தமிழக அரசின் மருத்துவமனைகளில்
உள்ள காலியிடங்களான அசிஸ்டன்ட் சர்ஜன் பிரிவில் உள்ள 2594 காலி இடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பு வந்துள்ளது. இந்த காலியிடங்களுக்கு அரசின் நிபந்தனைகளின்படி இட ஒதுக்கீடு
உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேவைகள்: டி.என்.பி.எஸ்.சி.,
அறிவித்துள்ள அசிஸ்டன்ட் சர்ஜன் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 35 வயதுக்கு உட்பட்டவராக
இருக்க வேண்டும். யு.ஜி.சி., அங்கீகாரம் பெற்ற பல்கலைக் கழகத்தின் மூலமாக எம்.பி.பி.எஸ்.,
பட்டப் படிப்பை முடித்துவிட்டு, மெட்ராஸ் மெடிக்கல் ரெஜிஸ்ட்ரேஷன் விதி, 1914ன் பொருளுக்கு
உட்பட்ட பதிவு செய்த மருத்துவ அதிகாரியாக இருக்க வேண்டும்.
இதர தகவல்கள்:
மேற்கண்ட அசிஸ்ட்ன்ட் சர்ஜன் காலி இடங்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற
2 நிலைகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வு
மற்றும் வாய் மொழித் தேர்வு என்ற இரண்டு பாகங்களையும் கட்டாயம் அனைவரும் எதிர்கொள்ள
வேண்டியிருக்கும். 2 தேர்வுகளின் மதிப்பெண்களின்
அடிப்படையில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி இடங்களுக்கு ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பிக்க
வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து
அறியவும்.
ஆன்-லைனில் விண்ணப்பிக்க
இறுதி நாள்: 19-07-2013
கட்டணம் செலுத்த
இறுதி நாள்: 23-07-2013
இணையதள முகவரி:
www.tnpscexams.net
No comments:
Post a Comment