"அரசு வேலை வாய்ப்புகளில், பி.எஸ்சி., சிறப்பு விலங்கியல்
மற்றும் உயிர் தொழில்நுட்பம் பட்டம், பி.எஸ்சி., விலங்கியல்
பட்டத்திற்கு இணையாக கருதப்படும்” என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணை
விவரம்: எம்.டெக்., பெட்ரோலியம் சுத்திகரிப்பு தொழில்நுட்பம் மற்றும் பெட்ரோ கெமிக்கல்
பட்டம், எம்.டெக்., கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டத்திற்கும்; பி.எஸ்சி., சிறப்பு விலங்கியல்
மற்றும் உயிர் தொழில்நுட்பம் பட்டம், பி.எஸ்சி., விலங்கியல்
பட்டத்திற்கு இணையானது. சென்னை பல்கலையில் வழங்கப்படும், எம்.எஸ்சி., புள்ளியியல் பட்டம், எம்.எஸ்சி., கணிதத்திற்கு
இணையானது என கருதி, முதுகலை கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வழங்கலாம். பி.எஸ்சி., தாவர உயிரியல்
மற்றும் தாவர உயிர் தொழில்நுட்பம்,
பி.எஸ்சி., தாவரவியல்
பட்டத்திற்கும்; பாரதியார் பல்கலையில் வழங்கப்படும் பி.பி.எம்., - பி.பி.ஏ., பட்டம், சென்னை பல்கலையில்
வழங்கப்படும் பி.பி.எம்., - பி.பி.ஏ., பட்டத்திற்கும்;
பி.ஏ., வரலாறு மற்றும் சுற்றுலாத் துறை
பட்டம், பி.ஏ., வரலாறு பட்டத்திற்கும் இணையானது. மேலும், எந்த பட்டம், எதற்கு இணையானவை, இணையில்லை உள்ளிட்ட
தகவல்களை, www.tn.gov.in என்ற இணையளத்தை பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அரசாணையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment