QUESTIONS:
1 வளிமண்டலத்தின் மாறா வெப்பநிலை மாற்றத்திற்குக் காரணம் என்ன?
2 வரைபடத்தில் கோடுகள், மலை அல்லது சரிவை காட்டும் வடிவத்தை காட்டும் வகையில் நிழற்கோடிடுதலின் பெயர் என்ன?
3 எந்த நிலையான உயிரினம் வாழும் பகுதி மிகச் சிறிய வளர்ச்சிப் பருவத்தைக் கொண்டது?
4 இந்தியாவின் வட சமநிலங்களுக்குக் கால்வாய் பாசனம் மிக முக்கியமானது. ஏனெனில்?
5.பெரும்பான்மையான நிலக்கரிக் காப்புகள் உருவான கார்போனிஃபெரஸ்óகாலம் எந்த சகாப்தத்தைச் சார்ந்தது?
6. பூமியின் நடுப்பகுதி எவற்றின் கலவையால் ஆனது?
7. இடியுடன் கூடிய மலையின் வளர்ச்சியடைந்த நிலையில் நிகழ்வது?
8. நிலநடுக்கோட்டிலிருந்து துருவமுனைக்கு வீசும் மேற்பரப்பு காற்றின் உலகளாவியத் தோரணி?
9. சிலீ மற்றும் பெருவின் கடற்கரையில் பாயும் குளிர் நீரோட்டத்தின் பெயர் என்ன?
10. இந்திய உபகண்டத்தில் அயனமண்டலச் சூறாவளியால் அடிக்கடி பாதிக்கப்படும் பகுதி எது?
11. இந்திய காலனித்துவக் காலத்தில் வந்த இல்பர்ட் மசோதா, 1883-ன் நோக்கம் என்ன?
12. மன்னராட்சிக்குட்பட்ட மாநிலங்களை இந்திய அரசாங்கச் சட்டம், 1935-ன் படி கூட்டினை ஆட்சியில் கொண்டுவருவதற்கு ஆங்கிலேயர்களின் உண்மையான நோக்கம் என்ன?
13. குன்வர்சிங்,1857 கிளர்ச்சியின் ஒரு தலைவர், எந்தப் பகுதியைச் சார்ந்தவர்?
14. பிரிட்டிஷ் பாராளுமன்றம் எப்போது இந்திய சுதந்திர சட்டத்தைக் கொண்டு வந்தது?
15. அஷ்டதிக்கஜாஸ் என்பவர்கள் கிருஷ்ண தேவராயரின் அவையில் இருந்த?
16. ஷெர்ஷாவின் வருவாய் முறைப்படி (முல்தான் தவிர்த்து) அரசின் பங்கு என்ன?
17. இந்தியாவில் எப்போது முதல் பொதுத் தேர்தல் நடந்தது?
18. பல்லவர் காலத்தில் ‘ஆட்சி’ என்பது?
19.எந்த பட்டயச் சட்டத்தின் மூலம் கல்விக்காக ரூ.1 லட்சம் ஒதுக்கப்பட்டது?
20. வங்காள பத்திரிக்கை, சம்வத் குமதி என்பதன் நிறுவனர் மற்றும் பதிப்பாசிரியர் யார்?
21. மொத்த இரும்புத் தாது தயாரிப்பில் 85% இந்தியாவின் எந்த பகுதியிலிருந்து வருகிறது?
22. தட்டையான கடல் மலைகளை என்னவென்று அழைப்பார்கள்?
23. இடப்பெயர்ச்சி முறைப் பயிரிடுகையின் இன்றியமையா கூறுபாடு?
24. டோடா குலத்தின் இயற்க்கை வசிப்பிடம்?
25. வானாய்வு சங்கம் அமைந்துள்ள பகுதி?
26. புவியின் மிகப்பரந்த சூழ்தொகுதி?
27. சுழற்சி இயக்கங்களிலேயே மிக எளிமையானது?
28. கடலில் மிதக்கக்கூடிய மிக நுண்ணிய உயிரினங்களை
________ என்கிறோம்?
29. வெபரின் தொழிலக அமைவிட கோட்பாடு எந்த அமைப்பை அடிப்படையாகக் கொண்டு விளக்கப்பட்டுள்ளது?
30. உலகின் மொத்த நிலப்பரப்பில்
______ விழுக்காடு ஆற்று வடினிலங்களாக உள்ளன?
31. ‘ஆரியன்’ என்ற பதம் குறிப்பிடுவது?
32. பழங்கால நகரமான தட்சசீலம் எந்த இரு நதிகளுக்கு இடையே அமைந்துள்ளது?
33. தென்னிந்திய வரலாற்றில் ஒரு தொடர்ச்சியான முக்கியத்துவத்தை காணும்போது பெரிய பேரரசுகள் தோன்றுவதை காட்டிலும் பிராந்திய அளவில் சிறிய அரசுகளே தோன்றியது அதற்கான காரணம்?
