Thursday 20 June 2013

பெருங்கோடீஸ்வரர்கள் உலகில் இந்தியாவிற்கு 2வது இடம்



உலகளவில், பெருகி வரும் பெருங் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை வளர்ச்சியில், இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.


சென்ற 2012ம் ஆண்டில், சர்வதேச அளவில், பெருஞ் சொத்து கொண்ட தனி நபர்கள் குறித்து, கேப் ஜெமினி மற்றும் ஆர்.பீ.சி வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் வெளியிட்ட ஆய்வறிக்கை:உலகளவில், மிகப் பெருங் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, 9.2 சதவீதம் அதிகரித்து, 1.20 கோடியாக உயர்ந்துள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு, சாதனை அளவாக, 10 சதவீதம் அதிகரித்து 46.20 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது.


வட அமெரிக்கா, மகா கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையிலும் (37.30 லட்சம்), தனி நபர் சொத்து மதிப்பு (12.70 லட்சம் கோடி டாலர்) வளர்ச்சியிலும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தை விஞ்சியுள்ளது.ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், மகா கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, 36.80 லட்சமாகவும், தனி நபர் சொத்து மதிப்பு, 12 லட்சம் கோடி டாலராகவும் உள்ளது.


ஆசிய பசிபிக் நாடுகளில், பெருங் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில், ஹாங்காங், 35.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, முதலிடத்தில் உள்ளது. இந்தியா, 22 சதவீதம் வளர்ச்சியுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.இந்தியாவில், பங்குச் சந்தை மூலதனம், நுகர்வு மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் காணப்பட்ட சாதகமான போக்கால், பெருங்கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை வளர்ச்சி அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment