Sunday, 30 June 2013

அரசு பணிக்கு 30 ஆயிரம் பேரை தேர்வு செய்ய மும்முரம் : டி.என்.பி.எஸ்.சி., - டி.ஆர்.பி., சுறுசுறுப்பு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில், 30 ஆயிரம் பேருக்கு, புதிய வேலை வாய்ப்புகளை அளிப்பதற்கான நடவடிக்கைகளில், டி.என்.பி.எஸ்.சி., யும், டி.ஆர்.பி.,யும், மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.


அரசு தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., ஆகிய இரு அமைப்புகளும், தமிழக அரசு துறைகளில், புதிய நியமனங்களை செய்வதில், பெரும் பங்கை ஆற்றி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, இரு அமைப்புகளும், தலா, 30 ஆயிரம் பேருக்கு, வேலை வாய்ப்புகளை வழங்கும் பணியை செய்து வருகின்றன.நடப்பு ஆண்டிலும், வரும் செப்டம்பருக்குள், 30 ஆயிரம் பேருக்கு, வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான பணிகளில், இரு அமைப்புகளும், மும்முரமாக ஈடுபட்டுள்ளன.



டி.என்.பி.எஸ்.சி.,:@ குரூப்-4 தேர்வு மூலம், 5,566 பேரை தேர்வு செய்ய,ஆகஸ்ட் 25ல், போட்டித்தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வை, 6 லட்சம் பேர் வரை எழுத உள்ளனர். இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில், 5,566 பேரும் நியமிக்கப்படுவர். இவர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை, மாதச்சம்பளம் கிடைக்கும்.இதேபோல், சுகாதாரத்துறையில், 2,594 உதவி மருத்துவர்களை நியமனம் செய்ய,செப்டம்பர், 22ம் தேதி, போட்டித்தேர்வை நடத்துகிறது. இதனை, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவை மட்டுமில்லாமல், பல்வேறு குறைந்த பணியிடங்களுக்கான தேர்வுகளும், தொடர்ந்து நடக்க உள்ளன.



டி.ஆர்.பி., : @@அரசு பள்ளிகளில், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான பணிகளில், டி.ஆர்.பி., ஈடுபட்டு வருகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம், 15 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்வு,ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடக்கிறது. இந்த தேர்வை, 7 லட்சம் பேர் வரை எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு விண்ணப்பிக்க, நாளை ஜூலை 1ம் தேதி கடைசி நாள். அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,900 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான தேர்வை,ஜூலை, 21ம் தேதி நடத்துகிறது. இந்த தேர்வை, 1.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். மேலும், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 1,100 உதவி பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான பணிகளிலும், டி.ஆர்.பி., ஈடுபட்டுள்ளது.மேலும், அரசு பள்ளிகளில், தையல், இசை, உடற்கல்வி ஆசிரியர்களும், நியமிக்கப்பட உள்ளனர். வரும் செப்டம்பருக்குள், இந்த அனைத்து பணி நியமனங்களும் முடிக்கப்பட்டுவிடும் என்பதால், வேலை வாய்ப்பை எதிர்நோக்கியுள்ள பட்டதாரிகள், உற்சாகம் அடைந்து உள்ளனர்.அதே நேரத்தில்,பணி நியமனங்களே நடக்காமல் உள்ள, இதர துறைகளில் உள்ள, காலி பணியிடங்களை நிரப்பவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, பட்டதாரிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Saturday, 29 June 2013

TET ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும்?


இந்த மாதம் வருகிறது... அடுத்த மாதம் வருகிறது... நாளை வருகிறது என்று சொல்லிக் கொண்டு இருந்த ஆசிரியர் தகுதித்தேர்வு நமக்கு மிக அருகில் வந்து அமர்ந்துவிட்டது. அதாவது ஆகஸ்ட் 17,18 தேதிகளில். இந்த நேரத்தில் நாம் என்ன செய்யலாம்? இதோ சிந்தனைக்கு சில...

* பயிற்சி நிலையங்களில் மீது வைக்கின்ற நம்பிக்கையை முதலில் உங்கள் மீது வைக்க வேண்டும்.

* மனம் மற்றும் உடல் இரண்டையும் தேர்வுக்குத் தயாராக்க வேண்டும்.

* சுய சிந்தனையுடையவராய் உங்களை நீங்கள் நினைக்க வேண்டும்.

