ஒவ்வொரு ஆண்டும், நவம்பர், 19ம் தேதியை, உலக கழிப்பறை தினமாக அனுசரிக்க, ஐ.நா., சபை முடிவு செய்துள்ளது. உலகில், 250 கோடி மக்கள், கழிப்பறை சுகாதாரம் குறித்த விஷயத்தில், அக்கறை இல்லாமல் உள்ளனர். 110 கோடி மக்கள், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் ஏற்படும் சுகாதார குறைப்பாட்டினால், ஒவ்வொரு ஆண்டும், 2 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றனர்.
எனவே, இந்த விஷயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, நவம்பர், 19ம் தேதியை, உலக கழிப்பறை தினமாக அனுசரிக்க ஐ.நா., முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பை கேட்டவுடன், ஐ.நா., உறுப்பினர்கள் சிரித்தனர்.
இது குறித்து சிங்கப்பூர் பிரதிநிதி மார்க் நியோ குறிப்பிடுகையில், ""இது நகைப்புக்கு உரிய விஷயமல்ல. கழிப்பறை சுகாதாரத்தில், சிங்கப்பூர் அதிக அக்கறை கொண்டுள்ளது. கழிப்பறை சுகாதாரம், கவுரவத்துக்குரிய விஷயமாக கருதப்பட வேண்டும்,'' என்றார்.
No comments:
Post a Comment