya Akademi’s ‘Translation Prizes 2012’ and appreciating the Akademi’s efforts for conducting the event outside of New Delhi for the first time, also pointed out that the patronage for translated books had been coming down in recent decades.

Mr.Asokamitran pointed out that he had himself seen the royalties from translated works dwindle in recent years.

On the sidelines of the event, Sahitya Akademi president Vishwanath Prasad Tiwari agreed with Tamil writer Mr.Asokamitran but said the same could probably be extended to all books. The winners of the Sahitya Akademi translation prizes 2012 are: Pankaj Thakur (Assamese); Oinam Nilkantha Singha (Bengali), Swarna Prabha Chainary (Bodo), Sashi Pathania (Dogri); M.L.Thangappa (English); Shalini Chandrakant Topiwala (Gujarati); Ramji Tiwari (Hindi); K.K.Nair and Ashok Kumar (Kannada); Abdul Ahad Hajini (Kashmiri); Gurunath Shivaji Kelekar (Konkani); Mahendra Narayan Ram (Maithili), Anand (P.Sachidanandan) (Malayalam); Elangbam Sonamani Singh (Manipuri); Satish Kumar Verma (Punjabi); Poorn Sharma ‘Pooran’ (Rajasthani), Bhagirathi Nanda (Sanskrit); Rabindra Nath Murmu (Santali); Hiro Thakur (Sindhi), G.Nanjundan (Tamil), R.Venkateswara Rao (Telugu) and Ather Farouqui (Urdu).

Friday, 23 August 2013

குரூப் 4 தேர்வில் வெற்றி பெற டிப்ஸ்


ஆக.,25 ல் நடக்கும் குரூப் 4 தேர்வை, எதிர்கொள்வது குறித்து, மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் வழங்கும் டிப்ஸ்:

* தேர்வு நெருங்கும் நேரத்தில் புதிய பாடங்களை படிக்காமல், படித்த பாடங்களை திரும்பவும் படியுங்கள்.

* புதிய தேர்வு முறையில், "ஆப்டிடியூட்' பகுதியில் 25 வினாக்கள் கேட்கப்படுகிறது. எண்களின் வகைகள் தொடர்புடைய வினாக்கள், கனஅளவு பகுதி சூத்திரங்களை நினைவுப்படுத்தவும்.

* வரலாறு பாடத்தில் உள்ள காலவரிசை, முக்கிய ஆண்டுகள், சங்க காலம் முதல் சுதந்திரம் பெற்ற காலம் வரையான போர்களின் ஆண்டுகள், இடம், போரிட்ட நபர்களை தெரிந்திருக்க வேண்டும்.

* உலகை வலம் வந்த பயணிகள், அவர்களின் இந்திய வருகையின் போது இருந்த மன்னர்கள், வரலாற்று நூல்கள், நூலாசிரியர், பத்திரிகைகள், சமய சீர்திருத்த இயக்கம் இவற்றை படிக்கவும். 

* இயற்பியல் பகுதியில் அலகு, விதிகள், அறிஞர்களின் கண்டுபிடிப்புகள், அளவிடும் கருவிகள், பயன்கள், மதிப்புகளை பார்க்கவும்.

* வேதியியல் பகுதியில் வேதிப்பெயர், சமன்பாடு, முக்கிய அமிலங்கள், தனிம வரிசை அட்டவணை சிறப்பம்சம், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வேதிச் சேர்மங்களை படிக்க வேண்டும்.

* தாவரவியல் பகுதியில் செல்லின் அமைப்பு, தாவர, விலங்கு செல்களில் உள்ள நுண்ணுறுப்பின் பணி, தாவர பாகம், வளர்ச்சி தொடர்புடைய காரணிகள், வைரஸ், பாக்டீரியாவில் ஏற்படும் தாவர நோய்களை பட்டியலிடவும்.

* வகைபாட்டின் வளர்ச்சி, முதுகு நாணற்றவை தொகுதி, உதாரணங்கள் அறிவியல் பெயர், குரோமோசோம் நிலையை படிக்கவும்.

* மனித உடலியல் பகுதியில் ரத்தவகை, ரத்த செல்களின் சிறப்பம்சம், இருதய அமைப்பு, செயல்படும் விதம், நாளமில்லா சுரப்பி பண்பு, பயன், விட்டமின் பற்றிய தகவல்கள், எலும்புகளின் எண்ணிக்கை, மூளையின் அமைப்பு, பணி, வைரஸ், பாக்டீரியா, புரோட்டோசோவா, பூஞ்சையால் ஏற்படும் நோய்களை தெரிந்து கொள்ளவும்.

* புவியியல் பகுதியில் மாநில தலைநகரம், மலை, காடு, சரணாலயம் படிக்கவும்.

* சூரியன், அக்குடும்ப கோள்கள், அட்சரேகை, தீர்த்தரேகை சிறப்பம்சங்கள், வானிலை, காலநிலை, கடல் நீரோட்டங்கள்.

* நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, கடற்கோள், நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி.

* இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வளர்ச்சி, அட்டவணை, முக்கிய ஷரத்து, சட்ட திருத்தம், ஜனாதிபதி, பிரதமர், தேர்தல் ஆணையம் குறித்த தகவல்களை படிக்கவும்.

* பொருளாதார கோட்பாடுகளை கூறியவர்களின் பெயர்கள்.

* பொதுத் தமிழ் பாடப்பகுதிக்கு சமச்சீர் பாடப்புத்தகத்தில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையான புத்தகங்களை படிக்க வேண்டும்.

தேர்வுக்கு செல்லும் முன்...: ஹால் டிக்கெட், நீலம் அல்லது கருப்பு நிற "பால் பாயின்ட்' பேனா கொண்டு செல்ல வேண்டும்.

*தேர்வுக்கு முதல்நாள் இரவு நன்கு தூங்கவும். மையத்திற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பாகவே செல்லவும்.

தேர்வு முறை: மூன்று மணி நேரம் தேர்வு நடக்கும். பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 100 வினாக்கள், "ஆப்டிடியூட்' உட்பட பொதுஅறிவு பகுதியில் 100 என, மொத்தம் 200 வினாக்கள். 

*அனைத்து கேள்விகளுக்கும் நான்கு வினாக்கள் தரப்பட்டிருக்கும். தவறான விடைக்கு மதிப்பெண் குறைப்பு இல்லை. எனவே, அனைத்து வினாக்களுக்கும் கவனமாக படித்து, விடை அளிக்கவும்.

*தன்னம்பிக்கையுடன் கூடிய பயிற்சியும், முயற்சியுமே வெற்றியைத் தரும். வெற்றி பெற்று அரசு ஊழியராக வாழ்த்துக்கள்! சந்தேகமா:90470 34271ல் தொடர்பு கொள்ளலாம்.

புதிதாக 35 "குழந்தை'கள் பெற்றெடுத்த தமிழ்த்தாய்


பிற மொழிச் சொற்களுக்கு இணையான, 35 தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட்டன. தலைமைச் செயலகத்தில் நடந்த, சொல் வங்கித் திட்டத்தில், புதிய சொற்கள் உருவாக்கப்பட்டன. 

ஆங்கிலம் மற்றும் பிற மொழிச் சொற்களுக்கு இணையான, தமிழ்ச் சொற்களை உருவாக்க வேண்டும்; பழைய தமிழ்ச் சொற்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்; மக்களிடையே புழக்கத்தில் உள்ள சொற்களை தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்கால அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்பவும், புதிய பயன்பாட்டுத் தேவைக்கேற்பவும் சொற்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக தமிழ் வளர்ச்சித் துறையால், "சொல் வங்கித் திட்டம்' 
உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, மொழி வல்லுனர்கள், பத்திரிகையாளர்கள், மாதம் ஒரு முறை கலந்துரையாடி, புதிய சொற்களை உருவாக்கி, துறைக்கு அளிப்பர். ஏற்கனவே, இத்திட்டத்தில், 63 கூட்டங்கள் நடந்து, 936 பிறமொழிச் சொற்களுக்கு இணையான, புதிய சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதன், 64வது கூட்டம், நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், வைகை செல்வன் தலைமையில் நடந்தது. இதில், ம.வே.பசுபதி உள்ளிட்ட பல்வேறு அறிஞர்கள் கலந்து கொண்டனர். இதில், ஆங்கிலம் மற்றும் பிறமொழியில் உள்ள, 35 சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட்டன. அமைச்சர் வைகை செல்வன் பேசுகையில், ""சொல் வங்கி உருவாக்கத்தில், இன்னும் அதிகமான அறிஞர்களை ஈடுபடுத்த வேண்டும். இதனால், மொழிக்கு அதிக அளவிலான புதிய சொற்கள் உருவாகும். மாறி வரும் நவீன தொழில்நுட்பத்துக்கு இணையாக, தமிழ்ச் சொற்களை உருவாக்கினால், தமிழ் மேலும் வளரும்,'' என்றார்.