* தேர்வுக்குத் தயார் செய்வதற்கு செலவிடும் காலத்தையும், வருவாய் இழப்பையும் வாழ்நாள் முதலீடாக கருத வேண்டும்.

* தகுதித் தேர்வை வெறுக்காமல் வாழ்க்கையில் கிடைக்க பெற்ற வரப்பிரசாதமாகவும், உங்களின் திறமைக்கு விடப்பட்ட சவாலாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

* தகுதித் தேர்வினை ஆதரிக்காவிட்டாலும் அதை எதிர்க்காத மனநிலையைப் பெற்றிருந்தால் அல்லது இனி பெறப்படுவீர்கள் என்றால் உங்கள் வெற்றி உங்களால் உறுதி செய்யப்படும்.

* முதலில் சந்தையில் கிடைக்கும் கண்டதை எல்லாம் படிக்காமல் தேவையானதை மட்டும் தேர்வு செய்து படிக்க வேண்டும்.

* 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த 9,10,11,12-ம் வகுப்பு பாடங்களை ஏன் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூக்கி எறிய வேண்டும். அதாவது நம்முடைய வாழ்க்கை முழுவதும் சமூகத்தில் மரியாதையையும், பிற பணிகளில் கிடைக்கும் சலுகைகள் மற்றும் இதர பயன்களையும் அளிக்கப் போகும் இந்த தகுதித் தேர்வின் வெற்றிக்கு 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் மிகவும் குறைவு என்ற எண்ணம் முதலில் வரவேண்டும்.

* 6 முதல் 12 வகுப்பு வரை அனைத்து பாடங்களையும் வாசிக்க வேண்டும். அதுவே தேர்வின் பயத்தினை போக்கி, அதிக மதிப்பெண்ணை பெற்றுத்தரும்.

* ஒவ்வொரு பாடத்தையும் வாசித்து விட்டு அதில் 30/30, 60/60 எடுத்துவிடுவேன் என்ற நிலையை அடைந்த பிறகு அடுத்த பாடத்திற்கு செல்வது மிகவும் பயனளிக்கும்.
இவ்வாறு உங்களின் திட்டமிடுதல் இருந்தால் பிற பாடங்களை படிக்க முடியாமல் போனாலும் கூட அதிலிருந்து எப்படியும் 12/30 மதிப்பெண்களை பெற்று விடலாம்.

அதாவது 30+30+12+12+12=96 தகுதி மதிப்பெண்களை பெறுவது மிகவும் எளிது.

* தொடர்ந்து படிப்பதும் சலிப்பை உண்டுபண்ணும். அதனால், சின்னச் சின்ன இடைவெளிகளில் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.

* சைக்காலஜிக்கென்று கண்டதையெல்லாம் வாங்கி படிப்பதைவிட பேராசியர்.கி.நாகராஜன் அவர்களால் எழுதப்பட்ட கல்வி உளவியல் புத்தகங்களை வாங்கி படிக்கலாம்.

* தமிழ், கணிதம் - அறிவியல், சமூக அறிவியல், ஆங்கிலம், உளவியல் என்ற வரிசையில் ஒவ்வொரு பாடமாக படித்து முடித்த பின்னர் அடுத்த பாடத்திற்கு செல்ல வேண்டும் என்பதை நினைவில் நிறுத்தி செயல்படுங்கள்.

* எந்தவிதத் தடுமாற்றமோ, பயமோ இல்லாமல், மிகவும் இயல்பாகத் தேர்வுகளைச் சந்தியுங்கள்.

* ஒரு தேர்வு முடிந்ததும் அதைப் பற்றிய கவலைகளை விட்டுவிட்டு, அடுத்த நிலைக்கு தயாராகுங்கள்.

நாளை "நெட்” தேர்வு : சென்னையில் 14 ஆயிரம் பேர் பங்கேற்பு


யு.ஜி.சி.,யால் நடத்தப்படும், கல்லூரி விரிவுரையாளர் தகுதிக்கான தேசிய தகுதி தேர்வு(நெட்), சென்னையில், நாளை நடக்கிறது. பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.,) மாநில தகுதி தேர்வை (ஸ்லெட்), ஆண்டுக்கு ஒரு முறையும், தேசிய தகுதி தேர்வை (நெட்), ஜூன், டிசம்பர் ஆகிய இரு மாதங்களிலும் நடத்துகிறது. "ஸ்லெட், நெட்' தேர்வுகளில் வெற்றி பெற்றவர் மட்டுமே, அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியில் சேர முடியும்.

