Thursday, 28 February 2013

இயல் விருது - ஓர் எளிய அறிமுகம்!


இயல் விருது என்றால் என்ன?

இயல் விருது என்பது தமிழுக்கு ஒருவர் ஆற்றிய வாழ்நாள் சேவைக்காக வழங்கப்படும் விருதாகும். கனடிய தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசியக் கழகமும் இணைந்து இயல் விருதினை வழங்குகின்றனர். இவர்களுக்கு இயல் விருதுக் கேடயமும் பணமுடிப்பும் பரிசளிக்கப்படுகின்றது.

யாரெல்லாம் இதுவரை பெற்றிருக்கிறார்கள்?

2001 - சுந்தர ராமசாமி
2002 - கே. கணேஷ்
2003 - வெங்கட் சாமிநாதன்
2004 - இ. பத்மநாப ஐயர்
2005 - ஜோர்ஜ் எல். ஹார்ட்
2006 - ஏ. சி. தாசீசியஸ்
2007 - லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம்
2008 - அம்பை
2009 - கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன்
2010 - எஸ். பொன்னுத்துரை
2011 - எஸ். ராமகிருஷ்ணன்

TNPSC குரூப்-1 பணிகள்கவுன்சலிங் மூலம் நியமனம் எப்படி?


அரசுப் பணிகளில் குரூப்-1 பதவிகளில் இருக்கும் காலி இடங்களில் தங்களுக்கு விருப்பமான பணிகளைத் தேர்வு செய்துகொள்ளும் முறையை முதன் முதலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக பணிகளை ஒதுக்கீடு செய்ய இந்த முறை உதவும் என்கிறார்கள் இந்தப் புதிய முறை மூலம் வேலைவாய்ப்புப் பெற்றவர்கள்.

ப்-கலெக்டர், மாவட்டப் பதிவாளர், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர், வணிக வரித் துறை துணை ஆணையாளர், ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர், தீத்தடுப்பு மற்றும் மீட்புத்துறை மண்டல அதிகாரி ஆகிய பணிகளில் உள்ள 131 காலியிடங்களை நிரப்புவதற்கு தகுதியுடையவர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு செய்தது. தேர்வு செய்யப்பட்டவர்களின் மதிப்பெண்கள், விருப்பம், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் இறுதிப் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு முதல் முறையாக குரூப்-1 பணிகளுக்கு நியமனம் செய்வதற்கு கவுன்சலிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி. தேர்வு செய்யப் பட்டவர்கள் ரேங்க் பட்டியல் அடிப்படையில் கவுன்சலிங்கிற்கு அழைக்கப்படுவார்கள். அப்போது அவர்கள், இருக்கின்ற காலி இடங்களில் தங்களுக்கு விருப்பமான பணியை தேர்வு செய்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

“எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல், வெளிப்படையாகப் பணிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதற்காக குரூப்-1 தேர்விலும் கவுன்சலிங் முறையை அறிமுகப்படுத்துகிறோம். பழைய முறையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, அவர்கள் விரும்பாத பதவியோ அல்லது அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட பதவியோ ஒதுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், தற்போது கவுன்சலிங் மூலம் பணி நியமனம் நடைபெறுவதால் தங்களுக்கு விருப்பமான பதவியைத் தேர்வு செய்து திருப்தியாக பணியை மேற்கொள்ளலாம்” என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் மா. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

எழுத்துத் தேர்வில் தகுதி பெற்று, நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் கவுன்சலிங் நடைபெற்றது. ரேங்க்படி அழைக்கப்பட்டவர்கள், தங்களது விருப்பப்படி பணிகளைத் தேர்வு செய்தனர். அவர்களுக்கு பணி நியமன ஆணையை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நட்ராஜ் வழங்கினார்.