34. எண்மார்க்க வழி என்ற கோட்பாடு உள்ளடக்கி இருப்பது?
35. கிரேக்கத்திலிருந்து வருகைபுரிந்த ஏராளமானோரில் குஷாணர்கள் சாகர்கள் போன்றோர் இந்து சமயத்தை தழுவுவதை காட்டிலும் புத்த மதத்தை தழுவினர். ஏனெனில்?
36. பண்டைய இந்திய நாடகமான விசாகத்தரின் முத்திரராக்ஷஷம் கூற விழைவது?
37. அசோகரின் பெரும்பாறை கல்வெட்டுகள் சங்ககால அரசுகள் பற்றி குறிப்பிடுகிறது. அப்பாறை கல்வெட்டுகள் எவை?
38. செங்கிஸ்கான் தலைமையில் மங்கோலியர்கள் இந்தியாவின் மீது படையெடுத்தபோது ஆட்சி செய்த ஆட்சியாளர் யார்?
39. இந்தியாவில் புகழ்மிக்க மிகப்பெரிய கால்வாய் இணைப்புகளை ஏற்படுத்திய டெல்லி சுல்தான்?
40. எந்த முகலாய பேரரசர் காலத்தில் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி தனது முதல் பண்டகசாலையை அமைத்தது?
41. பனிப்பந்து என அழைக்கப்படும் கோள்?
42. புவி ஓட்டிற்கு கீழே இருக்கும் பாறை குழம்பு?
43. உறைபனி காலநிலை என்பது?
44. நிலவின் மறுபக்கத்தை 1959 ஆம் ஆண்டு படம் பிடித்த செயற்கைகோள்?
45. அந்தமானில் உள்ள பேரன் என்ற எரிமலைக்கு எடுத்துக்காட்டு?
46. மேற்கு இராஜஸ்தான் பாலைவனமாகவே இருக்கிறது. ஏனெனில்?
47. தமிழ்நாட்டில் முதல் அணுமின் நிலையம் அமைந்துள்ள இடம்?
48. பாங்கியாவின் பெரிய தட்டுக்கள் மற்றும் சிறிய தட்டுகள் சரியாக பொருந்தியுள்ளவை எவை?
49. இரவும் பகலும் ஒரே நிலையில் ஏற்படும் நாட்கள்?
50.
100 செ.மீ. மழை பெய்யும் காடுகளிலுள்ள மரங்கள்?
51. இந்திய வரலாற்றில் அப்துல் ஹமீது லோகிரி என்பவை யார்?
52. தர்மத் யுத்தம் எந்த இருவருக்கிடையே நடைபெற்றது?
53. மைசூரில் ராஜா உடையார் அரசை ஏற்படுத்திய போது விஜய நகர பேரரசின் ஆட்சியாளர் யார்?
54. முஸ்லீம் சமூகமானது சமயசார்பின்மையை பின்பற்றிய காரணத்தால் ஒரு ஆட்சியாளரை ’ஜகத்குரு’ என பாராட்டப்பட்டவர்?
55. இந்திய ஆட்சியாளர்களில் நவீன முறையில் அயல்நாட்டு தூதரங்களை நிறுவியவர் யார்?
56. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கட்டிய முதல் கோட்தை எது?
57. ஆங்கில நபர்களில் பகவத் கீதையை ஆங்கிலத்தில் முதன் முதலில் மொழிபெயர்த்தவர் யார்?
58. ரெளலட் சட்டம் இயற்றப்பட்ட போது இந்திய வைசிராயாக இருந்தவர் யார்?
59. காளிதாசரின் மாலவிக்காகினி மித்திரத்தின் கதாநாயகன் அக்னிமித்திரன் எந்த அரச வம்சத்தை சார்ந்தவன்?
60. இந்துஸ்தான் குடியரசு அஸோசியேசன் தொடங்கப் பட்டதன் நோக்கம்?
61. மேலகிரி மலை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
62. இந்திய விண்வெளிக் கழகம் மூலம் ஏவப்படாத ஓடம் எது?
63. இந்தியாவிலுள்ள மிக முக்கியமான வாணியக் காடுகள் எங்கு உள்ளன?
64. படிம ஆய்வின் போது மிக முக்கியமானதாக கருதப்படாத படிமத்துகள்?
65. நிலநடுக்கோட்டிற்கு 5 வடக்கு மற்றும் 5 தெற்கில் உள்ள மண்டலத்தின் பெயர்?
66. பில்ஸ் என்னும் ஆதிவாசிகள் வசிக்கும் மலை தொடர்கள்?
67. எந்த மாநிலத்தில் உள்நாட்டு மீன்பிடிப்பை விட கடல்மீன் குறைவாக உள்ளது?
68. ஸ்பிரிங் ஓதம் என்பது?