இந்தாண்டிற்கான, "நெட்' நுழைவு தேர்வு, நாளை (30ம் தேதி), நாடு முழுவதும், 80 இடங்களில் நடக்கிறது. தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய, நான்கு மண்டலங்களில் நடக்கிறது. சென்னையில், 11 மையங்களில், 14 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதுகுறித்து, பயிற்சி மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: "நெட்' தேர்வு, மூன்று பிரிவுகளாக நடத்தப்படும். மொத்தம், 350 மதிப்பெண். முதல் தாளில், பொது அறிவு கேள்விகளும், இரண்டாவது மற்றும் மூன்றாவது தாளில் பாடப்பிரிவு சம்பந்தமான கேள்விகளும் கேட்கப்படும். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வணிகவியல், சமூக சேவை, இசை, சட்டம், இந்திய கலாசாரம், குற்றவியல், தொல்லியல், மானுடவியல் உள்ளிட்ட, 94 பாடங்களில், "நெட்' தேர்வை எழுதலாம். கேள்விக்கு தவறாக பதிலளித்தால், மதிப்பெண் குறைப்பு இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

டி.இ.டி., தேர்வுக்கு 4.8 லட்சம் பேர் விண்ணப்பம்


ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள டி.இ.டி., தேர்வுக்கு, இதுவரை, 4.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆகஸ்ட், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கின்றன. இதற்கான விண்ணப்பங்களை, கடந்த, 17ம் தேதியில் இருந்து, டி.ஆர்.பி., வழங்கி வருகிறது. விண்ணப்பங்களை வாங்கவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஒப்படைக்கவும், ஜூலை, 1 கடைசி நாள். இதற்கு இன்னும், இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. இந்நிலையில், இதுவரை, 7.5 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகியிருப்பதாகவும், 4.8 லட்சம் விண்ணப்பங்கள், பூர்த்தி செய்த நிலையில், திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும், டி.ஆர்.பி., வட்டாரங்கள், நேற்று மாலை தெரிவித்தன.

கடைசி நாளன்று, பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை, 5.5 லட்சம் முதல், 6 லட்சம் வரை உயரலாம் என, எதிர்பார்ப்பதாகவும், டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

முதுகலை ஆசிரியர் தேர்வு : ஜூலை, 21ல் நடக்கும், முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, ஒரு லட்சத்து, 76 ஆயிரத்து, 654 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான, "ஹால் டிக்கெட்', அடுத்த வாரத்தில், தீதீதீ.tணூஞ.tண.ணடிஞி.டிண என்ற டி.ஆர்.பி., இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது.

"தேர்வர்கள், வீட்டு முகவரிக்கு, "ஹால் டிக்கெட்' அனுப்பப்படாது;அனைவரும், இணையதளத்தில் இருந்து, "ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்' என்று, டி.ஆர்.பி., அதிகாரிகள் தெரிவித்தனர்.

வி.ஏ.ஓ., ஆறாம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு


நிரம்பாமல் உள்ள, 46 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆறாம் கட்ட கலந்தாய்வு, ஜூலை, 9ம் தேதி நடக்கிறது.

டி.என்.பி.எஸ்.சி., விடுத்துள்ள அறிவிப்பு: வி.ஏ.ஓ., தேர்வு, கடந்த ஆண்டு, செப்டம்பர், 30ல் நடந்தது. இதுவரை நடந்த, ஐந்து கட்ட கலந்தாய்வு மூலம், 1,824 பேர், வி.ஏ.ஓ.,க்களாக, பணி நியமனம் செய்யப்பட்டனர். இன்னும், 46 பணியிடங்கள், காலியாக உள்ளன. இதை நிரப்ப, ஆறாம் கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, ஜூலை, 9ம் தேதி, தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது.

இதில் பங்கேற்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் பெயர்கள்,www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. விண்ணப்பதாரர், கலந்தாய்வுக்கு வரும்போது, அசல் சான்றிதழ் மற்றும் சான்றொப்பம் இட்ட பிரதி ஆகியவற்றை, கொண்டு வர வேண்டும். இவ்வாறு, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

Friday, 28 June 2013

Army gets first woman ADC to a top general

Women have broken through another glass ceiling, albeit a lower one, in the Army. Lieutenant Ganeve Lalji, a military intelligence officer with barely two years of service, has become the first-ever woman officer to be posted as the aide-de-camp (French for field assistance) of a top general.

