Friday, 14 June 2013

5,566 இடங்களை நிரப்ப குரூப்-4 ‌தேர்வு அறிவிப்பு


தமிழக அரசு பணியில், இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்தர், தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு, 5,566 ‌பேரை ‌தேர்வு ‌செய்ய, குரூப்4 ‌தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., ‌நேற்று அறிவித்தது.

தமிழக அரசின், பல்‌வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப, இந்த ‌போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி நிலையில், வரும், ஆகஸ்ட், 25ம்தேதி, தேர்வு நடக்கும். இதற்கு, 15ம் தேதி (இன்று)முதல், ஜூலை, 15 வரை, www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணைய தளத்தில், தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். 

குரூப்4 நிலையில், 5,000த்திற்கும் ‌மேற்பட்ட இடங்களை நிரப்ப நடத்தப்படும் தேர்வு என்பதால், 5 லட்சத்திற்கும் ‌மேற்பட்ட தேர்வர்கள், இந்த தேர்வை எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment