இளநிலை உதவியாளர்,
தட்டச்சர் உள்ளிட்ட, குரூப்-4 பணிகளுக்கு, அறிவிப்பு வெளியான ஒரு வாரத்தில், 2 லட்சம்
பேர், விண்ணப்பித்துள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக அரசின்,
பல்வேறு துறைகளில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட, 5566 பணியிடங்களுக்கு, இம்மாதம்,
14ம் தேதி, தேர்வு குறித்த அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. 10ம் வகுப்பு முடித்தவர்கள், தேர்வாணைய இணையதளம்
(www.tnpsc.gov.in) வழியாக, தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
என்றும், போட்டித் தேர்வு, ஆகஸ்ட், 25ம் தேதி நடக்கும் என்றும், தேர்வாணையம் அறிவித்தது.
குறைந்த கல்வித்
தகுதியில், நடக்கும் தேர்வு என்பதால், இந்த தேர்வை எழுத, பலரும் தீவிர ஆர்வம் காட்டி
வருகின்றனர். அறிவிப்பு வெளியான ஒரு வாரத்திற்குள், நேற்று வரை, 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக,
தேர்வாணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமும், 10 ஆயிரம்
பேர் முதல் 20 ஆயிரம் பேர் வரை, விண்ணப்பிக்கின்றனர். ஜூலை 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எனவே, குறைந்த பட்சம் 5 லட்சம் பேராவது, விண்ணப்பிப்பர்
என, தேர்வாணையம் எதிர்பார்க்கிறது.
No comments:
Post a Comment