பணவீக்கம் என்றால் என்ன? எதை வைத்து முடிவு செய்கிறார்கள்? எதனால் வருகிறது?
காற்று ஊத ஊத, பலூன் வீக்கம் அடைகிற மாதிரி, விலைகள் வீங்குவதுதான் பணவீக்கம். இன்பிளேஷன்.
முன்பு 100 ரூபாய் கொடுத்து வாங்கிய பொருட்களின் விலை 105 ஆகிவிட்டால், பணவீக்கம் ஐந்து சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. அதே பொருட்களை வாங்குவதற்கு 109 ரூபாய் தேவைப்பட்டால், பணவீக்கம் ஒன்பது சதவிகிதம்.
மாதம் ரூ.3000 செலவு செய்யும் குடும்பத்திற்கு பணவீக்கம் 9% ஆனால், செலவிற்கு ரூ.3270 அதாவது ரூ.270 கூடுதலாக தேவைப்படும். இல்லாதவர்கள் எப்படிச் சமாளிப்பது என்கிறீர்களா? இரண்டே வழிகள்தான். ஒன்று, வாங்கும் அளவைக் குறைத்துக்கொள்வது (அடிக்க வராதீர்கள்). அல்லது கடன் வாங்குவது ( இதற்கு அதுவே மேலோ!).
தற்சமயம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவாக 8
சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கிறது பணவீக்கம். நம் நாட்டில்தான் என்றில்லை. இப்போது உலகெங்கிலுமே விலைவாசி உயர்வுதான் பெரிய பிரச்னை. சீனா 8.7%, ரஷ்யா 12 % க்கும் மேல், சவுதி அரேபியா 9.8%, ஹாங்காங், சிங்கப்பூர் எல்லாம் 6% க்கும் மேல். இவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவதுபோல, வியட்நாமின் பணவீக்கம் 25%.
No comments:
Post a Comment