Monday, 6 May 2013

ராகுல சாங்கிருத்தியன் விருது


இந்தியாவில், இந்தி பயண இலக்கியத்தின் தந்தை என, ராகுல சாங்கிருத்தியன் அழைக்கப்படுகிறார். ராகுல சாங்கிருத்தியன் வீட்டை விட்டு வெளியேறி, 45 ஆண்டுகள் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் சுற்றினார். இவரது பயண இலக்கியம் "ஊர் சுற்றிப் புராணம்' என்ற பெயரில் வெளி வந்தது."வால்கா முதல் கங்கை வரை' என்ற புத்தகத்தையும், ராகுல சாங்கிருத்தியன் எழுதி உள்ளார். புத்தபிக்குவான இவர், இந்தியாவின் அனைத்து மொழிகளும் அறிந்தவர். இந்தியாவில் பயண இலக்கியங்கள், சுற்றுலா தொடர்பான புத்தகங்கள் எழுதுவோருக்கு சுற்றுலாத் துறை அமைச்சகம், மத்திய இந்தி இயக்குனரகம் இணைந்து வழங்கப்படும் விருதுக்கு, ராகுல சாங்கிருத்தியன் பெயர் சூட்டப் பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனாதிபதி, இந்த விருதை வழங்குகிறார்.

No comments:

Post a Comment