 “பல கட்டங்களாக நடைபெற்ற தேர்வில், தகுதியுள்ளோர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. குரூப் - 1 தேர்வுக்கு கவுன்சலிங் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது இதுவே முதன்முறை. முற்றிலும் வெளிப்படையான முறையில் கவுன்சலிங் நடைபெற்றுள்ளது. இதன்படி, குரூப் - 1 தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களுக்கு இந்தெந்தப் பணிகளில் பணிபுரிய வாய்ப்புள்ளது என்று கூறுவோம். தாங்கள் விரும்பும் பணியை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதில் 56 பேர் உதவி கலெக்டர்களாகப் பணி நியமன ஆணை பெற்றுள்ளனர். பல்வேறு பணிகளில் நியமிக்கப்பட்டவர்கள், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அயராது பாடுபடவேண்டும்” என்று அவர் வாழ்த்தினார்.

680க்கு 451 மதிப்பெண்கள் பெற்று ரேங்க் பட்டியலில் முதலிடம் பெற்ற திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னகாம்பட்டி புதூரைச் சேர்ந்த எஸ். மதுராந்தகி, “கவுன்சலிங்கில் எனக்குப் பிடித்த சப்-கலெக்டர் பணியைத் தேர்ந்தெடுத்தேன்” என்கிறார் மகிழ்ச்சியுடன்.

“தற்போது நாம் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் கவுன்சலிங் முறையில் பணி நியமனம் நடைபெறுவதால், எனக்குப் பிடித்த சப்-கலெக்டர் பணியே கிடைத்துள்ளது” என்கிறார், நான்காம் இடம் பெற்றுள்ள சுபா நந்தினி.

“கவுன்சலிங் நடைபெற்றபோது என்னென்ன பணிகளில் எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என்பது பற்றிய தகவல்கள் புரஜக்டரில் காட்டப்பட்டன. நான் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில், எந்தந்தெந்தப் பணிகளில் சேரலாம் என்பதைத் தெரிவித்தார்கள். இதில் எனக்குப் பிடித்த மாவட்டப் பதிவாளர் பணியைத் தேர்ந்தெடுத்தேன்” என்கிறார், விழுப்புரத்தைச் சேர்ந்த கமலாதேவி. இவர், பி.இ. பட்டதாரி. சென்னையில் தங்கியிருந்து குரூப் – 1 தேர்வுக்குத் தயாராகி வந்தார். இவரது தந்தையார், சத்துணவுப் பொறுப்பாளராகப் பணியாற்றுகிறார். தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் ஹாஸ்டலில் தங்கிப் படித்து வந்ததாகக் கூறுகிறார்.

“கவுன்சலிங் முறையில் பணி நியமன ஆணை வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது. முன்பெல்லாம்,  இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து ஒரு கடிதம் மட்டுமே அனுப்புவார்கள். தற்போது டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கே நேரில் அழைத்து, புரஜெக்டரில் பணிகளின் நிலவரத்தை அறிந்துகொள்ளும்படிச் செய்திருக்கிறார்கள். நாம் பெற்றுள்ள மதிப்பெண்களுக்கேற்ப, நமக்கு உரிய பணிகள் இவையிவை என்று சொல்கிறார்கள். அதிலிருந்து நமது விருப்பம்போலப் பணிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில், கவுன்சலிங் மிகவும் வெளிப்படையாக இருந்தது” என்கிறார்  திருவாரூரைச் சேர்ந்த முத்து மீனாட்சி.

குரூப் - 1 தேர்வில் 398.50 மதிப்பெண்கள் பெற்று, சப்-கலெக்டராகப் பணி ஆணை பெற்றிருக்கிறார் இவர். எம்.சி.ஏ., எம்.பில் பட்டதாரியான இவர், இதற்கு முன்பே குரூப் -1 தேர்வு எழுதி தற்போது, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். நிர்வாகப் பணியில் வேலைவாய்ப்புப் பெற வேண்டும் என்ற லட்சியத்தால், மீண்டும் இத்தேர்வு எழுதி, தற்போது சப்-கலெக்டராகி இருக்கிறார்.

நன்றி: புதிய தலைமுறை

Sunday, 24 February 2013

சோடியத்தின் கதை!


சோடியத்தின் கதை!