Tuesday, 20 August 2013

பாரத ரத்னா விருது

பாரத ரத்னா இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளில் மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. 

இவ்விருது பெற்றவர்களுக்கு சிறப்பு பட்டப்பெயர்கள் எதுவும் வழங்கப்படுவது இல்லையெனினும் இந்தியாவின் மரியாதைக்குரியோர் பட்டியலில் அவர்களுக்கு இடம் உண்டு. பாரத ரத்னா என்பது இந்தியாவின் ரத்தினம் எனப் பொருள் தரும்.

       இவ்விருதுக்கான முதல் வரையறையில் 35 மி.மீ விட்டமுடைய வட்ட வடிவான தங்கப்பதக்கத்தில் சூரியச் சின்னமும் பாரத ரத்னா என்று இந்தியில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் அதன் கீழ் மலர் வளைய அலங்காரமும் இருக்க வேண்டும் என்றும் பதக்கத்தின் பின் பக்கத்தில் அரசு முத்திரையும் தேசிய வாசகமும் (motto) இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுள்ளது.


       இப்பதக்கத்தை வெள்ளை ரிப்பனில் இணைத்து கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இப்படி ஒரு வடிவமைப்பில் பதக்கம் எதுவும் தயாரிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதற்கடுத்த ஆண்டு பதக்கத்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டது. தற்போது பாரத ரத்னா பதக்கத்தில் அரச மர இலையில் சூரியனின் உருவமும் "பாரத ரத்னா" என்ற சொல் தேவநாகரி எழுத்துக்களிலும் பொறிக்கப்பட்டுள்ளது.

       1954 ஆண்டு சட்டப்படி இவ்விருதை அமரர்களுக்கு வழங்க இயலாது. மகாத்மா காந்திக்கு இவ்விருது வழங்கப்படாததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். எனினும் 1955ஆம் ஆண்டு சட்டப்படி அமரர்களுக்கும் இவ்விருதை வழங்க வழிவகை செய்யப்பட்டது. இவ்விருது இந்தியர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என வரையறுக்கப்படாவிட்டாலும் அவ்வாறே பெரும்பாலும் வழங்கப்பட்டு வருகிறது. 


       வெளிநாட்டில் பிறந்து இந்திய குடிமகள் ஆன அன்னை தெரசாவுக்கு(1980) இவ்விருது வழங்கப்பட்டது. இவரைத் தவிர இரு இந்தியர்கள் அல்லாதவர்களான கான் அப்துல் கபார் கானுக்கும் (1987) மற்றும் நெல்சன் மண்டேலாவுக்கும் (1990) இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 1992ல் சுபாஷ் சந்திர போசின் மறைவுக்கு பின் அவருக்கு வழங்கப்பட்ட இவ்விருது சட்டச் சிக்கல்கள் காரணமாக திரும்பப் பெறப்பட்டது. 

      சுதந்திர போராட்ட வீரரும் முதல் இந்திய கல்வி அமைச்சருமான அபுல் கலாம் ஆசாத்துக்கு முதலில் விருது வழங்கப்பட்ட போது, விருது வழங்கும் குழுவில் அவர் இருந்ததால், அவர் விருதை ஏற்க மறுத்து விட்டார். ஆனால் பின்னர் 1992 ஆம் ஆண்டு அவர் மறைவிற்குப் பிறகு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.


பாரத ரத்னா விருது பெற்றவர்கள் பட்டியல்.

. முனைவர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1888-1975) 1954 - இரண்டாவது குடியரசுத்தலைவர், முதல் துணை குடியரசுத் தலைவர், தத்துவ ஞானி - தமிழ்நாடு

2. சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி (1878-1972) 1954 - கடைசி கவர்னர் ஜெனரல், சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் தமிழக முதல்வர் - தமிழ்நாடு

3. முனைவர். சி. வி. ராமன் (1888-1970) 1954 - நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி - தமிழ்நாடு 

4. முனைவர். பக்வான் தாஸ் (1869-1958) 1955 - இலக்கியவாதி, சுதந்திர போராட்ட வீரர் - உத்தர பிரதேசம்

5. முனைவர். மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா (1861-1962) 1955 - கட்டிட பொறியாளர், அணை நிர்மானித்தவர், மைசூர் ராஜ்யத்தின் திவான் - கர்நாடகா

6. ஜவகர்லால் நேரு (1889 -1964) 1955 - முதல் பிரதம மந்திரி, சுதந்திர போராட்ட வீரர், எழுத்தாளர் - உத்தர பிரதேசம்

7. கோவிந்த வல்லப பந்த் (1887-1961) 1957 - சுதந்திர போராட்ட வீரர், உள்துறை அமைச்சர் - உத்தர பிரதேசம் (தற்போது உத்தராகாண்ட்)

8. முனைவர். தொண்டோ கேசவே கார்வே (1858-1962) 1958 - கல்வியாளர், சமூக சேவகர், பிறந்த நூறாவது ஆண்டில் விருது வழங்கப்பட்டது - மகாராஷ்டிரா

9. முனைவர். பிதன் சந்திர ராய் (1882-1962) 1961 - மருத்துவர், அரசியல்வாதி - முன்னாள் மேற்கு வங்க முதல்வர் - மேற்கு வங்கம்

10. புருஷோத்தம் தாஸ் டண்டன் (1882-1962) 1961 - சுதந்திர போராட்ட வீரர், கல்வியாளர் - உத்தர பிரதேசம்

11. முனைவர். ராஜேந்திர பிரசாத் (1884-1963) 1962 - முதல் குடியரசுத் தலைவர், சுதந்திர போராட்ட வீரர் - பீகார்

12. முனைவர். ஜாகீர் ஹுசைன் (1897-1969) 1963 - முன்னாள் குடியரசுத் தலைவர் - ஆந்திர பிரதேசம்

13. முனைவர். பாண்டுரங்க வாமன் கானே (1880-1972) 1963 - சமஸ்கிருத அறிஞர் - மஹாராஷ்டிரா

14. லால் பகதூர் சாஸ்திரி (மறைவுக்கு பின்) (1904-1966) 1966 - இரண்டாவது பிரதமர், சுதந்திர போராட்ட வீரர் - உத்தர பிரதேசம்


15. இந்திரா காந்தி (1917-1984) 1971 - முன்னாள் பிரதமர் - உத்தர பிரதேசம்

16. வி.வி. கிரி (1894-1980) 1975 - முன்னாள் குடியரசுத் தலைவர், தொழிற்சங்க தலைவர் - ஒரிசா

17. கே. காமராஜ் (மறைவுக்கு பின்) (1903-1975) 1976 - சுதந்திர போராட்ட வீரர் - முன்னாள் தமிழக முதல்வர் - தமிழ்நாடு

18. ஆக்னஸ் தெரேசா போஜாக்ஸ்யூ (அன்னை தெரேசா) (1910-1997) 1980 - 1979ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் - சமுக சேவையாளர் - மேற்கு வங்கம்

19. ஆச்சார்ய வினோபா பாவே (மறைவுக்கு பின்) (1895-1982) 1983 - சமூக சீர்திருத்தவாதி, சுதந்திர போராட்ட வீரர் - மகாராஷ்டிரா

20. கான் அப்துல் கபார் கான் (எல்லை காந்தி) (1890-1988) 1987 - முதல்முறையாக இந்திய குடியுரிமை இல்லாதவருக்கு விருது - சுதந்திர போராட்ட வீரர்- பாகிஸ்தான்

21. எம். ஜி. இராமச்சந்திரன் (மறைவுக்கு பின்) (1917-1987) 1988 - முன்னாள் தமிழக முதல்வர், நடிகர் - தமிழ்நாடு

22. முனைவர் பீம் ராவ் ராம்ஜி அம்பேத்கர் (மறைவுக்கு பின்) (1891-1956) 1990 - இந்திய அரசியல் சட்ட சிற்பி, சமூக சீர்திருத்தவாதி, பொருளாதார நிபுணர் - மகாராஷ்டிரா

23. நெல்சன் மண்டேலா (b 1918) 1990 - இரண்டாம் முறையாக இந்திய குடியுரிமை இல்லாதவருக்கு விருது - இனவெறி எதிர்ப்பு இயக்க தலைவர் - தென் ஆப்பிரிக்கா

24. ராஜிவ் காந்தி (மறைவுக்கு பின்) (1944-1991) 1991 - முன்னாள் பிரதமர் - புதுதில்லி

25. சர்தார் வல்லபாய் படேல் (மறைவுக்கு பின்) (1875-1950) 1991 - சுதந்திர போராட்ட வீரர், முதல் இந்திய உள்துறை அமைச்சர் - குஜராத்

26. மொரார்ஜி தேசாய் (1896-1995) 1991 - முன்னாள் பிரதமர், சுதந்திர போராட்ட வீரர் - குஜராத்

27. மௌலானா அபுல் கலாம் ஆசாத் (மறைவுக்கு பின்) (1888-1958) 1992 - சுதந்திர போராட்ட வீரர், முதல் இந்திய கல்வி அமைச்சர் - மேற்கு வங்கம்

28. ஜே. ஆர். டி. டாடா (1904-1993) 1992 - தொழில் அதிபர் - மகாராஷ்டிரா

29. சத்யஜித் ராய் (1922-1992) 1992 - திரைப்பட இயக்குனர் - மேற்கு வங்கம் 

30. ஏ. பி. ஜே. அப்துல் கலாம் (b 1931) 1997 - முன்னாள் குடியரசுத் தலைவர், விஞ்ஞானி - தமிழ்நாடு

31. குல்சாரிலால் நந்தா (1898-1998) 1997 - சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் பிரதமர் - பஞ்சாப்

32. அருணா ஆசஃப் அலி (மறைவுக்கு பின்) (1908-1996) 1997 - சுதந்திர போராட்ட வீரர் - மேற்கு வங்கம்

33. எம். எஸ். சுப்புலட்சுமி (1916-2004) 1998 - கர்நாடக சங்கீத பாடகி - தமிழ்நாடு

34. சி. சுப்ரமணியம் (1910-2000) 1998 - சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் இந்திய விவசாய அமைச்சர், பசுமைப் புரட்சியின் தந்தை - தமிழ்நாடு

35. ஜெயபிரகாஷ் நாராயண் (மறைவுக்கு பின்) (1902-1979) 1998 - சுதந்திர போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி - பீகார்

36. ரவி சங்கர் (b 1920) 1999 - சிதார் கலைஞர் - உத்தர பிரதேசம்

37. அமர்த்தியா சென் (b 1933) 1999 - பொருளாதார நோபல் பரிசு வென்றவர் - மேற்கு வங்கம்

38. கோபிநாத் பர்தோலி (b 1927) 1999 - சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் அசாம் முதல்வர் - அசாம்

39. பிஸ்மில்லா கான் (1916 - 2006) 2001 - செனாய் இசை கலைஞர் - பீகார்

40. லதா மங்கேஷ்கர் (பி 1929) 2001 - பாடகி - மகாராஷ்டிரா

41. பீம்சென் ஜோஷி (பி 1922) 2008 - ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு கலைஞர் - கர்நாடகா