Monday, 19 August 2013

மத்திய அரசு ஊழியர் ஓய்வு வயது 62 ஆக உயர்த்தப்படாது


"மத்திய அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயது, தற்போதுள்ள, 60 வயதிலிருந்து, 62 ஆக உயர்த்தப்படும்' என, மத்திய அரசு வட்டாரங்களில் பேசப்பட்ட தகவல்களுக்கு, மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றும் பணியாளர், ஓய்வுபெறும் வயதில் மாறுபாடு உள்ளது. பெரும்பாலான மாநிலங்களில், பணியாளர் ஓய்வுபெறும் வயது, 60ஆக உள்ளது. மத்திய அரசில், 1998ம் ஆண்டு வரை, பணி ஓய்வு வயது, 58 ஆக இருந்தது; அதற்குப் பின், 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.மத்திய அரசு ஊழியர்களின் பொதுவான ஓய்வு வயது, 60ஆக இருந்தாலும், ஆசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் ஓய்வு வயது, 62 ஆக உள்ளது.

அது போல், பா.ஜ., ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில், மாநில அரசு ஊழியர் ஓய்வுபெறும் வயது, 60ல் இருந்து, 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.அந்த வழியைப் பின்பற்றி, மத்திய அரசும், தன் பணியாளர்களின் ஓய்வு வயதை, 62ஆக உயர்த்தலாம் என, டில்லி வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டது. அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், 50 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் ஓட்டுகளை அள்ள, மத்திய அரசு ஊழியர் ஓய்வு வயது, 62ஆக உயர்த்தப்படலாம் என கூறப்பட்டது.

இதற்கான முதற்கட்ட ஆலோசனையில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகவும், பல துறைகளின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின.இந்நிலையில், அந்த தகவல்களை, மத்திய அரசு மறுத்துள்ளது. மத்திய பணியாளர் துறை அமைச்சக உயரதிகாரிகள், "ஓய்வு வயதை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை' என தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment