”பொருளாதாரத்தை வலுப்படுத்த,வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்துக் கொள்ள தேசிய மய
மாக்கப்பட்ட வங்கிகள், முன்வர வேண்டும். வங்கித் துறையில்,புதிதாக50ஆயிரம் பேர் வரை,இந்த ஆண்டு, வேலைக்கு எடுக்கவும் திட்ட மிடப்பட்டு
உள்ளது” என, மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
ஆலோசனை கூட்டம்:தேசியமயமாக்கப்பட்ட
வங்கி களின் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம், டில்லியில், நேற்று நடைபெற்றது. மத்திய
நிதியமைச்சர் சிதம்பரம் தலைமையில் நடந்த, இந்த ஆலோசனை கூட்டம், நான்கு மணி நேரம்
நீடித்தது. அதன்பின், நிருபர்களிடம் அவர்
கூறியதாவது:நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டிய கடமை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு, நிரம்பவே உள்ளது.
எனவே, வட்டி விகிதத்தை குறைப்பதற்கு, வங்கித் தலைவர்கள் முன்வர வேண்டும்.ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை பலமுறை குறைத்தும் கூட, அதன் பலன்கள் எதுவுமே, பொதுமக்களுக்கு போய்ச் சேராமல் உள்ளது. வட்டி விகிதத்தை குறைக்ம்படி, கோரிக்கை வைத்தால், வங்கித் தலைவர்கள்
எல்லோரும், தங்களால் இயலாது என, கூறுகின்றனர்.
இருப்பினும், நாட்டின் பொருளாதாரத்தை
வலுப்படுத்துவதற்கு, வட்டி விகிதத்தை குறைப்பது தான் ஒரே
வழி.வங்கிக் கடன்கள் என்று பார்த்தால், விவசாயம், சிறு தொழில்கள், சில்லரை கடன்கள், ரியல் எஸ்டேட், வீட்டு வசதி கடன்கள் போன்ற பிரிவுகளில் வளர்ச்சி காணப்படுகிறது.கடந்த
2012-13ம் நிதியாண்டில், வங்கிகளில்
செய்யப்படும் டெபாசிட், 14.9 சதவீதம் என்ற
அளவில் வளர்ச்சி கண்டிருந்தது.
இது, இதற்கு முந்தைய நிதி ஆண்டில், 14.4 சதவீதம் என்ற அளவில் இருந்தது. அதே சமயம், கணக்கீட்டு நிதி ஆண்டுகளில், வங்கிகள் வழங்கிய கடன் வளர்ச்சி, 17.75 சதவீதம் என்ற அளவில் இருந்து, 15.62 சதவீதம் என்ற அளவில் குறைந்து உள்ளது.
வசூலாகாத கடன்:கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில், பொதுத் துறை வங்கிகளின் மொத்த வசூலாகாத கடன், 71,080 கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்த 2012ம் ஆண்டு, டிசம்பர் மாத இறுதியில், 1.55 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எனவே, பொதுத் துறை வங்கி களிடம், கடன் வாங்கிவிட்டு, அதை செலுத்தாமல்
உள்ளவர் களை கண்டறியவேண்டும். ஒவ்வொரு வங்கியும், கடன் வாங்கி செலுத்தாத, மோசமான 30 பேர்களின் வங்கிக் கணக்குகளை ஆராய
வேண்டும்.
கடன் வாங்கிவிட்டு, திரும்பச்
செலுத்தாமல் இருப்பவர்களில், பெரும்பாலானோர், பெரிய அளவில் தொகையை வாங்கியவர்களாக இருக்கின்றனர். இவர்களை, கண்டறிந்து, கடன் தொகையை வசூல் செய்ய வேண்டும்.
புதிய வங்கி கிளைகள்:வரும் ஆண்டில், 10 ஆயிரம் புதிய வங்கிக் கிளைகள் துவங்க
திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 8,000 கிளைகள் வரை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், இதர கிளைகளை, கிராமப்புற வங்கிகளும் துவங்க
உள்ளன.மேற்கண்ட மொத்த கிளைகளில், ஸ்டேட் பேங்க் ஆப்
இந்தியா, 1,200 புதிய கிளைகளை
துவங்க திட்டமிட்டு உள்ளது. நடப்பு ஆண்டில், வங்கித் துறையில் புதிதாக, 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு, நடப்பு ஆண்டில் 6 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், இதுவரை, 5.75 லட்சம் கோடி ரூபாய்
வரை, வழங்கப் பட்டுள்ளது.வரும் 2013-14ம் ஆண்டில், 7 கோடி ரூபாய் அள விற்கு, வேளாண் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கல்வி கடன்:கல்விக் கடன்களைப்
பொறுத்தவரை, இதுவரையிலுமாக, 53,520 கோடி ரூபாய், மாணவர்களுக்கு கடன் வழங்கப் பட்டுள்ளது.
இதன் வாயிலாக, 26 லட்சம் மாணவ, மாணவியர் பலன் அடைந்துள்ளனர்.புதிய வங்கி துவங்க, உரிமம் வேண்டி, தனியார் மற்றும் பொதுத் துறையைச்
சேர்ந்த, 26 நிறுவனங்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வந்துள்ளன. முற்றிலும் தகுதியின் அடிப்படையில் தான்
வங்கி துவங்க அனுமதி வழங்கப்படும். இது, விசயத்தில், மத்திய அரசோ, நிதி அமைச்சகமோ தலையிடாது. இவ்வாறு, சிதம்பரம் கூறினார்.
No comments:
Post a Comment