Tuesday 12 November 2013

காந்தியடிகள் இலங்கை சென்ற நாள்


மகாத்மா காந்தியடிகள் இதே தேதியில்தான் முதலும் கடைசியுமாக இலங்கை சென்றார்.

இலங்கையை ஆண்ட சிங்கள மன்னர்களின் பாரம்பரியத்தில் வந்தவர்கள் சார்லஸ் எட்கர் மற்றும் விக்டர் எனும் சகோதரர்கள். அவர்களின் அழைப்பின் பேரில் காந்தியடிகள் இலங்கை சென்றார். அவர்கள் இலங்கையில் வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து பலவகையில் போராடிக்கொண்டு இருந்தனர். அவர்களின் வாரிசுகளும் மருத்துவர் மற்றும் வழக்கறிஞர்களாக இருந்தனர். அவர்களும் வெள்ளையர்களுக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் தீவிரமாக பணியாற்றி வந்தனர். அவர்கள் சிலோன் தேசிய காங்கிரஸ், சிலோன் லேபர் பார்ட்டி, சிலோன் லேபர் யூனியன் போன்ற அமைப்புகளில் பணியாற்றி வந்தனர். அவர்கள் இந்தியாவில் காந்தியடிகள் தலைமையில் நடந்த இந்திய சுதந்திர போராட்டத்தால் மிகவும் கவரப்பட்டு இருந்தனர்.

அவர்களின் அழைப்பை ஏற்ற காந்தியடிகள் தனது மனைவி கஸ்தூரிபாயோடும், ராஜாஜியோடும் மற்றும் தமது உதவியாளர்களோடும் ஒரு பெரிய குழுவாக சென்றார். இலங்கையில் உள்ள மேற்கு கடற்கரை நகரமான சிலாபத்தில் தங்கினார். அவர் இலங்கை முழுவதும் பயணம் செய்தார். பல கூட்டங்களில் பங்கேற்றார். இலங்கை சுதந்திரப் போராட்டத்துக்கு உற்சாகம் ஊட்டினார். அவரது பயணம் தந்த உற்சாகத்தில் ஒரு நகருக்கு ஸ்வராஜ்ய புரா என பெயரிடப்பட்டது. நவம்பர் 12 முதல் டிசம்பர் 2 வரை இலங்கையில் இருந்துவிட்டு காந்தியடிகள் இந்தியா திரும்பினார்.

No comments:

Post a Comment