அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய, புதுப்பிக்க இப்போது நீங்கள் கால்கடுக்க காத்திருக்கவேண்டியதில்லை. தமிழக அரசின் வேலைவாய்ப்பு அலுவலகங்களின் இணையதளத்தின் மூலமே உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள இயலும். இணையதள முகவரி www.tnvelaivaaippu.gov.in
ஆன்லைனில் பதிவு செய்யும் முறை :
1. ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ?
இணையதளத்திலுள்ள படிவத்தில் விவரங்களை நிரப்பி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து
படிவத்தில் விண்ணப்பித்தவுடன் ஒரு தற்காலிக பயனாளி அடையாளம் மற்றும்
ஏற்புச்சொல் வரும். தங்கள் விண்ணப்பத்தின் விவரங்கள் சரியானவை எனில் 7
நாட்களுக்குள் விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கப்படும். பதிவு
அடையாள அட்டையே தாங்களே உருவாக்கி, தாங்களே அச்சிட்டு வெளியே எடுத்துக்
கொள்ளலாம்.
2. கூடுதல் பதிவு செய்வது எப்படி ?
ஆன்லைன் கூடுதல் தகுதிகள் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். தங்கள்
கோரிக்கையை வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்றபின் புதிய அடையாள அட்டையை
எடுக்கலாம்.
3. ஆன்லைனில் புதுப்பிக்க இயலுமா ?
ஆம். ஆன்லைனில் புதுப்பிக்கலாம். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதிவான
மாதத்திலும் தொடர்ந்து வரும் இரு மாதங்களுக்குள்ளும் புதுப்பிக்கலாம்.
வரையறுக்கப்பட்டுள்ள காலத்தே புதுப்பிக்காதவர்கள் 18 மாதச் சலுகையில்
புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்.
4. விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, மறுக்கப்பட்டதா ? என்பதை எப்படி அறிவது ?
தற்காலிகப் பதிவு எண்ணை "பயன்படுத்துவோர் அடையாளமாகவும்" (username),
பிறந்த தேதியை, எற்புச் சொல்லாகவும் (password) பயன்படுத்தி, பதிவின்
நிலையை அறியலாம்
5. ஆன்லைனில் முகவரி மாற்ற முடியுமா ?
ஆம். பதிவு செய்தவர்கள் தாங்களே முகவரியை மாற்றிக் கொள்ளலாம்
6. ஆன்லைனில் முன்னுரிமைச் சான்றினை (priority certificate) பதிய இயலுமா ?
முன்னுரிமைச் சான்றுகள், எடுத்துக்காட்டாக, நில எடுப்பு பாதிப்புச்சான்று
(land acquisition) போன்றவற்றில் மெய்த்தன்மை உறுதி செய்யப்படவேண்டும்.
எனவே, எவ்வகை முன்னுரிமைச் சான்றுகளையும் ஆன்லைனில் பதிய இயலாது. சான்றின்
நகல்களை விண்ணப்பத்துடன் அஞ்சலில்/நேரில் வேலைவாய்ப்பகத்திற்கு அனுப்ப
வேண்டும்.
7. இத்தளத்தில் பதிவு செய்ய தகுதியானவர் யார் ?
இத்தளத்தில் தமிழ்நாட்டில் வசித்து வருபவர் பதியலாம்.
8. இத்தளம் மூலம் பணி நாடுவோர்களுக்கு உள்ள வசதிகள் யாவை ?
நேரில் பதிவு, நேரில் பதிவு புதுப்பித்தல், தகுதிகள் அதிகப்படுத்தல்,
அனுப்பப்பட்ட பதிவுக்கான பதிவட்டை எடுத்தல், வேலைவாய்ப்பு விவரங்கள்,
பல்வேறு தகுதிகளுக்கான பரிந்துரை வரம்புகள் அளித்தல் ஆகியவை உள்ளன.
No comments:
Post a Comment