While the Navy for long has posted women officers as 'flag lieutenants' to their admirals, this is the first time there will be a woman ADC in the Army. Lt Lalji will be the ADC to Lt-General Rajan Bakhshi, slated to take over the reins of the Central Army Command at Lucknow from Lt-Gen Anil Chait on July 1.

"Lt Lalji, commissioned into the intelligence corps from the Officers' Training Academy in Chennai in September 2011, is a third-generation Army officer after her father and grandfather. She excelled in her basic young officers' course. She is also a keen adventure enthusiast and has undergone mountaineering and skiing courses at Western Himalayan Mountaineering Institute, Manali," said a senior officer.

There are just 1,200 women officers in the Army, 300 in Navy and 1,100 in IAF despite they being inducted in the armed forces since 1992-93. Till recently, they could serve just a maximum of 14 years in branches like signals, engineers, aviation, intelligence, ordnance, air traffic controller, air defence and the like.

Now, the government has allowed women officers to get permanent commission in a few avenues like the legal, education and naval constructor wings. They, of course, are not allowed to serve in combat arms like infantry, artillery or armoured corps, nor serve on board operational warships or fly fighter jets.

Monday, 24 June 2013

டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை 6 லட்சமாக உயர்வு: ஜூலை 1 கடைசி நாள்

டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை, 6 லட்சத்தை எட்டியுள்ளது; கடைசி நாளான, ஜூலை, 1ம் தேதிக்குள், மேலும், 2 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகும் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது.



அரசு பள்ளிகளில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்ய, மூன்றாவது முறையாக, வரும் ஆக., 17, 18 ஆகிய தேதிகளில், டி.இ.டி., தேர்வு (ஆசிரியர் தகுதித் தேர்வு) நடக்கிறது. இதற்கு, கடந்த, 17ம் தேதி முதல், 2,500 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

கடந்த வாரம் வரை, 6 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகியிருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. கடைசி நாளான, ஜூலை, 1ம் தேதிக்குள், மேலும், 2 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகும் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களும், வந்தபடி உள்ளன. 7 லட்சம் முதல், 7.5 லட்சம் பேர் வரை, தேர்வை எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாள் தேர்வு, ஆக., 17ம் தேதியும், பட்டதாரி ஆசிரியருக்கான, இரண்டாம் தாள் தேர்வு, 18ம் தேதியும் நடக்கின்றன. இரு தேர்வுகளையும், 1,000த்திற்கும் மேற்பட்ட மையங்களில் நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. கடந்த தேர்வு, 1,072 மையங்களில் நடந்தது. இந்த எண்ணிக்கைக்கு குறையாமல், தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த தேர்வு மூலம், 15 ஆயிரம் ஆசிரியர், தேர்வு செய்யப்பட உள்ளனர். புதிய ஆசிரியர் அனைவரும், அக்டோபருக்குள், பணி நியமனம் செய்யப்படுவர்.

Saturday, 22 June 2013

பொது அறிவு

  1. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகிய இரண்டும் அமையப் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்
  2. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்:
1.   நீலகிரி மலை
2.   ஆனை மலை
3.   பழனி மலை
4.   கொடைக்கானல் குன்று
5.   குற்றால மலை
6.   மகேந்திரகிரி மலை
7.   அகத்தியர் மலை
8.   ஏலக்காய் மலை
9.   சிவகிரி மலை
10. வருஷநாடு மலை
    3. தமிழ்நாட்டில் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்:
1.   ஜவ்வாது மலை
2.   கல்வராயன் மலை
3.   சேர்வராயன் மலை
4.   பச்சை மலை
5.   கொல்லி மலை
6.   ஏலகிரி மலை
7.   செஞ்சி மலை
8.   செயிண்ட்தாமஸ் குன்றுகள்
9.   பல்லாவரம்
10. வண்டலூர்
  4.  தமிழ்நாட்டில் முக்கிய மலைவாழிடங்கள்:
1.   ஊட்டி
2.   கொடைக்கானல்
3.   குன்னுர்
4.   கோத்தகிரி
5.   ஏற்காடு
6.   ஏலகிரி
7.   வால்பாறை
  5. மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள கணவாய்கள்:
1.   தால்காட் கணவாய்
2.   போர்காட் கணவாய்
3.   பாலக்காட்டுக் கணவாய்
        4.  செங்கோட்டைக் கணவாய்