69. லாஸ் ஏஞ்சலுக்கும், மாஸ்கோவுக்கும் இடையே உள்ள மிகக் குறைவான வான்வழி?
70. நில அமைவிட தொகுப்பு என்பது?
ANSWERS:
1.காற்றின் பெருக்கம் மற்றும் சுருக்கம்
2.மலைக்குறிக்கோடு
3.துந்துருவம்
4.பாசனங்களின் மூலாதாரம் வற்றா ஆறுகள்.
5. முதல் ஊழி
6. இரும்பு மற்றும் நிக்கல்.
7. வலிமையான மேல் எழும்பும் வளி மற்றும் கீழ் எழும்பும் வளி.
8. அமைதி மண்டலம் - வணிகக் காற்று - மேற்க்கத்திய காற்று - கீழ்க்கதிய காற்று.
9. ஹம்போல்ட்
10. கொங்கன் கரை
11. நீதிமன்றங்களின் குற்றவியல் ஆட்சி எல்லைப் பொறுத்தவரை இந்தியர்களையும் ஐரோப்பியைகளையும் இணையாகக் கொண்டுவர.
12. ஏகாதிபத்திய கோட்பாட்டுக்கு எதிரான இந்திய தலைவர்களுக்கு சமமான பலத்தை ஏற்படுத்த இளவரசர்களை பயன்படுத்துதல்.
13. பீகார்.
14. ஜூலை 18, 1947.
15. கவிஞர்கள்
16. உற்பத்தியில் 1/3 பங்கு.
17.1952
18.பாரம்பரிய சட்டங்கள் மற்றும் நடைமுறைகள், வழக்கை விசாரிக்கும் தாள்கள் மற்றும் ஓலை சுவடிகள், சம்பத்திற்கான நேரடி சாட்சி.
19.
1813ம் வருட பட்டயச் சட்டம்.
20. ராம்மோகன் ராய்.
21. கர்நாடகா மற்றும் ஒடிஷா
22. கயொட்ஸ்
23. வயல் மாற்று முறை
24. நீலகிரி மலைத் தொடர்.
25. கொல்கத்தா
26. வாயுக்கோளம்
27. பாஸ்பரஸ் கழற்சி
28. பிளாங்டன்
29. முக்கோணம்.
30.
60
31. ஒரு மொழியை பேசும் குழு.
32. சிந்து மற்றும் ஜூலம்.
33. மிக பரந்த வளமான நிலபரப்பு இல்லமை.
34. தர்ம சக்ர பிரவர்த்தன சுத்தா.
35. புத்த சமயம் இந்திய சமூகம் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அதன் பங்களிப்பை செய்து வந்தது.
36. சந்திரகுப்த மெளரியர் காலத்தில் அரசவையில் ஏற்பட்ட சதிவேலைகள் பற்றியது.
37.
II மற்றும் X.
38. இல்டுமிஷ்.
39. பெர்ரோஸ் துக்ளக்.
40. ஜஹாங்கீர்.
41. புளூட்டோ.
42. மாக்மா.
43. உறைதலால் பாறைகள் தூளாவதாகும்.
44. லூனார் 3.
45. இயங்கும் எரிமலை.
46.தென்மேற்கு பருவக்காற்று ஆரவல்லி குன்றுகளுக்கு இணையாக வீசுகின்றது.
47. கூடங்குளம்.
48. ஆஸ்திரேலியா - அரபிக்கடல்.
49. மார்ச் 21, செப்டம்பர் 23.
50. சால் மற்றும் தேக்கு.
51. ஷாஜகான் ஆட்சிகாலத்தின் அரசவையின் வரலாற்று ஆசிரியர்.
52.ஒளரங்கசீப் மற்றும் தாராசிகோ.
53. இரண்டாம் வேங்கடா.
54. இப்ராஹீம் அடில்ஷா.
55. திப்பு சுல்தான்.
56. புனித ஜார்ஜ் கோட்டை.
57. சார்லஸ் வில்கின்ஸ்.
58. ஜேம்ஸ்போர்டு பிரபு.
59. சுங்க வம்சம்.
60. இந்துஸ்தானத்தில் குடியாட்சி அரசை அமைக்க
61. கிருஷ்ணகிரி.
62. ஹெச்.எஸ்.எல்.வி
63. வெப்பமண்டல
இலையுதிர் காடுகள்.
64. எனர்ஜி.
65. பூமத்தியரேகை
மண்டலம்.
66. சாத்புராஸ்.
67. மேற்கு வங்காளம்.
68. மிக உயர்ந்த உயர்
ஓதம், மிகத்தாழ்ந்த தாழ் ஓதம்.
69. வடதுருவம்.
70. 6 வட்டப் பாதைகளில்
ஒவ்வொன்றிலும் நான்கு துணைக்கோள்கள்.
No comments:
Post a Comment