சோடியம் ஒரு தனிமம் ஆகும். இதன் குறியீடு Na. இதன் அணு எண்11. இது மென்மையான, வெண்ணிறமான தனிமம் ஆகும். சோடியம் மிகுந்த வினைத்திறன் கொண்ட தனிமம். இது காற்றில் விரைவில் ஆக்ஸிஜனேற்றம் அடைகிறது. எனவே இதைத் தடுக்க மந்தமான சூழலில் குறிப்பாக மண்ணெய்க்குள் வைக்கப் படுகிறது. சோடியம்கடலில் சோடியம் குளோரைடு என்னும் சேர்மமாக அதிக அளவில் கிடைக்கிறது. இது விலங்கினங்களுக்கு தேவையான ஒரு முக்கியக்கனிமம் ஆகும். பூமியின் மேலோட்டுப் பகுதியில் கிடைக்கக் கூடிய
தனிமங்களுள் ஆக்சிஜன், சிலிகான், அலுமினியம், இரும்பு,கால்சியத்திற்கு அடுத்து சோடியம் ஆறாவது செழுமை மிக்க தனிமமாக உள்ளது. நிறையின் அடிப்படையில் 2.83 விழுக்காடு சோடியமாகும். இயற்கையில் சோடியம் ஒருபோதும் தனித்துக் காணப்படுவதில்லை. உப்புக்களாகவே கிடைக்கின்றது. உப்புப் பாறையாக பூமியில் பல இடங்களில் கிடைக்கிறது. பல உப்பு நீர் ஏரிகளிலும், சுனை, ஊற்றுக்களிலும் கூட சோடியம் குளோரைடு மிகுதியாகக் கரைந்திருக்கிறது.
கண்டு பிடிப்பு
1807 ல் இங்கிலாந்து நாட்டின் சர் ஹம்பிரி டேவி என்பார் சோடியத்தைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டார். தெவிட்டிய கரைசலில் நீர், உப்பின் சிதைவைத் தடை செய்கிறது என்பதால் மூலப் பொருள் இருந்தும் அதைப் பகுக்க முடிவதில்லை. இதனால் டேவி முதலில் நீர் மூலக்கூறு சோடாவை உருக்கி சோடியம் ஹைட்ராக்சைடைப் பெற்று, அதிலிருந்து மின்னாற் பகுப்பு மூலம் சோடியத்தைப் பிரித்தெடுத்தார். சோடியம் குளோரைடை எளிதில் உருக்குவதற்கு அதனுடன் 50 விழுக்காடு கால்சியம் குளோரைடையும் சேர்த்து, செங்கல் வரியிட்ட இரும்புத் தொட்டியில் மின்னாற் பகுப்பு மூலம் சோடியத்தைப் பெறமுடியும். சோடியம் குளோரைடின் உருகு நிலை 1077 K (804ºC),கால்சியம் குளோரைடைச் சேர்ப்பதால் கலவை 853 K (580ºC) வெப்ப நிலையிலேயே உருகி விடுகிறது.
இலத்தீன் மொழியில் நாட்ரியம் என்பது ஆங்கிலத்தில் சோடாவானது. சோடாவிலிருந்து பெறப் பட்டதால் இது சோடியம் என்ற பெயர் பெற்றது. இதன் வேதிக் குறியீடு Na ஆகும். சோடியம் புதியதாக இருக்கும் போது மென்மையாகவும், மெழுகு போன்ற தோற்றமும், வெள்ளி போன்று பளபளப்பும் கொண்ட திண்மமாக இருக்கிறது. ஆனால் காற்று வெளியில் ஆக்சிஜனேற்றம் பெற்று ஓர் ஆக்சைடு படலம் அதன் மீது படிந்து அதன் பொலிவை மங்கச் செய்து விடுகிறது.சோடியம் வறண்ட காற்று வெளியில் மிதமான வெப்ப நிலையில் நிலையானது. ஆனால் காற்றை 120 டிகிரி செ. வெப்ப நிலைக்குச் சூடு படுத்தும் போது சோடியம் தீப்பற்றிக் கொள்கிறது.
பண்புகள்
சோடியம், நீரோடு தீவிரமாக வினை புரிந்து தீயையும், வெடிச் சத்தத்தையும் எழுப்புகின்றது. இதனால் சோடியத்தால் ஏற்படும் தீ விபத்துகளுக்கு நீர் பாதுகாப்பளிப்பதில்லை. இதற்கு உலர் உப்புத் தூள், உலர் சோடா, உலர் கிராபைட் தூள் போன்றவற்றை நீருக்குப் பதிலாகப் பயன்படுத்துகிறார்கள். ஈரக் காற்று வெளியிலோ நீரிலோ சோடியம் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதால் சோடியத்தை பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் அல்லது பென்சீன் போன்ற ஆக்சிஜனற்ற நீர்மங்களில் அமிழ்த்தி வைத்திருப்பார்கள். சோடியம் ஒரு சிறந்த வெப்பக் கடத்தியாகும். இதன் வெப்ப ஏற்புத்திறன் நீரின் மதிப்பில் ஏறக்குறைய 3 ல் 1 பங்கு. இப் பண்பு சோடியத்தை அணு உலைகளில் ஒரு குளிர்விப்பானாக பயன்படுத்த ஏற்புடையதாயிருக்கிறது. இதன் அணு எண் 11, அணு நிறை 22.99, அடர்த்தி 970 கிகி /கமீ. உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 370.9 K (98ºC), 1156 K (883ºC) ஆகும். இது ஒரு கார உலோகமாகும். இதன் இணை திறன் 1 ஆக உள்ளது.