        5. ஆரல்வாய்க் கணவாய்
  6.   கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலைசேர்வராயன் மலை (1500 – 1600 மீ)
  7.   மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலைஆனை மலை (2700 மீ)
  8.   முக்கிய நதிகளும் அவற்றின் நீளங்களும்
காவேரி – 760 கி.மீ
தென்பெண்ணை – 396 கி.மீ
பாலாறு – 348 கி.மீ
வைகை – 258 கி.மீ
பவானி – 210 கி.மீ
தாமிரபரணி – 130 கி.மீ
  9.   தமிழகத்தின் முக்கிய நீர்வீழ்ச்சிகள்:
குற்றாலம்திருநெல்வேலி
பாபநாசம் - திருநெல்வேலி
கல்யாண தீர்த்தம் - திருநெல்வேலி
ஒகேனக்கல்தருமபுரி
சுருளிதேனி
திருமூர்த்திகோயம்புத்தூர்
கும்பக்கரை தேனி
 10.   தமிழகத்தின் முக்கிய நதிக்கரை நகரங்கள்:
மதுரைவைகை
திருச்சிகாவிரி
ஸ்ரீரங்கம்காவிரி மற்றும் கொள்ளிடம்
திருநெல்வேலிதாமிரபரணி
வேலூர் - பாலாறு

Friday, 21 June 2013

‘குரூப்-4’ தேர்வுக்கு ஒரு வாரத்தில் 2 லட்சம் பேர் விண்ணப்பம்

இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட, குரூப்-4 பணிகளுக்கு, அறிவிப்பு வெளியான ஒரு வாரத்தில், 2 லட்சம் பேர், விண்ணப்பித்துள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக அரசின், பல்வேறு துறைகளில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட, 5566 பணியிடங்களுக்கு, இம்மாதம், 14ம் தேதி, தேர்வு குறித்த அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது.  10ம் வகுப்பு முடித்தவர்கள், தேர்வாணைய இணையதளம் (www.tnpsc.gov.in) வழியாக, தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், போட்டித் தேர்வு, ஆகஸ்ட், 25ம் தேதி நடக்கும் என்றும், தேர்வாணையம் அறிவித்தது.

குறைந்த கல்வித் தகுதியில், நடக்கும் தேர்வு என்பதால், இந்த தேர்வை எழுத, பலரும் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். அறிவிப்பு வெளியான ஒரு வாரத்திற்குள், நேற்று வரை, 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, தேர்வாணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமும், 10 ஆயிரம் பேர் முதல் 20 ஆயிரம் பேர் வரை, விண்ணப்பிக்கின்றனர்.  ஜூலை 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  எனவே, குறைந்த பட்சம் 5 லட்சம் பேராவது, விண்ணப்பிப்பர் என, தேர்வாணையம் எதிர்பார்க்கிறது.

Thursday, 20 June 2013

பெருங்கோடீஸ்வரர்கள் உலகில் இந்தியாவிற்கு 2வது இடம்



உலகளவில், பெருகி வரும் பெருங் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை வளர்ச்சியில், இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.


சென்ற 2012ம் ஆண்டில், சர்வதேச அளவில், பெருஞ் சொத்து கொண்ட தனி நபர்கள் குறித்து, கேப் ஜெமினி மற்றும் ஆர்.பீ.சி வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் வெளியிட்ட ஆய்வறிக்கை:உலகளவில், மிகப் பெருங் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, 9.2 சதவீதம் அதிகரித்து, 1.20 கோடியாக உயர்ந்துள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு, சாதனை அளவாக, 10 சதவீதம் அதிகரித்து 46.20 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது.


வட அமெரிக்கா, மகா கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையிலும் (37.30 லட்சம்), தனி நபர் சொத்து மதிப்பு (12.70 லட்சம் கோடி டாலர்) வளர்ச்சியிலும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தை விஞ்சியுள்ளது.ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், மகா கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, 36.80 லட்சமாகவும், தனி நபர் சொத்து மதிப்பு, 12 லட்சம் கோடி டாலராகவும் உள்ளது.


ஆசிய பசிபிக் நாடுகளில், பெருங் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில், ஹாங்காங், 35.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, முதலிடத்தில் உள்ளது. இந்தியா, 22 சதவீதம் வளர்ச்சியுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.இந்தியாவில், பங்குச் சந்தை மூலதனம், நுகர்வு மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் காணப்பட்ட சாதகமான போக்கால், பெருங்கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை வளர்ச்சி அதிகரித்துள்ளது.