பயன்கள்

கரிம வினைகளில் சோடியம் செரிவித்தலுக்கும், தொகுப்பாக்கத்திற்கும் ஆக்சிஜனிறக்கத்திற்கும் பயன் படுகிறது. பெட்ரோல் என்ஜின்களில் இயக்கத் திறனைச் செம்மைப்படுத்த உதவும் டெட்ரா ஈதைல் ஈயம் என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்யும் வழி முறையில் சோடியம் பெரும் பங்கேற்றுள்ளது.[9]சோடியம் தந்த பயன்களுள் மற்றொன்று சோடிய ஆவி விளக்காகும். சோடிய ஒளி ஒற்றை நிறங்கொண்டது. சோடியத்தின் மஞ்சள் நிற ஒளி, காற்றின் ஈரத்தாலும், மூடுபனியாலும் குறைவாகவே உள்ளுறிஞ்சப் படுவதால் நெடுந் தொலைவு ஒளி பரவுகிறது. இதனால் குளிர் மிகுந்த இரவிலும், பனிமழை பெய்யும் காலங்களிலும் சோடிய ஒளியால் தெருக்களைத் தெளிவாகப் பார்க்க முடியும்.[10] சோடிய ஒளி விளக்குகள் சோதனைக் கூடங்களில் ஒருபடித்தர விளக்காகக் கொள்ளப்பட்டுள்ளது. சோடியம் ஒளி மின் விளைவினால் ஒளி மின் எலெக்ட்ரான்களை உமிழ்கிறது. சோடியம் கட்புலனறி ஒளிக்கு மட்டுமின்றி புறஊதாக் கதிர்களுக்கும் ஒளி மின் எலெக்ட்ரான்களை உமிழ்வதால், இது ஒளியியல் கருவிகளில் ஒளிச் செறிவை மதிப்பிடப் பயன்படுகிறது. சோடியமும் பாதரசமும் சேர்ந்த இராசக் கலவை ஆக்சிஜனிறக்க ஊக்கியாகப் பயன்படுகிறது. இதை நீரோடு சேர்க்கும் போது உடனடியாக ஹைட்ரஜனை வெளிப்படுத்துகிறது. இப்பண்பு டைட்டானியம், ஸிர்கோனியம் போன்றவற்றை அவற்றின் டெட்ரா குளோரைடுகளிலிருந்து பிரித்தெடுக்க உறுதுணையாக விளங்குகிறது.